கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024...

 


சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024.


பொருள்‌: திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ - 2024-2025 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்து சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - சார்பு.


பார்வை 

1... குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ 2009 மற்றும்‌ தமிழ்நாடு விதிகள்‌ 2011


2.  அரசாணை (நிலை) எண்‌.271, பள்ளிக்கல்வித்துறை (சி2) நாள்‌. 25:10.2012.


3. அரசாணை (நிலை) எண்‌.60, பள்ளிக்கல்வித்‌ (எக்ஸ்‌ 2) துறை நாள்‌. 0104.2013.


4. அரசாணை (நிலை) எண்‌.59. பள்ளிக்‌ கல்வித்‌ (பொ நூ 2) துறை நாள்‌. 12.05.2014.


5. அரசாணை (நிலை) எண்‌.66, பள்ளிக்‌ கல்வித்துறை நாள்‌. 07.04.2017.


6. சென்னை - 06, தமிழ்நாடு தனியார்‌ பள்ளிகள்‌ இயக்குநர்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்கல்வி உரிமைச்‌ சட்ட மாநில முதன்மைத்‌ தொடர்பு அலுவலரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌:1872/சி12024, நாள்‌.0104.2024.


குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ - 2009-ன்‌ பிரிவு 12(1) (6) படியும்‌, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்‌ கல்வி உரிமை விதிகள்‌ 2011 விதி 8 மற்றும்‌ 9 படியும்‌ சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ உள்ள நுழைவு நிலை வகுப்பில்‌ (Entry Level Class) 25 விழுக்காடு இடங்கள்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு வருடமும்‌ குழந்தைகள்‌ சேர்க்கப்பட்டு வருகின்றனர்‌. இக்கல்வியாண்டில்‌ (2024-2025) விண்ணப்பித்ததில்‌ தகுதியுள்ள குழந்தைகளில்‌ 25% இட ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவாக உள்ள பள்ளிகளில்‌ நேரடியாக சேர்க்கையும்‌, 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பம்‌ பெற்றுள்ள பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையிலும்‌ தெரிவு செய்து சேர்க்கை செய்யப்படும்‌.


குலுக்கல்‌ முறையில்‌ தெரிவு செய்யும்‌ முறையானது 28.05.2024 அன்று இணைப்பில்‌ உள்ளவாறு தலைமை ஆசிரியர்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌//ஆசிரியர்‌ பயிற்றுநர்‌ /வருவாய்‌ துறை அலுவலர்‌ முன்னிலையில்‌ நடைபெறும்‌. எனவே இணைப்பில்‌ உள்ள தலைமை ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌,/ஆசிரியர்‌ பயிற்றுநர்‌ / வருவாய்‌ துறை அலுவலர்‌ சம்மந்தப்பட்ட பள்ளிகளில்‌ 28.05.2024 அன்று காலை 9.00 மணிக்குச்‌ சென்று எவ்வித புகாருக்கும்‌ இடமளிக்காமல்‌, இத்துடன்‌ இணைக்கப்பட்ட தனியார்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதல்களைப்‌ பின்பற்றி குலுக்கல்‌ முறையில்‌ குழந்தைகள்‌ தெரிவு செய்திடுவதை உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...