தேர்தல் பயிற்சி வகுப்பு தேதியினை மாற்ற ஜாக்டோ ஜியோ கோரிக்கை...
ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO)
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு
நாள்: 22.03.2024
பெறுநர்
தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்.
பொது (தேர்தல்கள்) துறை,
தலைமைச் செயலகம், சென்னை -600 009.
அய்யா,
பொருள் : 2024 பாராளுமன்றத் தேர்தல் 24.03.2024 அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு கிருத்துவர்கள் பண்டிகையான குருத்தோலை ஞாயிறு தேர்தல் வகுப்பினை 23.03.2024 அன்று மாற்றி நடத்துவது குறித்து.
2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எதிர்வரும் 19.04.2024 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குப் பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாவது பயிற்சி வகுப்பானது 24.03.2024 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 24.03.2024 அன்று தமிழகத்திலுள்ள சிறுபான்மை சமூகத்தினரான கிருத்துவர்கள் தங்களது மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் அடிப்படையில் புனித குருத்தோலை ஞாயிறு பண்டிகையினைக் கொண்டாட உள்ளனர். கடந்த ஆறு வாரங்களாக தபசு காலத்தை கடைபிடிக்கும் கிருத்துவர்கள், *குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைகளுடன் புனிதமாக வீதிகளில்* ஊர்வலமாக வந்து ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடுகின்றனர். அன்றைய தினத்தில், தேர்தல் வகுப்பானது நடைபெற்றால், சிறுபான்மையின கிருத்துவர்களுக்கு தங்களது புனிதப் பண்டிகையான குருத்தோலை ஞாயிறைக் கொண்டாட பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், தேர்தல் பணியாளர்களுக்கான *முதலாவது வகுப்பினை 23.03.2024 சனிக்கிழமை* மாற்றியமைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தங்கள் நம்பிக்கையுள்ள,
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ-ஜியோ