கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொறியியல் நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம் (Engineering - Lateral entry Admission - Application from 10-08-2021)...



 பொறியியல் நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம்...


தமிழகத்தில் பொறியியல் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர விரும்பும் B.Sc., உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் ஆகஸ்ட் 10 முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து அனைத்து கல்லூரிகளிலும் Online மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் படி ஜூலை 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.



கலை, அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்ல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பொறியியல் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டய படிப்பு (Diploma) மற்றும் பட்ட படிப்பு (பிஎஸ்சி) போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் நேரடி 2ம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10 முதல் 30ம் தேதி வரை  www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in  என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



பதிவு கட்டணத்தை மாணவர்கள் இணைய வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும். இணையம் மூலம் செலுத்த முடியாதவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் மூலம் வரைவோலையை சமர்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது. விண்ணப்ப பதிவுகள் முடிந்த பிறகு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். மேலும் பொறியியல் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04565-230801, 04565-224528 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...