கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: ஒழுக்கம் உடைமை


குறள் : 131

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.


பொருள்:

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.


பழமொழி :

The only jewel which will not decay is knowledge


அறிவு மட்டுமே அழியா அணிகலம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 


2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது


பொன்மொழி :


காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை நீயே இழப்பதற்குச் செய்வதற்கு ஒப்பாகும்.ஜேம்ஸ் ஆலன் 


பொது அறிவு :


1. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது? 


 அரேபியா .


 2. மிகப்பெரிய தேசியக்கொடி உள்ள நாடு எது?


 டென்மார்க்.


English words & meanings :


abduct - kidnap, take some one by force. verb. கடத்துதல். வினைச் சொல். The child was kidnapped for money. 

ஆரோக்ய வாழ்வு :


யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

NMMS Q


செயற்கை வகைப்பாட்டு முறை எப்பன்பினை அடிப்படையாகக் கொண்டு தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டது.


விடை :இனப்பெருக்கம், புறத்தோற்ற பண்பு , தாவரங்களின் வாழ்வு காலம்


பிப்ரவரி 23


சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்






சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது

நீதிக்கதை


கிடைத்ததில் சம பங்கு


ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால், தெனாலிராமன் இருந்தால் நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ, என எண்ணி தெனாலிராமனை மட்டும் உள்ளே விட வேண்டாமென்று வாயிற்காவலளியிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார். 


ஆனால் தெனாலிராமன் எப்படியாவது உள்ளே சென்று விடவேண்டும். என தீர்மானித்துக் கொண்டான். உள்ளே செல்ல முற்பட்ட தெனாலிராமனை, வாயிற்காவலளி தடுத்து நிறுத்தி விட்டான். இந்நிலையில் தெனாலிராமன் ஐயா, என்னை உள்ளே செல்ல அனுமதித்தால் என் திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன் என்றான். இதைக் காவலாளி முதலில் சம்மதிக்காவிட்டாலும், பிறகு சம்மதித்துவிட்டான். இதைப் போல் இன்னொரு வாயிற் காப்போனும் சம்மதித்துவிட்டான். 


பிறகு தெனாலிராமன் ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே சென்று ஓர் மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 


உடனே தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் அணிந்தவனை கொம்பால் அடித்தான். இதைப்பார்த்த மன்னர் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை ஏன் இவ்வாறு செய்தாய் என்றார். 


அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்றான். இதைக் கேட்ட மன்னர், தெனாலிராமன் மீது கடும்கோபம் கொண்டு 30 கசையடி தருமாறு உத்தரவிட்டார். 


இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு தர வேண்டாம். எனக்குக் தர வேண்டியப் பரிசை ஆளுக்குப் பாதியாக, தருகிறேன், என்று நம் இரண்டு வயிற்காப்போன்களிடம் வாக்கு கொடுத்துவிட்டேன் என்றான். 


அதனால் இந்த பரிசை, அவர்கள் இருவருக்கும் சமமாக பங்கிட்டுத் தாருங்கள் என்றான். உடனே மன்னர் அவ்விருவரையும் அழைத்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டாதால் அவர்கள் இருவருக்கும் தலா 15 கசையடி தருமாறு உத்தரவிட்டார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்.

இன்றைய செய்திகள்


23.02.2023


* சென்னையில் நில அதிர்வு நிகழ்ந்ததாக நில அதிர்வு ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.


* நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2 நாட்களில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் சென்னையில் மேலும் 200 அதிநவீன தானியங்கி ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.


* இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.


* இந்தியாவுக்கு ரூ.2.07 லட்சம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஆர்வம்.


* மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் வட கொரிய மக்கள் தவித்துவரும் சூழலில், அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் "மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு சமம்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றுள்ளார்.


* சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு.


* ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The National Seismological Center and the India Meteorological Department said that no earthquake in Chennai was reported to the Seismological Center.


 * Minister M. Subramanian has said that an explanation will be given to the Ministry of AYUSH in 2 days regarding the exemption from NEET examination.


 * 200 more state-of-the-art automated ANPR cameras are to be installed in Chennai to accurately capture vehicle number plates and issue fines.


* 1.2 Lakh One-Teacher Schools in India - Shocking Information in Survey


 * Asian Development Bank keen to lend Rs 2.07 lakh crore to India


 * With the North Korean people suffering from severe food shortages, a message issued by the country's state media warned that "if people receive foreign aid for food, it is equivalent to eating poisoned candy."


* Shooting World Cup: India's Rudrangsh Patil wins gold


 * Indian tennis player Sania Mirza retires from international tennis.


 * ICC Test Rankings: England's James Anderson advances to No.1


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...