கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22-02-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 430:


அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.


விளக்கம்:


அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.



பழமொழி : 


Spare the rod and spoil the child


அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா?


பொன்மொழி:


Success is a journey, not a destination.


 வெற்றி என்பது பயணம். அதற்கு எல்லை இல்லை.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை

தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி

முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு

நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு

முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Education - கல்வி 

Egg - முட்டை

Electricity - மின்சாரம்

Emerald - மரகதம்

Empty - காலியான

Endeavour - பெருமுயற்சி 


ஆரோக்கியம்


உண்ணும் வழிமுறைகள்


எளிய முறையில் சமைக்கப்பட்ட புதிய உணவையே உட்கொள்ளுங்கள்.


 வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதற்குத் தயங்காதீர்கள். ஆவியில் வேக வைத்த உணவை உண்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். கூடியமட்டும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிருங்கள்.


பழங்களையும் காய்கறிகளையும் தோலோடு சாப்பிடுங்கள். கேரட் போன்றவற்றை மேல் தோல் சீவி, நன்றாக நீரில் கழுவிய பின் சாப்பிடலாம்.


 சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்பாகவே காய்கறி, பழங்களைக் கழுவி, துண்டு துண்டாக நறுக்கி வைக்காதீர்கள். இப்படிச் செய்வதால் சத்து இழப்பு ஏற்படும்.


 பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்படும் உணவை உண்ணுங்கள். துரித உணவை நாடாதீர்கள்.


 சாப்பாட்டுக்குப் பதிலாக நொறுக்கு தீனிகளைச் சாப்பிடாதீர்கள்.


 உணவில் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 22


1907 – பேடன் பவல் முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.


1997 – டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.



பிறந்த நாள் 

1898 – தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டப் பெண் போராளி (இ. 1914)


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (செயிண்ட் லூசியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)




நீதிக்கதை


நரியும் கரடியும்


ஒரு ஊரில் நரியும் கரடியும் நட்பாய் பழகி வந்தனர். இந்த நரி எப்போதுமே அடுத்தவர்களை ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டு இருந்தது. ஒரு நாள் கரடியிடம் அது சொன்னது,” நண்பா நாம் ஏதாவது விவசாயம் செய்து சம்பாதிக்கலாம்” என்று கேட்டது. அதற்கு அந்தக் கரடியும்,”சரி நண்பா நாம் ஏதாவது விவசாயம் செய்யலாம்” என்றது.


அப்போது இருவரும் சேர்ந்து ஒரு வயலை தேர்ந்தெடுத்தார்கள். அந்த வயலை நன்றாக சுத்தம் செய்து உழுதார்கள். விதைப்பதற்கு முன்பு நரி கரடியிடம் சொன்னது,” நண்பா இந்த முறை நிலத்திற்கு மேல் விளையும் அணைத்தேன் நான் எடுத்துக் கொள்கிறேன், நிலத்திற்கு கீழ் விளையும் அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்றது .அதற்கு அந்த கரடியும் சம்மதித்தது.



இந்த நரி மிகவும் தந்திரமானது. எனவே சோழ விதையை விதைத்தது அறுவடை காலம் வந்த பிறகு இருவரின் ஒப்பந்தம்படி நிலத்திற்கு மேல் விளைந்த அனைத்து சோழ வகைகளை நரி எடுத்துக்கொண்டது. ஆனால் கரடிக்கோ வெறும் வேர்கள் மட்டும்தான் மிஞ்சியது. எனவே கரடி  நரியிடம் சொன்னது ,”நண்பா போன முறை நீ நிலத்திற்கு மேல் உள்ள அனைத்து விளைச்சலையும் எடுத்து விட்டாய், எனவே இந்த முறை நிலத்திற்கு மேல் விளையும் அனைத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன் நிலத்திற்கு கீழ் விளையும் அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்றது.


அதற்கு அந்த நரி சிரித்துக் கொண்டே சம்மதித்தது. இந்த முறை நரி தந்திரமாக நிலக்கடலையை விதைத்தது. இந்த முறையும் விளைச்சல் நன்றாக இருந்தது நிறைய நிலக்கடலைகள் கிடைத்தன. அந்த  கரடி சொன்னபடி நிலத்திற்கு மேல் உள்ள அனைத்தையும் கரடி எடுத்துக் கொண்டது நிலத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் நரி எடுத்துக் கொண்டது. எனவே கிடைத்த நிலக்கடலைகள் அனைத்தையும் நரி எடுத்துக் கொண்டது.



இப்போது இந்த கரடிக்கு நரியின் தந்திரம் புரிந்து கொண்டது. எனவே அது நரியிடம் நட்பாக பழகுவதை நிறுத்திவிட்டு தானே தனியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தது.


நீதி: தீய எண்ணம் உடையவர்களிடம் நட்பாக பழகக் கூடாது.



இன்றைய முக்கிய செய்திகள் 


22-02-2024 


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்...


ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்...


விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட 2 ஏக்கர் நிலத்தை, மறைந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குருசாமி குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளனர்...


ககன்யான் திட்டம் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்...


2024-25-ம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்...


நிலத்தடி நீர் பெரிதும் மாசடைந்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்...


மகளிர் நலனை மேம்படுத்தும் வகையில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...



Today's Headlines:

22-02-2024


CBSE Class 12th Exam Starts Today... 


Chief Minister inaugurated 96 guard quarters built at a cost of Rs.24 crores... 


The family of late retired teacher Guruswamy has donated 2 acres of land for the construction of a government high school at M. Pudhupatti near Sivakasi, Virudhunagar district...


Kaganyan project cryogenic engine test success: ISRO informs... 


In the academic year 2024-25, enrollment in government schools should be increased: Minister Anbil Mahesh... 


Sterlite plant should not be allowed to open as groundwater is heavily polluted: Tamil Nadu govt argues in Supreme Court... 


Chief Minister M.K.Stalin released "Tamil Nadu State Women's Policy 2024" to promote women's welfare...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...