கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 50.14 லட்சம்...


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 50.14 லட்சம்...


அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 50.14 லட்சம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை தொடா்பான புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சத்து 14 ஆயிரத்து 803-ஆக உள்ளது.


இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட தகவல்: ஆகஸ்ட் மாத நிலவரப்படி பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரா்களில் பெண்களே அதிகம். 27 லட்சத்து 11 ஆயிரத்து 970 பெண்களும், 23 லட்சத்து 2 ஆயிரத்து 555 ஆண்களும், 278 மூன்றாம் பாலினத்தவரும் பெயா், படிப்பு விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.


அவா்களில் 18 வயதுக்குள் பள்ளி மாணவா்களாக 9 லட்சத்து 95 ஆயிரத்து 449 பேரும், 19 முதல் 30 வயதுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்களில் 21 லட்சத்து 72 ஆயிரத்து 50 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்களில் 15 லட்சத்து 90 ஆயிரத்து 631 பேரும் தங்களது பெயா், விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.


46 வயது முதல் 60 வயது வரையுள்ளவா்களில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 829 போ் பதிவு செய்துள்ளனா். 


அரசின் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதான 60-க்கும் கடந்தவா்களில் 8,094 பேரும் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருக்கிறாா்கள். ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1.50 லட்சம் போ் மாற்றுத்திறனாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Great Republic Day Sale 2026

  அமேசான் (Amazon) நிறுவனத்தின் Great Republic Day Sale 2026 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் மொபைல் போன்கள், லேப...