கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி



விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி


சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை.


 - உடனடியாக அமலுக்கு வருவதாக BCAS அறிவிப்பு!


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானத்தில் சிறப்பு சலுகை அறிவித்ததுடன், அவை உடனடியாக அமலுக்கு வருவதாக சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


இன்னும் சில தினங்களில் கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில், சபரிமலைக்கு விமானத்தில் பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக தற்போது புதிய நடைமுறையை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


 குறிப்பாக, தேங்காய் சரக்கு பட்டியலில் இடம் பெறும் என்பதால் அதனை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.


ஆனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்லும் போது அதில் தேங்காய் இருக்கும் என்பதால் விமானத்தில் எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி எடுத்து செல்ல அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், தற்போது முதல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prompt

  கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prom...