கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.07.2022 - School Morning Prayer Activities...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.07.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்:      பொருட்பால்


இயல்:     குடியியல்


அதிகாரம்: சான்றாண்மை


குறள் :     985


ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.


 பொருள்


ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.


பழமொழி :

You may know by a handful the whole


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உளி படாத கல் சிலை ஆவதில்லை. அது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.


2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்


பொன்மொழி :


இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள்.


நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான்


வாழ்க்கையை இனிமையாக மாற்றும்.


- புத்தர்



பொது அறிவு :


1.இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு? 


120 நாட்கள்.



 2.மஞ்சள் காமாலை எந்த உறுப்பை பாதிக்கிறது ?


கல்லீரல்.


English words & meanings :


Varmint - an undesirable animal especially a predator. Noun. விரும்பத்தகாத மாமிசம் உண்ணும் விலங்கு. பெயர்ச் சொல்



ஆரோக்ய வாழ்வு :


மழைக்காலத்தில் நாம் எந்த நேரத்திலும் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்படலாம். ஆனால் ஒரு கப் சூடான துளசி தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும். இது மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டிபாடிகளை தூண்டுகிறது.


NMMS Q 24: 


m + n மற்றும் 3m - 7n ஆகியவற்றை அடுத்தடுத்த பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின் சுற்றளவு: 


விடை: 8m - 12n


நீதிக்கதை


எல்லா உயிர்களுக்கும் உதவி செய்


ஒரு நாட்டு ராஜாவிடம் அமுதன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள், பறவைகள் பேசும் பாஷை தெரியும். அமுதனுக்கு ஒரே ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, அமுதன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். 


ஒரு நாள் அமுதன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு துண்டுகளாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் அமுதனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான். 


அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான். எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது.


இன்றைய செய்திகள்


14.07.22


✅நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை திருப்பி அளிக்காவிடில் விடைத்தாள் திருத்தப்படாது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


✅தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு: கடந்த 7 நாட்களில் தலா 100 மில்லியன் யூனிட் உற்பத்தி.


✅செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் காண்பதற்கான வாய்ப்பை அளிக்கும் செஸ் போட்டிகள் இன்று தமிழகம் முழுவதும் தொடங்குகிறது.


✅நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


✅இலங்கையில் பெரும் கலவரம்; அரசியல் குழப்பம்: போராடும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவம் திணறல்.


✅உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


✅பெண்கள் உலக கோப்பை ஹாக்கி - இந்திய அணிக்கு முதல் வெற்றி.


✅ஐசிசி ஒருநாள்போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை : முதல் இடத்தில் இந்திய வீரர் பும்ரா.


Today's Headlines


✅The National Examinations Agency has informed us that the answer sheet will not be revised if the hall ticket for NEET is not returned.


 ✅Increase in wind power generation in Tamil Nadu: 100 million units each in the last 7 days.


 ✅Chess tournaments begin today across Tamil Nadu, giving you an opportunity to witness the Chess Olympiad match in person.


 ✅The central government has announced that a free booster dose vaccine will be given to people above 18 years of age from July 15 for the next 75 days across the country.


 ✅Major Riots in Sri Lanka;  Political Chaos: The army cannot control the struggling population.


 ✅Indian pair advance to World Cup Shooting final.


 ✅Women's World Cup Hockey - First victory for India.


 ✅ICC, ODI Bowler Rankings: Indian player Bumrah tops the list.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...