கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-12-2021 - வியாழன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.12.21

திருக்குறள் :

பால்: பொருட்பால்


இயல்: அமைச்சியல்


அதிகாரம்: அவை அஞ்சாமை


குறள் எண்: 722


குறள்: 

கற்றாருள் கற்றார் எனப்படுபவர் கற்றான்முன்

கற்ற செலச்சொல்லு வார்.


பொருள்: கற்றறிந்த கருத்துகளைக் கற்றவர் நிறைந்த சபையில் அவர்கள் விரும்பிக் கேட்கும் வண்ணம் சொல்லக்கூடியவர்கள் சிறப்பாகக் கற்றவர் ஆவர்.


பழமொழி :

When at rome do as romens do 

ஊரோடு ஒத்துவாழ்,  



இரண்டொழுக்க பண்புகள் :


1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 


2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.


பொன்மொழி:


கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.------ புத்தர்



பொது அறிவு :


1. உலகின் மிகப் பழைமையான மலைத்தொடர் எது? 


ஆரவல்லி மலைத்தொடர்.


 2. உலக வரலாற்றில் பழைமையான மரமாகக் கருதப்படும் மரம் எது? 


பேரிச்சை மரம்.


English words & meanings :


Nerd - an intelligent person but not like to mingle with others. அதிகம் படித்த ஆனால் நவீன வாழ்வை விரும்பாதவர்.


Social butterfly - one who like to sociable with everyone, எல்லாரோடும் கலகலப்பாக பழகுபவர் 


ஆரோக்ய வாழ்வு :


பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் சி, பி 6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.



கணினி யுகம் :


Ctrl + Shift + * - View or hide non printing characters. 


 Ctrl + Shift + > - Increase selected font +1 


டிசம்பர் 09


ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்


ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.




1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.



நீதிக்கதை


பொறாமையால் ஏற்பட்ட இழப்பு


கதை :

கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். 


ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது. 


மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது. 


இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார். 


ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது. 


மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும். 


நீதி :

பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.



இன்றைய செய்திகள்


09.12.21


🌐 நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில்  முப்படைகளின் தலைமை தளபதி  பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 


🌐 தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தின் புதன் கிழமைகளில் அரசு அதிகாரிகள் சைக்கிளில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 


🌐 மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டி 7 மதகுகள் திறந்து விடப்பட்ட நிலையில் நெல்லை மக்களுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


🌐 நெல்லை வேய்ந்தான் குளம் அருகே 4 நடைமேடைகள் உடன் அமைந்திருந்த புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.அங்கு கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் தரை தளம், முதல் தளம் என வணிக வளாகம் போன்று கடைகளும் கட்டப்பட்டுள்ளது.


🌐 இந்திய ஆண்கள் கிரிக்கெட்  அணியின் ஒருநாள் மற்றும் T20 கேப்டனாக ரோஹித் நியமனம்.


🌐 தென் ஆப்பிரிக்கா எதிரான 3 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.


Today's Headlines


 🌸An army helicopter has crashed in Katteri near Coonoor in the Nilgiris district.  Eleven people, including Army chief Pipin Rawat and his wife, were died. 


 🌸The Tamil Nadu government has advised government officials to come to the office on bicycles on every Wednesday  to prevent environmental pollution in the state.


🌸 The people of Nellai have been warned as the Manimuttaru Dam has reached its full capacity and 7 flood gates have been opened.


 🌸The new bus stand with 4 platform near Nellai Veynthan Lake has been expanded. Two additional platforms have been set up there.  There are also shops on the ground floor of the bus station, as well as a commercial complex on the first floor.


 🌸 Rohit was appointed ODI and T20 captain of Indian men's cricket team.


 🌸Indian squad for 3 Test series against South Africa announced.


 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...