கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த பிரிவுகளின் எண்ணிக்கை - நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Post Graduate Teachers Posts as on 01.08.2022 - Number of Sections corresponding to the number of students - Post Fixation - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...



>>> 01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த பிரிவுகளின் எண்ணிக்கை - நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Post Graduate Teachers Posts as on 01.08.2022 - Number of Sections corresponding to the number of students - Post Fixation - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...




தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (மேல்நிலைக்கல்வி)
செயல்முறைகள்‌, சென்னை -600 006.
ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...


பொருள்‌:  
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-1.8.2022 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ உள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌  அடிப்படையில்‌ முதுகலை ஆசிரியர்‌  பணியிடங்கள்‌ நிர்ணயம்‌  செய்தல்‌ அறிவுரைகள்‌ வழங்குதல்‌ சார்ந்து.


பார்வை:
1. அரசாணை எண்‌ 525, பள்ளிக்‌ கல்வி (டி1) துறை, நாள்‌ 29.12.1997. 
2. அரசாணை எண்‌ 46 பள்ளிக்‌ கல்வி (க்யூ2) துறை, நாள்‌ 14.05.2004.
3. அரசாணை எண்‌ 231, பள்ளிக்‌ கல்வி (சி2) துறை, நாள்‌ 11.08.2010.
4. அரசாணை (1டி) எண்‌ 217, பள்ளிக்‌ கல்வி (ப௧5(1)) துறை, நாள்‌ 20.06.2019.
5. அரசாணை எண்‌ 176, பள்ளிக்‌ கல்வி (பக5(1)) துறை, நாள்‌ 17.12.2021.

 

 அரசாணை எண்‌ 525ன்படி மாணாக்கர்களின்‌ எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு  ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர் நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது 01.08.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப பணியாளர்‌ நிர்ணயம்‌ (Staff Fixation) செய்யப்பட்டது. அதே போன்று நடப்புக்‌ கல்வியாண்டிலும்‌ 01.08.2022 நிலவரப்படி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்வதற்கு 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்து (Download) அதனடிப்படையில்‌ முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்தல்‌ சார்பாக கீழ்க்காணும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.

   

முதலாவதாக 1 முதல்‌ 60 மாணவர்களுக்கு 1 ஒரு பிரிவும்‌ அதற்கடுத்து ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு கூடுதல்‌ பிரிவும்‌, (Bifurcation) என்ற அடிப்படையில்‌ நிர்ணயம்‌ செய்யப்பட வேண்டும்‌.

பார்வை 2ல்‌ காண்‌ அரசாணை 46ன்படி ஆசிரியர்கள்‌ பாடவேளைகள்‌ அடிப்படையில்‌
பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது.

பார்வை 4ல்‌ காண்‌ அரசாணை 217ல்‌ கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பிரிவுகளைப்‌ பொறுத்தவரை 11 மற்றும்‌ 12ம்‌ வகுப்புகளுக்கு 1:40 என்ற. ஆசிரியர்‌-மாணவர்‌ விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும்‌.

மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்‌சி/ மாநகராட்‌சி பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்சம்‌ 30 மாணவர்களும்‌, ஏனைய ஊரக பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்ச மாணவர்‌ எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மேல்நிலைப்பிரிவில்‌ 60 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, 61-100 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, ஒவ்வொரு கூடுதல்‌ 40 மாணவர்களுக்கும்‌ கூடுதல்‌ பிரிவும்‌ ஏற்படுத்திடவும்‌ அனுமதிக்கப்படுகிறது. குறைந்த பட்ச மாணவர்கள்‌ இல்லாமல்‌ நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு,  அதில்‌ பயிலும்‌ மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.


பாடவேளைகள்‌ கணக்கிடுதல்‌.

ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஓராசிரியருக்கு, வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ ஒதுக்கீடு உள்ளதா என்பதையும்‌ கணக்கில்‌ கொள்ள வேண்டும்‌.

முதுகலை ஆசிரியராகப்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ மேல்நிலை வகுப்புகளில்‌ மொழிப்பாடத்தில்‌ வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ கணக்கீடு செய்ய வேண்டும்‌. அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில்‌ கீழ்நிலை வகுப்புகளுக்கு (9,10ம்‌ வகுப்பு) கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்‌.


கூடுதல் தேவை பணியிடங்கள்‌.

மொழிப்பாடத்தில்‌ 24பாட வேளைக்கும்‌, முதன்மைப்‌ பாடத்தில்‌ 28 பாடவேளைகளுக்கும்‌ கூடுதலாக இருப்பின்‌ இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம்‌ செய்யலாம்‌.


ஆசிரியருடன்‌ உபரி பணியிடங்கள்‌

ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்கள்‌ பணிபுரிந்து, அதில்‌ ஒரு பணியிடம்‌ ஆசிரியருடன்‌ உபரி பணியிடமாக இருக்குமாயின்‌ அப்பாடத்தில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களில்‌ இளையோரை ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிக்கப்பட வேண்டும்‌. பார்வை 5ல்‌ காண்‌ அரசாணையில்‌ ஒருமுறை பணிநிரவல்‌ மூலம்‌ மாறுதல்‌ செய்யப்பட்டவர்களை அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கு மீண்டும்‌ பணிநிரவல்‌
செய்யக்கூடாது. அவ்வாறான நிகழ்வுகள்‌ எழும்போது சார்ந்த ஆசிரியர்‌ பணிநிரவலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி மீண்டும்‌ பணிநிரவல்‌ செய்யப்படுவதிலிருந்து தவிர்ப்பு பெறலாம்‌.

எனினும்‌, சென்ற ஆண்டு ஆசிரியருடன்‌ உபரியாக கண்டறியப்பட்டு, பணிநிரவல்மூலம்‌ தற்போதைய பள்ளியில்‌ பணிபுரியும்‌ மேற்காண்‌ ஆசிரியர்‌, 'இந்த ஆண்டில்‌ தயார்‌ செய்யப்படும்‌ பணியாளர்‌ நிர்ணயத்தின்போதும்‌ ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிப்பதற்கு விருப்பம்‌ தெரிவித்தால்‌ அன்னாரை தற்போதைய பணியாளர்‌ நிர்ணயத்தின்போது ஆசிரியருடன்‌ உபரியாகக்‌ காண்பிக்கப்படவேண்டும்‌.

மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி 01.08.2022 அன்றுள்ள நிலவரப்படி 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்து (Download) அதனடிப்படையில்‌ அனைத்துவகை அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌ சார்பான
பணியாளர்‌ நிர்ணய விவரங்களை இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்‌ பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில்‌ நேரில்‌ உரிய பிரிவில்‌ (w2) ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது. மேலும்‌ EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்யப்பட்டதன்‌ (Download) நகலினை கண்டிப்பாக இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படவேண்டும்‌.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...