கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-12-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.12.21

   திருக்குறள் :


பால்: பொருட்பால் 


இயல்: அரணியல் 


அதிகாரம்: நாடு 


குறள் எண்: 734 


குறள்: 

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 

சேரா தியல்வது நாடு. 


பொருள்: மிகுந்த பசித்துயரும், ஓயாத நோயும், அறிவினை உண்டாக்கும் பகையும் வந்து சேராமல் இருப்பதே வளம் மிக்க நாடாகும்.


பழமொழி :

A stitch in time saves nine


வருமுன் காத்தல் சாலவும் நன்று



இரண்டொழுக்க பண்புகள் :


1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 


2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.


பொன்மொழி :


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.


அன்னை தெரசா:



பொது அறிவு :


1. கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?


 கால்சியம் ஹைட்ராக்சைடு. 


2. மீன்கள் இல்லாத ஆறு எது? 


ஜோர்டான் ஆறு.



English words & meanings :


Feel blue - feeling sad, சோகமாக உணர்தல், 


golden opportunity - a good chance to do something, எதிர்பாராத வகையில் கிடைத்த வாய்ப்பு



ஆரோக்ய வாழ்வு :


வறட்டு இருமல் நீங்க சில டிப்ஸ்



1)பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.


2)ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.


3)தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


4)கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள வலி நிவாரண பண்புகள், தொண்டைச் சுவற்றில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும். அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.


5)யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.


கணினி யுகம் :

Ctrl + shift + E - Create new folder. 

Ctrl + shift + F - Change font



டிசம்பர் 06

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்


பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]


நீதிக்கதை


நன்றி மறவா நண்பர்கள்

கதை :

ராமுவும், சோமுவும் ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது. 


அப்பொழுது தண்ணீர் குடிப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது ராமு, சோமுவை அடித்துவிட்டான். சோமு அழுது கொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான். 


தொடர்ந்து அதே வழியில் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ராமு தவறி விழப்போனான். அப்பொழுது சோமு தனது உயிரையும் பொருட்படுத்தாது ராமுவை காப்பாற்றினான். 


அதைப் பார்த்த சோமு அருகில் இருந்த ஒரு பாறையில் என் நண்பண் என்னைக் காப்பாற்றினான் என்று செதுக்கி வைத்தான். 


நீதி :

ஒருவர் செய்த நன்றியை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளவும்.

இன்றைய செய்திகள்


06.12.21


# வலுவிழந்த ஜவாத்  புயல்,  அபாய கட்டத்தை தாண்டிய ஆந்திரா ஒடிசா மாநிலங்கள்


 # ராமநாதபுரம் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் கலந்த வைகை ஆற்று உபரி நீர்.


#வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


# ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பைக்கு 3-வது வெற்றி.


# உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன்: தென் கொரிய வீராங்கனை ஆன் சியங், 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

  

# உலக இறுதி சுற்று பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம்  வென்றுள்ளார்


Today's Headlines


 * Odisha, West Bengal and Andhra Pradesh breathed a sigh of relief as cyclonic storm Jawad weakened into a deep depression before reaching the east coast.


* After 10 years Vaikai flow into Ocean near Ramnad. 


* Due to top layer Atmospheric cycle Tirunelveli, Tuticorin, Ramnad and Kanyakumari districts may get rain with thunderstorm .


* ISL Football : Mumbai won 3rd time 


* World Tour Badminton Finals: South Korean Player Ann Siyank won by 21-16 & 21-12 sets. 


* World tour final badminton India's PVSindhu won Silver medal

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...