காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை - மாலையில் காணொளி கூட்டத்தில் ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு - தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா? - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்? - ஆசிரியர் கூட்டணி அறிக்கை...
*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்?..*
*காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை!.. மாலையில் காணொளி கூட்டத்தில் வேலைநிறுத்தம்.. ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு!.. தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா?..*
*AIFETO...23.09.2024.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண் 36/2001.*
*மாண்புமிகு பள்ளிகளுக்குறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 23.9.2024 இன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்கள் கருத்தொருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.*
*இன்று காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்துப் பதிவினை நாளை மாலை விரிவாக வெளியிட இருக்கிறோம்!..*
*இன்று மாலையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் பத்தாம் தேதி டிட்டோஜாக் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியப் பிடித்தத்தை இந்த மாதமே பிடித்தம் செய்து அறிக்கை அளித்திட வேண்டும் என்று அழுத்தமான குரலில் தெரிவித்துள்ளார்.*
*பேச்சுவார்த்தையில் விவாதம் செய்தவாறே தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காணொளிக் கூட்டத்திலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ₹5400/- தர ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரெல்லாம் ₹5400/- தர ஊதியம் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய பணிப்பதிவேட்டை எடுத்துக்கொண்டு நாங்கள் வரச் சொல்கின்ற நாளில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழுத்தத்தின் பெயரில்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதை நாம் அறிகிறோம்!.. சென்ற வாரம் வரை அரசாணை 243 இல் திருத்தம் செய்ய முடியாது என்று கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தேவையான திருத்தத்தை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களும் 100% அதில் உறுதியாக உள்ளார் என்பதை அறிகிறோம்.*
*இன்றைய பேச்சுவார்த்தையில் நடைபெற்ற எல்லாவற்றையும் தனிப்பதிவாக இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு வெளியிட உள்ளோம். போராட்டத்தினை ஒத்தி வைத்தது தவறு என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் நினைக்கிறாரா? இல்லை அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்று நினைக்கிறாரா?..*
*பரிந்துரை செய்ய வேண்டிய தொடக்கக் கல்வி இயக்ககம் எதிர்க்கட்சி வழக்கறிஞர்களைப் போல் செயல்படுவது முறையுமல்ல; மாண்புமல்ல; என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.*
*அவரவர்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எல்லாம் மனம் போன போக்கில் பதிவு செய்திட வேண்டாம்!.. 100% உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதை உங்கள் மீது கொண்டுள்ள உரிமை உறவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*
*சில நேரங்களில் கூட்டமைப்புகள் எடுக்கிற முடிவுகள் பாதுகாப்பான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். வெளிப்படையாக எல்லாவற்றையும் பதிவு செய்ய இயலாது!.*
*தனிப்பதிவில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட உள்ளோம். அதுவரை பொறுத்திருப்போம்!..*
*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் தனிக்கவனம் மேற்கொண்டு தொடக்கக்கல்வி இயக்ககத்தின் முடிவுக்கு தீர்வு காண வேண்டுகிறோம்!..*
*இயக்கத்தின் மூத்தத் தலைவர்...*
*அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com. தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5.*