கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2023 - School Morning Prayer Activities...

  


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கள்ளாமை


குறள் :285


அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.


விளக்கம்:


அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.



பழமொழி :

Every heart hearth its own ache


தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி



இரண்டொழுக்க பண்புகள் :


1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.



2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.


பொன்மொழி :


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. பாரதியார்


பொது அறிவு :


1. கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ?


 தென்னாப்பிரிக்கா


2. வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ? 

தமிழ்: கள்ளிக்கோட்டை, Malayalam  கோழிகோடு & ஆங்கிலம்: Calicut


English words & meanings :


 Le-pro-lo-gy- study of the disease Leprosy. Leprosy is an infectious disease caused by Mycobacterium leprae. Noun. குஷ்டரோகம் குறித்த படிப்பு


ஆரோக்ய வாழ்வு : 


மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் மாயங்களை ஏற்படுத்தும். வேண்டுமானால் இந்த மாதுளை ஜூஸுடன் சிறிது பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட நீக்க உதவும்.


நீதிக்கதை


 "நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி" 


அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 


அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.


அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.


"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.


''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி " என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார். 


சிறிது நேரம் கழித்து,


அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.


"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"


பெரியவர் சிரித்துக்கொண்டே , "ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.


"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்."அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.


"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.


"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.


காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.


உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.


அதற்குப் பெரியவர்  "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.


"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"


இன்றைய செய்திகள்


27.10.2023


*தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ.


*தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 31ஆம் தேதி கூடுகிறது.


*பெண்களை சாதிக்க வைப்பது கல்விதான்- முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு.


* தகுதியான பெண்கள் அனைவருக்கும் ரூபாய் 1000 கிடைக்க உறுதியான நடவடிக்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.


* உலகக்கோப்பை கிரிக்கெட்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி.


Today's Headlines


*President Draupadi Murmu arrived  in Tamil Nadu.


 *Tamil Nadu Cabinet meeting will be held on 31st October 


 *Education is what makes women achieve great things- Ex-DGP Shailendrababu.


 * Minister Udhayanidhi Stalin took concrete steps to get Rs 1000 to all eligible women.


 * Cricket World Cup: Sri Lanka beat the present champions with a huge victory.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...