கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் - அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...



 காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் -  அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...


போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.


சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருப்போரின் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O.Ms.No.67, Dated: 22-01-2010) அன்று பிறப்பிக்கப்பட்டது.


உயர்நீதிமன்றம் தடை


இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது.


அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, சீருடைப் பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது, சட்டவிரோதமானது என்றும், எதிர்காலத்தில் இந்த அரசாணையை செயல்படுத்தக்கூடாது என்றும் தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.


மேல்முறையீடு


சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 119 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ். ஓகா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


அரசாணை செல்லும்


மனுதாரர்களின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் எனவும், ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த ஆண்டில் சீருடைப் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் உத்தரவிட்டது.



>>>  காவலர் பணிநியமனம் -  பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு - அரசாணை...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...