ஜாக்டோ ஜியோ JACTTO GEO சார்பாக முதலமைச்சர் அவர்களிடம் இன்று (26-05-2026) வழங்கப்பட்ட கோரிக்கைகள் மனு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஜாக்டோ ஜியோ JACTTO GEO சார்பாக முதலமைச்சர் அவர்களிடம் இன்று (26-05-2026) வழங்கப்பட்ட கோரிக்கைகள் மனு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்ததும், கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஆதரவினை கொண்டு வந்து சேர்த்ததா? அதிருப்தியினை கொண்டு வந்து சேர்த்ததா?
*மாநாட்டினை நடத்திய ஒருங்கிணைப்பாளர்கள் சுய பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்!. போர்க்குண இயக்க உறுப்பினர்களின் உரிமை குரல்!.. ஆதார் அட்டையினைப் போல அவரவர் சங்கங்கள் தான் அடையாள முகவரி என்பதை ஏன் மறந்து போனார்களோ தெரியவில்லை?..*
*AIFETO... 10.02.2026.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண்:- 36/ 2001.*
*பிப்ரவரி 8-ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு அரசுத் திட்டங்களினால் மக்களிடம் பாராட்டு பெறுவதற்கான காரணமே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான்!.. நீங்கள் எங்களுக்கு!.. நாங்கள் உங்களுக்கு!... எப்போதும் பக்கபலமாக இருப்போம். 2.0 ஆட்சியிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறிடும்!.. என்று ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதலமைச்சர். உறுதியளித்துள்ளார்.*
*புதிதாக எந்த அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிடவில்லை. பெட்டி இருக்கிறது!.. பூட்டு இருக்கிறது!.. சாவியும் இருக்கிறது!.. திறந்து பார்த்தால் நிதி இல்லை!..*
*முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் என் பெயருக்கு முன்னால் கருணை இருக்கிறது... ஆனால் உங்களுக்கு கொடுப்பதற்கு என் பெயருக்கு பின்னால் இருக்கிற நிதி இல்லையே!.. என்பார்.*
*ஆனால் அவர்கள் காலத்தில் தான் இந்தியாவில் முதன்முதலாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கினார்கள். வேலை வாய்ப்பாக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்தார்கள்.*
*அதிமுக ஆட்சியில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், என 55,000 பேரை 01.06.2006 முதல் ஒரே சமயத்தில் காலமுறை ஊதியம் வழங்கி அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி ஆணை வழங்கினார்கள்.*
*கருணைத்தொகையினை தவிர்த்து விட்டு போனஸ் என்று அறிவித்தார்கள்.*
*ஈட்டிய விடுப்பினை பணமாக்கிக் கொள்ளலாம்!.. என்பதற்கும் அரசாணை வழங்கினார்கள்!.. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இல்லாத பதவி என்பதால் அவர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் ₹ 5400/- சிறப்பு நிலை ஊதியம் ₹ 5700/- என்பதை நிர்ணயம் செய்து அரசாணை வழங்கினார்கள்.*
*இறந்தவர்களை காடு சேர்ப்பதற்காக செலவிற்காக முதலில் பத்தாயிரத்தை தொடங்கியவர். அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு வழங்கிய ஊக்க ஊதிய உயர்வினை அவரது காலத்திலும் தொடர்ந்து வழங்கினார்கள்.*
*தமிழ் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறலாம் என்று அவர் காலத்தில் தான் ஆணை கொண்டுவரப்பட்டது.*
*மந்தண முறையை நீக்கினார்கள்.*
*வேலை நியமன தடை சட்டத்தை நீக்கியவர்.*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநாட்டில் தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்கள்.. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியிக் காலத்தில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட 9 அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள்.*
*கோவிட் பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண் செய்து கொள்வது நிறுத்திவைப்பு ஆகியவற்றையெல்லாம் விடுவித்தது, வேறெங்கும் இல்லாத புதிய திட்டமான அரசுப் பணிகளில் விபத்தில் உயிரிழக்க நேர்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய், இயற்கை மரணம் அடைந்தால் பத்து லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடாக தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.*
*பணியில் இருக்கும் போது மரணம் அடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை திருமண உதவித் தொகையாகவும், மேலும் உயர்கல்வி பயில 10 லட்சம் வரையில் நிதி உதவியும் வழங்குவதன் மூலம் நாட்டிற்கே வழிகாட்டி வருவதாகவும் தெரிவித்தார்கள்.*
*அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாயாகவும், மேலும் உயர் கல்வி பயில 10 லட்சம் வரை நிதி உதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்கள்.*
*அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் 10,000 ரூபாயில் இருந்துரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் அவர்களது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்கள்.*
*2003இல் அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தினை 22 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளுடன் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் (TAPS) திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.*
*நிதிப்பற்றாக்குறைக்கு முதல் தவணையாக 13000 கோடி நிதியினை ஒதுக்கி உள்ளதாகவும், ஆண்டுதோறும் 13,000 கோடி நிதியினை TAPS திட்டத்திற்காக ஒதுக்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. என்று பெருமையாக தெரிவித்தார்கள்.*
*ஆனால் 10% பங்களிப்பு தர வேண்டும் என்பது பற்றி முன்னுதாரணமாக முதலமைச்சர் எதையும் அறிவிக்கவில்லை.*
*இந்தத் திட்டத்தை அறிவித்த உடன் இனிப்புகள் பரிமாறிக் கொண்டவர்களுக்கு வழக்கு மொழியில் இனிப்பூட்டிய நிகழ்வினை மாநாட்டில் பொங்கி மகிழும் இதய உணர்வுடன் பரிமாறிக் கொண்டார்கள்.*
*சில ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகிற போது கூட, மேலை நாடுகளிலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மட்டுமே அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் அமல்படுத்தியதற்கு நன்றி பெருக்கினை தெரிவிக்கக்கூடிய அடையாளமாகத்தான் இந்த மாநாட்டினை நடத்துகிறோம்!.. பாராட்டு மலர்களை தெரிவித்துள்ளார்கள்!..*
*நாமும் வரவேற்று மகிழ்கிறோம்!..*
*ஆனால் இந்திய திருநாட்டில் உள்ள மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக ஜோதிபாசு அவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் இப்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி அவர்கள் ஆட்சி காலத்திலும் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது... என்பதை ஏன் சொல்ல மறந்தார்கள்?.. என்று தெரியவில்லை!.*
*ஆந்திர மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்ட சலுகைகளை பங்களிப்பு இல்லாமல் ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.*
*5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தப்பட்டு ஆணை வழங்கி விட்டார்கள். மத்திய அரசின் ஓய்வூதிய ஆணையத்திடமிருந்து நிதியினை பெற முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.*
*ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் ஒரு லட்சம் கோடி சிபிஎஸ் நிதியினை மத்திய ஓய்வூதிய ஆணையத்திடம் இன்றும் செலுத்தப்படாமல், காப்பீட்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.*
*கருத்துக்கணிப்பு..*
*புதிய ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்திருக்கக் கூடிய 61/4 லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தினால் TAPS திட்டத்தினை எத்தனை பேர் வரவேற்கிறார்கள் என்றபதனை அரசு தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.*
*ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடும் சில மாநில ஒருங்கிணைப்பாளர்களின் பாராட்டுரையும்..*
*எதிர்க்கட்சிகள் சொல்வது போல திமுக மாநாடாகவே நடத்தினார்கள். முதலில் பேனரில் திமுக கொடியினை போட்டு வெளியிட்டு, எதிர்ப்புகள் வந்த பிறகு அந்த பேனரை எடுத்து விட்டார்கள்.*
*மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் பேசும்போது அடுத்த ஆட்சியும் 2026 இல் முதல் அமைச்சர் அவர்கள் தலைமையில் தான் அமையப் போகிறது... இன்னொரு ஒருங்கிணைப்பாளர் 2036 வரையில் நீங்கள் தான் முதலமைச்சர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.*
*இன்னொரு ஒருங்கிணைப்பாளர் ஓய்வறியா உதயசூரியனே!.. நீங்கள் தான் நிரந்தர முதலமைச்சர்!.. என்று அறிவித்தார்கள்.*
*ஆனால் கூடியிருந்த கூட்டமோ? ஏதும் அறியாதவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள்!.*
*இதுவரையில் ஜாக்டோ ஜியோ என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டத்தில் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதரவினை இழந்த கூட்டமாகத்தான் காணப்பட்டது.*
*2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நடத்தியவர்கள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!..*
*வீரம் செறிந்த இந்தியாவியே திரும்பிப் பார்க்க வைத்த உரிமை மீட்பு மாநாடு நடத்தி இருந்தால் எழுச்சியாவது வந்து இருக்கும்.*
*நன்றி அறிவிப்பு மாநாடு என்பது ஒரு விழாவில் தேசிய கீதம் பாடிவிட்டால் நிகழ்ச்சி நிறைவு பெற்றுவிட்டது என்பது போல... இனி கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பாக எந்த போராட்டத்தினையும் நடத்த வாய்ப்பு இல்லை!.. என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்த நிகழ்வுகளாகவே கருதுகிறார்கள்.*
*தனிசங்கங்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தலாம். ஆனால் ஆயத்த மாநாடு... கோரிக்கை மாநாடு நடத்திய கூட்டமைப்புகளில், நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியது முதன்முறையாக இந்த மாநாடு தான். இது கடைசி மாநாடாக அமைய வேண்டும்!.*
*ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்சியின் மீது பற்றுதலும் ஆதரவு உணர்வும் உண்டு. ஆனால் அவரவருக்கு அடையாள முகவரியாக அவர்கள் இருக்கின்ற சங்கங்கள்தான் என்பதை மறந்து விட்டார்களே!. எந்த அறிவிப்பும் இல்லாமல் மாநாடு முடிந்து விட்டது.*
*மாநாடு முடிந்து கூட்டத்தில் இருந்து கலைந்து சென்ற உறுப்பினர்களின் கேள்விக் கணைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.*
*10 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாவது நிறைவேறியுள்ளதா?.. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்வு கண்டு விட்டோமா?.. குழு அறிக்கை வெளிவந்துவிட்டதா?.*
*60 ஆண்டுகளாக தொடக்கக்கல்வி ஆசிரியர்களுடைய முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் நடைமுறையில் இருந்து வந்ததை மாநில அளவில் மாற்றி அமைத்து அரசாணை 243 வெளியிட்டார்கள். பெண் ஆசிரியர்களை பாதிக்கும் அந்த அரசாணையில் குறைந்தபட்சம் திருத்தத்தையாவது வெளியிட்டார்களா?..*
*அந்த அரசாணை வெளிவந்ததற்கு நன்றி தெரிவித்து மாநாடு நடத்தியவர்கள் தான் இந்த ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டையும் நடத்துகிறார்கள்..*
*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்று எழுதிக் கொடுத்தவர்களுடன் தான் இந்த மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.*
*தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலைஞர் அரசில் வழங்கப்பட்ட₹ 5400 தர ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்து கோரிக்கை வைத்தவர்கள் தான் இந்த நன்றி அறிவிப்பு மாநாட்டினை நடத்தி இருக்கிறார்கள்.*
*என்பதை மறக்கத்தான் முடியுமா?.. மறுக்கத்தான் முடியுமா?*
*சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?..*
*அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா?.. இல்லை!.. இல்லை!.. இல்லை!..*
*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எளிமை, இனிய அணுகுமுறை கொண்டவர்!. எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு வாய்ப்பினை அளித்து வருபவர்.. என்பதை யாராலும் மறுக்க முடியாது.*
*ஆனால் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியை நடத்துகிறார்கள். ஆனால் அனைத்து நிர்வாகத்தினையும் அதிகாரிகள் தான் நடத்தி வருகிறார்கள். எந்த அரசிலும் காண முடியாத ஒரு வித்தியாசமான அணுகுமுறை அதிகாரிகள் மட்டுமே ஆட்சி செய்கின்ற நிர்வாகத்தினை தமிழ்நாட்டில் உள்ளோர் அன்றாடம் கண்டு கேட்டு பாதிப்படைந்து வருகிறோம்!..*
*ஆதார் அட்டையைப் போல அவரவர் சங்கங்களின் அடையாள முகவரி என்பதை ஏன் மறந்து போனார்கள் என்று தெரியவில்லை?..*
*STFI அகில இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எட்டு ஆசிரியர் இயக்கங்கள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்று இருந்தாலும் கொள்கை உணர்வோடு நன்றி அறிவிப்பு மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்!.. என்று சூளுரைத்து பங்கேற்கவில்லை.. என்பதை கண்டு அவர்களை உச்சி முகர்ந்து பல போராட்டங்களை நடத்தியவன் என்ற முறையில் பாராட்டி மகிழ்கின்றேன்.*
*நன்றி அறிவிப்பு மாநாட்டில் நன்றியுரை தமிழக ஆசிரியர் கூட்டணிக்கு அளித்திருந்தாலும் கொள்கை வைரங்களாக இயக்கத்தினை பேணிப் பாதுகாத்து வருகிற மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட/ வட்டாரப் பொறுப்பாளர்கள் எவரும் எந்த அறிவிப்பும் இல்லாமல் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். என்பதற்காகவே கலந்து கொள்ளவில்லை என்பதை நெஞ்சம் நெகிழ.. கொள்கை கண்ணீர்.. கண்களில் விழுந்திட உணர்ச்சிப் பெருக்குடன் அர்ப்பணித்துக் கொள்கிறோம்!..*
*இனிப்பூட்டிய நிலைமை நின்று நிலைப்பதில்லை!.. அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதால் விரத்தியும் ஏமாற்றமும் அடைந்து.... அழைத்து வந்தவர்கள் மீதும், அரசின் மீதும் கோபக்கனலை கக்கிக் கொண்டே தான் வெளியேறினார்கள்.. என்பதை உணர முடிகிறது. வாக்கு வங்கியினை அதிகரிக்கும் மாநாடாக அமையவில்லை!.. சேதாரப்படுத்தும் மாநாடாக அமைந்திருக்கிறது... என்பதை வேதனை உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!.*
*உங்களின் கரம்பற்றி இதயம் தொட்டு பெரிதும் வேண்டுகிற உங்களின் சகோதர உறவு.... தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு இருப்பேன்... நன்றி!.. வணக்கம்!.. *
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com ,தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*
ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் "கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார் முதலமைச்சர் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாடு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, ”தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்தியதற்காகவும், பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதிய உயர்வு மற்றும் குடும்ப ஓய்வூதியம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டதற்காகவும் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு இன்று நடைபெற்றது.
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்புரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "உங்களின் கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார்கள். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டோம்.
#Dravidian_Model
#வெல்வோம்_ஒன்றாக
CM Speech @ JACTTO GEO Conference
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 320, நாள் : 08-02-2026
Speech delivered by the Hon'ble Chief Minister of Tamil Nadu at the vote of thanks conference organized by JACTTO GEO - Press Release No: 320, Date: 08-02-2026
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்கள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை
முதலில் உங்களிடம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நன்றி சொல்லி, நமக்கான உறவை தூரமாக்கிவிடாதீர்கள்! உங்கள் வியர்வைத் துளிகள் மதிக்கப்பட வேண்டும். கண்ணீர்துளிகள் துடைக்கப்பட வேண்டும் என்றுதான், உங்களின் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்!*
மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காகப் பணியாற்றும் நீங்களும் சேர்ந்துதான், அரசாங்கம்! ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும், அமைச்சரவையையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!*
இந்த மகிழ்ச்சி, எனக்குள் மட்டுமல்ல; உங்களுக்குள்ளேயும் இருப்பதை, உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது! நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!*
கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது! ”நிலம் நனைக்கும் வான் போல” அரசு ஊழியர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு மாநாடு போதாது! எனவே, அந்த சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் விரிவாக அல்ல. விளக்கமாக அல்ல. தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.*
மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காகப் பணியாற்றும் நீங்களும் சேர்ந்துதான், அரசாங்கம்! ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும், அமைச்சரவையையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!*
இந்த மகிழ்ச்சி, எனக்குள் மட்டுமல்ல; உங்களுக்குள்ளேயும் இருப்பதை, உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது! நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!*
கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது! ”நிலம் நனைக்கும் வான் போல” அரசு ஊழியர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு மாநாடு போதாது! எனவே, அந்த சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் விரிவாக அல்ல. விளக்கமாக அல்ல. தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.*
இப்படி, அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து நன்மையை மட்டுமே செய்த ஆட்சிதான், தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி! அரசியலில் கொள்கைப் பிடிப்போடு இயங்கும் நாங்கள், மக்கள் நலனுக்காக உருவாக்கும் திட்டங்களை, வெற்றிகரமாக அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் பெருங்கடமையை செய்பவர்கள், அரசு ஊழியர்களான நீங்கள்தான்!*
அதேபோல், ஆசிரியர்கள் செய்வதை பணி என்று சொல்ல மாட்டேன்! நீங்கள் செய்வது தொண்டு! உங்களால்தான், இந்தியாவில் பள்ளிக்கல்வியில் இரண்டாவது சிறந்த மாநிலமாக, நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக்கொண்டு இருக்கிறது*
நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள்தான், உலகம் முழுவதும் நல்ல பணிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து நமக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறார்கள்! இப்படி, இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களை உருவாக்கக்கூடிய, உருவாக்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் நலனைப் பாதுகாக்கும் அரசுதான், திராவிட முன்னேற்றக் கழக அரசு!*
நம்முடைய திராவிட மாடல் அரசில், நாட்டிற்கே முன்னோடியான முத்திரைத் திட்டங்களை செயல்படுத்திகொண்டு இருக்கிறோம். இங்கு நண்பர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள்*
இந்த திட்டங்களால் திராவிட மாடல் அரசுக்கு நற்பெயரும், செல்வாக்கும் கிடைத்திருக்கிறது என்றால், அந்தப் பெருமையில் பெரும்பங்கு அரசு ஊழியர்களான உங்களுக்குதான் இருக்கிறது! அதற்கான எங்களின் நன்றியை சொல்வதற்கான வாய்ப்பாக, இந்த மாநாட்டை நான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்! இந்த மேடையில் நின்று, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நன்றியை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்!*
அரசின் கண்களாக, கரங்களாக செயல்பட்டு வரும் உங்களுக்காக, நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால்,*
கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை, 2022 முதல், ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தி வழங்கியதுடன், ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
உங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், அரசுப் பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறோம்.
நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கிகொண்டு இருக்கிறோம்!*
பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் முதல், பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம், பத்தாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.
அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி முன்பணம் – தொழிற்கல்விக்கு ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும் - கலை மற்றும் அறிவியல் கல்விக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம்!*
அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம், 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிகொண்டு இருக்கிறோம்*
ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வுபெற அனுமதித்து ஆணையிட்டிருக்கிறோம்.*
ஓய்வூதியப் பணிக்கொடையை 20 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்.
ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!*
பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதங்களிலிருந்து, 12 மாதங்களாக உயர்த்தியிருக்கிறோம்.*
பெண் அரசு ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பில் செல்ல நேர்ந்தால், அந்தக் காலத்தையும் தகுதிகாண் பருவமாக கருத வேண்டும் என்று ஆணை வெளியிட்டிருக்கிறோம்.
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி இருக்கிறோம்.*
குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்களின் பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை, ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!*
=அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.*
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்கள் உள்ளிட்ட, இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.*
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் இந்தப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது."*
நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்காக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.*
இது எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுவது போன்று, உங்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய, புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” செயல்படுத்தியிருக்கிறோம*
இந்த அறிவிப்பு வெளியான அன்று கோட்டையில் நாம் இனிப்புகள் பரிமாறிக் கொண்ட, அந்த பாசக் காட்சி, தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை பார்க்காத காட்சி! இவ்வளவு பெரிய திட்டத்தை, எப்படிப்பட்ட சூழலில் நிறைவேற்றியிருக்கிறோம் என்று மற்ற எல்லோரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும்!*
ஒவ்வொரு ஆண்டும், நமக்கான வரிப்பகிர்வை ஒன்றிய அரசு குறைத்துகொண்டே இருக்கிறது! ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட குறைத்துகொண்டு இருக்கிறார்கள்! அந்த நிதியையும் முறையாக வழங்குவதில்லை! ஜி.எஸ்.டி மாற்றங்களால் மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துகொண்டே வருகிறது! இப்படிப்பட்ட சூழலில், எல்லா துறைகளிலும் நலத்திட்டங்களை செய்தாக வேண்டும்!*
வருமானம் குறைவு - செலவு அதிகம், இதுதான் நம்முடைய நிலை! பேரறிஞர் அண்ணாதான் சொன்னார். பெட்டி இருக்கிறது! பூட்டு இருக்கிறது! சாவி இருக்கிறது! ஆனால், பெட்டி காலியாக இருக்கிறது என்று சொன்னார். திட்டமிட்டு செயற்கையாக இந்த நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்! அரசியல் ரீதியாக மட்டுமல்ல, நிர்வாகரீதியாகவும் அவர்களை வெற்றிகரமாக சமாளித்துதான், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிகொண்டு இருக்கிறோம்!*
பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை 22 ஆண்டுகளாக நீங்கள் வைத்துகொண்டு இருக்கிறீர்கள்! யார் ஆட்சியில் இந்த உரிமை பறிக்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில்! அப்போது, நீங்கள் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதா? வியர்வைத்துளி சிந்தி உழைத்த உங்களுக்கு இரத்தக்கண்ணீரை வர வைத்ததுதான், கருணையில்லா அ.தி.மு.க. ஆட்சி! ஆனால், இது அனைவரையும் அரவணைக்கும் கருணையே வடிவான தி.மு.க. ஆட்சி!*
அதனால்தான், உங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவதற்கான, தகுந்த பரிந்துரைகளை வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்*
ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில், ஒரு குழுவை அமைத்தோம். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உங்களிடம் உட்கார்ந்து தொடர்ந்து பேசினார்கள்.*
உங்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், தமிழ்நாட்டின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு என்று எல்லாவற்றையும் பரீசிலனை செய்துதான், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” அறிவித்தோம்!* இந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில், 50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு, பணியாளர்களின் 10 விழுக்காடு பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்!*
50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.*
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 விழுக்காடு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்!*
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல், பணிக்கொடை வழங்கப்படும்.*
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல், பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.*
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர், இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். இனி, இதை கருணை ஓய்வூதியம் என்று சொல்லாமல், உங்களின் உழைப்பிற்கான உரிமைத்தொகை என்றே வழங்குவோம்!*
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு தமிழ்நாடு அரசு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்! இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.*
*இப்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்று, இப்போது சொன்ன அத்தனை செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்!
இந்த ஓய்வூதியத் திட்டம் எவ்வளவு சிறப்பானது என்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் உள்ளிட்ட பலரும் பேட்டிகளை கொடுத்திருந்தீர்கள்! அதையெல்லாம், நீங்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி அவர்கள், ஆட்சியில் இருந்தபோது, அரசு ஊழியர்களை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி பேசினார்? இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்களே… எப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் நான் அதிகம் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை! ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக கூட்டணி அமைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பார்களா? சிந்திச்சுப் பாருங்கள்! ஆனால், நாங்கள் அப்படி இல்லை!*
*எங்களை பொறுத்தவரைக்கும், சொன்னதைச் செய்வோம்! சொல்வதைத் தான் செய்வோம்! செய்து, உங்களின் பாராட்டுகளை பெறுவோம்! நான் உறுதியாக சொல்கிறேன். உங்களின் கோரிக்கைகள் - கனவுகள் - எதிர்ப்பார்ப்புகளை நாங்கள் நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்! உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருவோருக்கான அவசர சுற்றறிக்கை
Urgent circular for those attending the Thank You Conference to be held on behalf of JACTTO GEO to express their gratitude to the Honorable Chief Minister of Tamil Nadu.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
இன்று 02.01.2026 ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை விவரம்
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியான பின்னர் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று அறிவிப்போம்.
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் பேட்டி
>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...
boAt Stone 352 Pro/Stone 358 Pro w/ 14W Signature Sound, Up to 12 Hours Playback, RGB LEDs, TWS Feature, Built-in Mic, BTv5.3, Free Music Streaming on JioSaavn Bluetooth Speaker (Groovy Grey)
திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - ஜாக்டோ ஜியோ
தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் வராததால் அறிவிப்பு
கடுமையான நிதி நெருக்கடியில் இந்த அரசு இயங்கிக் கொண்டு வருகிறது. உங்களின் அனைத்து கோரிக்கைகளும் முதல்வர் இடத்தில் கொண்டு செல்கிறோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
>>> JACTTO GEO அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
NIVEA Soft Light Moisturizer, 300 ml | Instant Hydration with Vitamin E & Jojoba Oil | Non-Greasy Cream for Face, Body and Hands | For Smooth, Healthy Skin
13.12.2025 அன்று நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ (JACTTO GEO) உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டங்கள் வாரியாக பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் விவரம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Dettol Original Bathing Soap Bar (900gm) | 150g (Pack of 6)
திருச்சியில் 06-12-2025 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
Decisions taken at the meeting of JACTTO GEO State High Level Committee Members and District Coordinators held in Trichy on 06-12-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women
06.12.2025 சனிக்கிழமை அன்று திருச்சியில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் காலை 10.00 மணிக்கு நடைபெறும்
>>> Best SmartWatches குறித்த தகவல்கள்...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்தக் கோரி JACTTO GEO போராட்ட அறிவிப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
08-09-2025 JACTTO GEO பெருந்திரள் முறையீடு : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஓய்வூதியக்குழுவிற்கு வழங்கும் கோரிக்கை மனு
08-09-2025 ஜாக்டோ ஜியோ பெருந்திரள் முறையீடு : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஓய்வூதியக்குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக அளிக்கும் மனுவை அந்தந்த Colour xerox எடுத்து மாவட்டங்களில் பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கையொப்பமிட்டு வழங்குவர்
>>> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கும் கோரிக்கை மனு
>>> ஓய்வூதியக்குழுவிற்கு வழங்கும் கோரிக்கை கடிதம்
ஜாக்டோ ஜியோ சார்பாக ஓய்வூதியக்குழுவிடம் பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திடக் கோரி அளிக்கப்படும் கோரிக்கை சாசனம்
Old Pension Scheme Implementation: JACTTO GEO Representation to Pension Committee
Request letter to the Pension Commission on behalf of JACTTO GEO requesting the implementation of the benefit pension scheme
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
08-04-2025 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
இன்று 08-04-2025 சென்னையில் நடந்த JACTTO GEO மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1) 22-04-2025 ல் மாவட்டத் தலைநகரில் பேரணி
2) 24-05-2025ல் மாவட்ட அளவில் ஆயத்தக் கூட்டம்
3) ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வேலை நிறுத்தம்
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
*✍️. தீர்மானம்.1*
இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்:
நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படை தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி. வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது
வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
*✍️. தீர்மானம் 2.*
மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்
தமிழக மீனவர்களை எப்போதும் மதித்துப் போற்றும் இயக்கம், தமிழக வெற்றிக் கழகம். நம் வெற்றித் தலைவர் அவர்களும், தான் எப்போதும் மீனவர்களின் பக்கம் நிற்கும் மீனவ நண்பன் என்றே தன் செயல்பாடுகளால் நிரூபித்து வருகிறார். அந்த உணர்வுடன் மீனவர்களுக்காக எத்தகைய எல்லைக்கும் தமிழக வெற்றிக் கழகம் செல்லும் என்பதையும் இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள். இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போதும் கூட, தாங்கொணாக் கொடுமைக்கு ஆளாகி உள்ள நம் தமிழக மீனவர்கள் கண்ணீருடனும் கண்டனக் குரலுடனும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். ஆனாலும் மீனவர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வு பற்றி. ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இதுவரை யோசித்ததே இல்லை என்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.
குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர். தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
*✍️. தீர்மானம்-3.*
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது:
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் பொதுமக்களையும் விவசாயப் பெருங்குடி மக்களையும் நம் தமிழக வெற்றிக் கழத்தின் வெற்றித் தலைவர் சந்தித்த மறுநாளே, மக்கள் பாதிக்காத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பாக ஒரு விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில், மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் எப்படி என்கிற விளக்கம் இல்லவே இல்லை. விவசாயிகள் நலனுக்கெனத் தனி பட்ஜெட் போடுகிறோம் என்று மார்தட்டும் வெற்று அரசு. 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது முழுக்க முழுக்க மக்கள் நலன் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரான துரோகச் செயலே ஆகும்.
மேலும் இது, சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக இருக்கும் இந்த அரசின் இரட்டை வேடக் கபடதாரிப் போக்கையே காட்டுகிறது. தமிழக மக்கள் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், அரசின் இந்தக் கபட நாடகச் செயலை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. மேலும், புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது
*✍️. தீர்மானம்-4.*
இருமொழிக் கொள்கையில் உறுதி:
அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது
*✍️. தீர்மானம் -5.*
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை:
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை சரியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்ததற்கான தண்டனை என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள்.
மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
*✍️. தீர்மானம் – 6.*
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்:
ஒன்றியப் பிரதமர் அவர்கள் மாநில முதல்வராக இருந்த போது, மாநில வளர்ச்சிக் கூட்டத்தில் பங்கேற்று அந்த மாநில நலனுக்காகக் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரே பிரதமராக இருக்கக் கூடிய ஒன்றிய அரசானது, பிற மாநிலங்களின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பாராளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு, ஒன்றிய அரசின் அதிகாரத்தை மையப்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாநில சுயாட்சியை முடக்கும் வேலையைச் செய்து வருகிறது.
ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறுசீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
*✍️. தீர்மானம் 7*
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை:
மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச் சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள். 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது
*✍️. தீர்மானம் 8.*
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்:
அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக்கணக்காகப் போராடி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இப்போராட்டத்தை இந்த வெற்று விளம்பர மாடல் அரசு கண்டுகொள்ளாமல், மறைமுகமாகப் பழிவாங்குவது போல் நடந்துகொள்கிறது. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று போலி வாக்குறுதி அளித்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டு, மீண்டும் அவர்களைப் போராட்டக் களத்தில் தள்ளியதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறது
*✍️. தீர்மானம் – 9*
சட்டம் ஒழுங்கு சீர்கேடு அரசுக்குக் கண்டனம்:
கள்ளம் கபடமற்ற பச்சிளம் சிறுமிகள் முதல் பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை. பள்ளிச் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கொடூர வன்முறைச் செயல்களில் ஈடுபடும் கட்டுப்பாடற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தாராளமாகிவிட்டது. வேறு எப்போதும் இல்லாத வகையில் இத்தகைய கொடும் சூழல் மேலும் மேலும் பெருகி வருதலுக்குக் காரணம், சட்டம் ஒழுங்கு சீர்கேடே அன்றி வேறில்லை.
இந்தச் சீர்கேட்டிற்கு ஒரே காரணம், கையாலாகாத தற்போதைய ஆளும் அரசு மட்டுமே. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
*✍️. தீர்மானம் -10*
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை வேண்டும்:
ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் அமலாக்கத் துறை, டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் / நபர்கள் சார்ந்த இடங்களில் நடத்திய சோதனையில், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கணக்கில் வராத. சட்டத்திற்குப் புறம்பான முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
ஒன்றிய பா.ஜ.க. அரசும் தமிழ்நாட்டின் அரசும் மறைமுக உறவுக்காரர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் முறையான, நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. டாஸ்மாக் நிறுவனம் மீது தொடர்ச்சியாக எழுந்துவரும் முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டே வருகின்றன. டாஸ்மாக் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாது, ஊழலை ஊக்குவிக்கும் வகையிலான அதிகார மையமாகவே அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது.
ஆகவே. டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி. உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி. பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
*✍️. தீர்மானம் – 11.*
சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்:
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஒரே வழியான, உண்மையான சம நீதி. சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்காமல், தெலங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை அந்தந்த மாநில அரசுகளே தங்களது சொந்தச் செலவில் நடத்தியுள்ளன.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் திமுகவினரும், பாஜகவினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
*✍️. தீர்மானம் 12.*
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு:
நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள். இதுவரை சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சொந்த நாட்டிலேயே அடிமைகள் போலச் சுதந்திரம் அற்றவர்களாக இருக்க வேண்டிய நிலைமை. அவர்களுக்குக் காலங்காலமாக இருந்து வருகிறது.
எனவே, இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும். அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
பொது வாக்கெடுப்பு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய ஒரே வழி என்பதை மீண்டும் மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் தீர்க்கமாக நம்புகிறது. மேலும், இப்பொது வாக்கெடுப்பை, இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தி, இலங்கைத் தமிழர்கள் பக்கம் நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்பதையும். தனது ஏப்ரல் மாத இலங்கைப் பயணத்தின்போது இது குறித்தும் இலங்கை அரசிடம் ஒன்றியப் பிரதமர் உறுதியுடன் வலியுறுத்த வேண்டும் என்பதையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
*✍️. தீர்மானம்-13.*
பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக:
சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத்தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
*✍️ தீர்மானம் -14*
கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது
*✍️. தீர்மானம் -15.*
தலைவருக்கே முழு அதிகாரம்:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர் அவர்கள், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள். சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவர் அவர்களுக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது
*✍️. தீர்மானம்-16.*
கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்:
நம் கழகத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர். கொள்கைப் பரப்புச் செயலாளர், செய்தித் தொடர்பாளர்கள், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள். கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது
*✍️. தீர்மானம் 17.*
கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மீதும், கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டிருந்த, கழகச் செயல்வீரர்கள். திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் திரு. U.P.M.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அறிவிப்பு
JACTTO GEO State Coordinators Meeting Announcement
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், 08.04.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சென்னை திருவல்லிக்கேணி கட்டிடத்தில் நடைபெற உள்ளது - ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் (சீனிவாசன்)
மார்ச் 30! யாருக்கான இறுதிக் கெடு? திமுகவிற்கா? ஜாக்டோ-ஜியோவிற்கா?
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
March 30! Whose deadline is it? DMK's? JACTO-GEO's?
*இந்த இறுதிக் கெடு JACTTO-GEOவிற்கும் சேர்த்துத்தான்*. மார்ச் 30க்குள் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கை எதையும் MKS நிறைவேற்ற 99.9% வாய்ப்பேயில்லை.
ஒருவேளை மார்ச் 30ல் JACTTO-GEO கூடினால். . . *JACTTO-GEOவில் உள்ள திமுக மோகத்தினரை அடக்கிவைத்துவிட்டு* அடுத்தகட்ட உண்மையான & தீவிரமான களப் போராட்டத்தை அறிவித்தால் மட்டுமே JACTTO-GEOவின் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் JACTTO-GEO பதாகையை மீண்டும் உணர்வோடே உயர்த்திப்பிடிக்க முன்வருவர்.
மேலும், மார்ச் 23ல் பெருமளவில் களத்திற்கு வருவார்களா என்பதும் ஐயத்திற்குரியதே! ஏனெனில், 6 ஆண்டுகளாக. . . அவ்வளவு ஏன் நேற்று முன்தினம் (13.03.25) இரவு வரை JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்களின் நம்பிக்கை நாடகங்களைப் பார்த்துப் பார்த்து JACTTO-GEO பதாகையின் மீதான நம்பிக்கையையே இழந்து வெறுத்துப் போயுள்ளனர் ஆசிரியர்களும் - அரசு ஊழியர்களும்.
'நாங்கள் நாடகமாடவில்லை; நம்ப வைக்கப்பட்டே நாங்களும் ஏமாற்றப்பட்டுள்ளோம்' என்று கூற JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருக்குக்கூட அடிப்படை உரிமை இல்லை என்பதே 100% உண்மை.
'அண்ணா தந்த INCENTIVEஐ தருவேன்' என்ற MKS, 2021ல் தனது முதல் பட்ஜெட் அறிப்பிலேயே தன் வாக்குறுதியைப் பொய்ப்பித்து INCENTIVEஐ பறித்தது தொடங்கி, 2025 வரை நம்பிக்கைக்குரிய ஒற்றை உரிமை மிட்பைக்கூட உறுதிப்படுத்திடாத MKSஐ மட்டுமே மீண்டும் மீண்டும் நம்புகிறோம். . . . நம்புகிறோம். . . . என்று கூறிக்கூறியே இன்று 2025ல் MKSன் இறுதி பட்ஜெட் வரை வலுவான எந்தவொரு போராட்டத்தையும் நடத்திடாதபடி JACTTO-GEO பதாகையின் தீரத்தைத் திட்டமிட்டே வீணடித்துவிட்டு இன்று நாங்களும் நம்பி ஏமாற்றப்பட்டோம் என்றால், அதை நம்ப உறுப்பினர்கள் எவரும் தயாராக இல்லை என்பதே கள உண்மை.
எனவே, தங்களால் இழக்க வைக்கப்பட்ட JACTTO-GEOவின் தீரத்தை அதன் அடிப்படை உறுப்பினர்களின் போராட்டக் குணத்தை மீட்பதன் வழியே நிலைநிறுத்த, முதற்கண் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மீதான நம்பகத்தன்மையை உறுப்பினர்கள் மத்தியில் மெய்ப்பித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆனால், இதையெல்லாம் அவர்கள் உணர்ந்துள்ளனரா? அல்லது தங்களைச் சுற்றி வைத்துக்கொண்டுள்ள சேவகர்களின் புகழ் மொழியை மட்டுமே கேட்டுச் செயல்படப்போகின்றனரா? என்பது தான் தெரியவில்லை.
மேலும் கள நிலவலரம் இவ்வளவு மோசமாக, ஒருவகையில் JACTTO-GEO உறுப்புச் சங்கங்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே முக்கிய காரணம் என்பதே கசப்பான உண்மை. 6 ஆண்டுகளாக நடக்கும் அனைத்தையும் நன்கு அறிந்திருந்தும் தாங்கள் சந்தா செலுத்தும் தங்களது சங்கத் தலைமைகளை உரிமை மீட்பிற்கு நேராக உந்தித் தள்ள முன்வராததோடே, மீறி உந்தித் தள்ள எவரும் முன் வந்தால் அவர்களை சங்க விரோதிகளாகக் கட்டமைக்கும் செயல்படாத் தலைமைகளின் அதிகார மொழிக்கு அடிமையாகி உந்தித் தள்ள முன்வருவோரைத் தூற்றி தங்களது நிலையை மேலும் மோசமாக்கிக் கொள்ளத் தங்களையுமறியாது - சிலர் நன்கு அறிந்தே தூபம் போட்டு வந்துள்ளனர்.
இப்போதாவது அடிப்படை உறுப்பினர்கள் தங்களது பலத்தையும், களத் தேவையையும் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லையே!
ஏனெனில் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில். . . .
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசியல் அனாதைகளே!
கொள்வாரும் இல்லை! கொடுப்பாரும் இல்லை!!
*JACTTO-GEO என்பது மதிப்பிழந்துவிட்ட பதாகையே! தீரமும் இல்லை! தீவிரமும் இல்லை!!*
*இந்நிலை மாறாது, நாம் தான் மாற்றியாக வேண்டும்.*
நேற்று (13-03-2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்த பிறகு அளித்த பேட்டி
Yesterday (13-03-2025) JACCTO GEO executives interview after meeting with Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin at the Secretariat
13-03-2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்த பிறகு அளித்த பேட்டி
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஏமாற்றினால் 2026ல் திமுக ஏமாந்து விடும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்
DMK will be cheated in 2026 if it cheats Teachers, Government Employees - JACTTO GEO coordinator Mayavan
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும...