கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - செய்தி வெளியீடு...

இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - செய்தி வெளியீடு...


இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார்.


தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamilnadu platform based gig workers welfare board) என்ற பெயரில் புதிதாக நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு நல திட்ட உதவிகள் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இணையம் சார்ந்த 'கிக்' தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்களில் இணையவழி விற்பனை, வர்த்தக சேவை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகையான பணியமைப்பில் மரபான முறையில் அல்லாமல், இணையதள நிறுவனங்கள், தொழிலாளர்களிடையே உடன்படிக்கை அடிப்படையில் வேலை வழங்கப்படுகின்றன.



இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஸ்விகி, சோமாட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும்’ என சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதன்படி தனி நல வாரியம் உருவாக்குவதற்காக இணையம் சார்ந்த கிக் (Gig) தொழில்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்ட அட்டவணையில் சேர்த்துஅரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாரியத்துக்கான திட்டக் கூறுகள் இயற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் கிக் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு, நலவாரியத்தில் பதிவு பெற்று பயனடைய வகை செய்யப்பட்டுஉள்ளது. இவ்வாரியத்தில் 18 வயதுமுதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள், பணிபுரியும் நிறுவனம் அல்லது தொழிற்சங்கங்களிடமிருந்து பணிச் சான்று பெற்று

www.tnuwwb.tn.gov.in

என்ற இணையதளத்தில் GIGW எனும் குறியீட்டின்கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்றதொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026

    தற்போது TNSED Schools  App-ல்  Noonmeal bug fixes and enhancements added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: ...