கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ விழிப்புணர்வு வாரம்‌ - மாணவர்களின்‌ உடல்‌ / மன நலன்‌ காக்க சிறப்புப்‌ பயிற்சிகள்‌ - பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்‌ (நாட்டு நலப்பணித்‌ திட்டம்‌) மற்றும்‌ தொடக்கக்கல்வி இணை இயக்குநர்‌ (உதவி பெறும்‌ பள்ளிகள்‌ ) ஆகியோரின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 019527 /எம்‌/இ1/2022, நாள்‌: 29.05.2023 (Awareness week in all types of Government / Government Aided schools during 2023-2024 - Special exercises to protect physical / mental welfare of students - Procedures to be followed - Joint Proceedings of Tamilnadu Joint Director of School Education (National Service Scheme) and Joint Director of Elementary Education (Aided Schools) NO: 019527 /M/E1/2022, Dated: 29.05.2023)...


 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்‌ (நாட்டு நலப்பணித்‌ திட்டம்‌) மற்றும்‌ தொடக்கக்கல்வி இணை இயக்குநர்‌ (உதவி பெறும்‌ பள்ளிகள்‌ ) ஆகியோரின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌, சென்னை -6

ந.க.எண்‌: 019527 /எம்‌/இ1/2022, நாள்‌: 29.05.2023


பொருள்‌: பள்ளிக்கல்வி 2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ விழிப்புணர்வு வாரம்‌ - மாணவர்களின்‌ உடல்‌ / மன நலன்‌ காக்க சிறப்புப்‌ பயிற்சிகள்‌ - பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ தொடர்பாக.


பார்வை: பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019527/எம்‌/இ1/2022. நாள்‌. 06.08.2022.


அரசுப்‌ பள்ளிகளில்‌ கல்வியின்‌ தரம்‌, மாணவர்‌ நலன்‌, மகிழ்ச்சியான கற்றல்‌ சூழல்‌ ஆசிரியர்‌ - மாணவர்‌ நல்லுறவு மேம்பட தமிழ்நாடு அரசு பல திட்டங்களை அறிவித்துத்‌ திறம்பட நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக, மாணவர்களின்‌ ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவும்‌ வகையில்‌ உடல்நலன்‌ மற்றும்‌ மனநலத்தின்‌ முக்கியத்துவம்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அமர்வுகள்‌ பள்ளிகளிலேயே நடத்த தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையின்போது மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ பின்வரும்‌ அறிவிப்பை வெளியிட்டார்‌.


1 ஒவ்வொரு கல்வி ஆண்டின்‌ முதல்‌ வாரத்தில்‌ அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு மனநலம்‌, குழந்தைகள்‌ மீதான வன்முறையைத்‌ தடுத்தல்‌, தண்னம்பிக்கையை வளர்த்தல்‌, போதைப்‌ பொருட்களுக்கு அடிமையாதலைத்‌ தடுத்தல்‌, தன்சுத்தம்‌ பேணுதல்‌ போன்ற பொருண்மைகளில்‌ பள்ளி அளவில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்படும்‌.”


பள்ளிகளில்‌ விழிப்புணர்வு வாரம்‌:

உடல்‌, மனநலம்‌ பேணும்‌ பள்ளிச்சூழலில்‌ கல்வியைப்‌ பெறும்‌ குழந்தைகள்‌ வாழ்க்கையில்‌ வெற்றி வாய்ப்பைப்‌ பெறுகிண்றனர்‌. இதற்கென, அரசுப்பள்ளிகளில்‌ கண்ணொளி காப்போம்‌ திட்டம்‌, RBSK திட்டம்‌, WIFS திட்டம்‌ எனப்‌ பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.


கடந்த சில காலங்களில்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ முறைகளில்‌ குறிப்பிடத்‌ தகுந்த மாறுதல்‌ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்‌ மாணவர்களின்‌ உடல்‌, மணநலனைக்‌ காக்க மருத்துவக்‌ குழுக்களைக்‌ கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, உரிய பரிசோதனைகளைச்‌ செய்யவும், இளைஞர்‌ நீதிச்சட்டம்‌, போக்சோ சட்டம்‌, சாலைப்‌ பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை போதைப்‌ பொருட்கள்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மூவலூர் இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்‌ கல்வி உறுதித்‌ திட்டம்‌ போன்ற அரசு நலத்திட்டங்கள்‌ குறித்த விழிப்புணர்வைப்‌ பள்ளிகளில்‌ ஏற்படுத்தவும்‌ அரசு உறுதி பூண்டுள்ளது. 


அனைத்‌து அரசு / அரசு உதவிபெறும்‌ உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌


26.06.2023 அன்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும்‌ நிகழ்வும்‌, 27.06.2023 முதல்‌ 30.06.2023 வரை கீழ்க்காணும்‌ துறைகளுடன்‌ இணைந்து விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


1. மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்துறை.


2 சமூக நலம்‌ மற்றும்‌ மகளிர்‌ மேம்பாட்டுத்துறை/ சமூகப்‌ பாதுகாப்புத்துறை


3. காவல்‌ துறை


>>> 2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ விழிப்புணர்வு வாரம்‌ - மாணவர்களின்‌ உடல்‌ / மன நலன்‌ காக்க சிறப்புப்‌ பயிற்சிகள்‌ - பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்‌ (நாட்டு நலப்பணித்‌ திட்டம்‌) மற்றும்‌ தொடக்கக்கல்வி இணை இயக்குநர்‌ (உதவி பெறும்‌ பள்ளிகள்‌ ) ஆகியோரின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 019527 /எம்‌/இ1/2022, நாள்‌: 29.05.2023 (Awareness week in all types of Government / Government Aided schools during 2023-2024 - Special exercises to protect physical / mental welfare of students - Procedures to be followed - Joint Proceedings of Tamilnadu Joint Director of School Education (National Service Scheme) and Joint Director of Elementary Education (Aided Schools) NO: 019527 /M/E1/2022, Dated: 29.05.2023)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...