கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2023 - School Morning Prayer Activities...

    

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: செய்நன்றி அறிதல்


குறள் : 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.


பொருள்:

ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.


பழமொழி :

Be slow to promise but quick to perform


ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று



இரண்டொழுக்க பண்புகள் :


1. புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன். 


2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. நேசிப்பேன்.


பொன்மொழி :


வாழ்க்கை ஒரு சங்கீதம்.  அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.


பொது அறிவு :


1. மனிதனுக்கு எத்தனை ஜோடி விலா எலும்புகள் உள்ளன? 


 12 ஜோடிகள் .


 2.அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுவது எது? 


 கொல்கத்தா.


English words & meanings :


lessen - make smaller. verb. குறைப்பது. வினைச் சொல். lesson - learning materials or things.noun பாடம். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


மொச்சை பயிறில் உள்ள எல் டோபா பார்கின்சன் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.


மனச்சோர்வு மற்றும் மனப்பிறழ்வு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது.


NMMS Q


தனிம வரிசை அட்டவணையில் 118 வது தனிமமாக நவ 28, 2016 இல் சேர்க்கப்பட்ட தனிமம் ___________ 


a) Oganesson b) Tennessine c) Livermorium.


 விடை: Oganesson


ஜனவரி 19


1986 – முதற் கணினி நச்சுநிரலான (Computer Virus) பிரெயின் பரவத் தொடங்கியது.





நீதிக்கதை


செய்நன்றி மறவேல்


ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.


மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.


அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.


ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.


தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்


19.01.2023


* மத்திய அரசுப் பணிகளில் 2.1% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.


* சென்னையில் 3 கடைகளில் 1500 பொம்மைகள் பறிமுதல்: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால் நடவடிக்கை.


* விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


* சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி.


* உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.


* டாடா ஸ்டீல் செஸ் போட்டி: உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி.


* 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், முர்ரே, ஜாபியர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Only 2.1% of Tamilians have been selected for central government jobs : Minister Udayanidhi Stalin informs.


 * 1500 toys seized from 3 shops in Chennai: Action for lack of ISI stamp


 * Anna University said that the term exam will be conducted on Sunday as well.  Students are dissatisfied with the announcement.


 * Reluctance to identify minorities: Supreme Court disapproves of 6 states and UT governments.


*  16 people, including Minister of Home affairs Denis Monastrisky, died in a helicopter crash in the capital of Ukraine, Kiev.


 * TATA STEEL CHESS MATCH: Pragnananda beats World No. 2 with stunning victory.


 * An Australian woman has run a marathon every day for 150 days, a world record.


 * Australian Open tennis: Djokovic, Murray, Japier advance to 2nd round.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...