கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Attention devotees going to Sabarimala


சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு 


முக்கிய கோவில்களில் தரிசன நேரம்


காடாம்புழா பகவதி கோவில் :

காலை: 5 மணி ➖ 11 மணி

மாலை : 3:30pm ➖ 7pm


குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் :

காலை: 3 மணி ➖ 1 மணி

மாலை: 3 மணி ➖ இரவு 9 மணி


திருப்பரையாறு ஸ்ரீ ராமசுவாமி கோவில் :

காலை: 4.30 மணி ➖ 12 மணி

மாலை : 4.30Pm ➖ 8:30pm


கொடுங்கள்ளூர் பகவதி கோவில் :

காலை: 4 மணி ➖ 12 மணி

மாலை: 4.30 மணி ➖ இரவு 8 மணி


சோட்டாணிக்கரை பகவதி கோவில் :

காலை: 3:30am ➖ 12pm

மாலை : 4Pm ➖ 8pm


துணை ஈர்ப்பு :

இரவு: 8.30 மணி


வைக்கம் மகாதேவர் கோவில் :

காலை: 4 மணி ➖ 12 மணி

மாலை: 5 மணி ➖ இரவு 8 மணி


கடுதுருத்தி மகாதேவர் கோவில் :

காலை: 4 மணி ➖ 12 மணி

மாலை: 5 மணி ➖ இரவு 8 மணி


மல்லியூர் கணபதி கோவில் :

காலை : 4.30AM ➖ 12:30pm

மாலை: 4.30 மணி ➖ இரவு 8 மணி


ஏத்தமானூர் மகாதேவர் கோவில் :

காலை: 4 மணி ➖ 12 மணி

மாலை : 5 மணி ➖ இரவு 8 மணி


கிடாங்கூர் சுப்ரமணியர் கோவில்: 

காலை: 5 மணி ➖ 11:30 மணி

மாலை: 5 மணி ➖ இரவு 8 மணி


கடப்பத்தூர் மகாதேவர் கோவில் :

காலை: 4 மணி ➖ 12 மணி

மாலை : 4Pm ➖ 8pm


எருமேலி சாஸ்தா கோவில் :

காலை: 4 மணி ➖ 12 மணி

மாலை : 4Pm ➖ 8pm


நிலக்கல் மகாதேவர் கோவில் :

காலை: 4 மணி ➖ 12 மணி

மாலை : 4Pm ➖ 8pm


பம்பா கணபதி கோவில் :

காலை: 3 மணி ➖ 1 மணி

மாலை : 4Pm ➖ 11pm


சபரிமலை சன்னிதானம் :

3AM to 1pm

3 pm to 11pm


நெய் அபிஷேகம் : 

காலை 3.20 மணி ➖ 11.30 மணி

ஹரிவராசனம் :

இரவு 10.50 மணி


நிலக்கல் பம்பை KSRTC கட்டணம்

சாதாரண - ரூ 40

ஏசி தாழ்தளம் - ரூ 90

மின்சாரம் - ரூ100


பம்பை கணபதிகோவில் அருகே உள்ள ஹனுமான் கோவிலின் முன் வெர்ச்சுவல் க்யூ சரிபார்ப்பு பணிகள்.


மினரல் வாட்டர் பாட்டில்கள் கிடைக்காது. குடிநீர் கவுண்டரில் இருந்து தண்ணீர் சேகரிக்க ஒரு எவர்சில்வர் / அலுமினிய பாட்டிலை எடுத்துச் செல்லவும். 


அப்பாச்சி மேடு ஷெட்களில் இது வரை தண்ணீர் வசதி இல்லை.


3-4 மணி நேரம் Qவில் நிற்க நேரலாம். கைவசம் சிற்றுண்டி வைத்து கொள்ளவும்


முடிந்தவரை பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் 

மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் உள்ளன.


உரக்குழி தீர்த்த நுழைவாயில், அழுதை, முக்குழி துவக்கங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக மாலை 4 மணி வரை மட்டுமே கடந்து செல்ல இயலும்


பம்பாவிலும் இலவச உணவு உண்டு.  சன்னிதானத்தில் உள்ள மாளிகைப்புரம் கோயிலுக்குப் பின்புறம் பெரிய அன்னதான மண்டபம் உள்ளது. அருகே கழிப்பிட வசதிகள் உள்ளன


நடைபந்தலில் BSNL wifi வசதி 30 நிமிடத்திற்கு இலவசம்

 

எல்லாவர்க்கும் நல்ல யாத்திரை காலம் மற்றும் திவ்ய தரிசனம் அமையட்டும்.

  

சுவாமியே சரணம் ஐயப்பா...


Special buses run to Sabarimala for 60 days - TNSTC



60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்


முன்பதிவு மற்றும் விபரங்களை tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறியலாம்.


சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.


SETC சார்பில் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து படுக்கை வசதி, மிதவை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிப்பு. 


குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி உண்டு.


Booking for the hostel rooms built by Arulmiku Subramania Swamy temple in Tiruchendur started from 29-10-2024 - TNHRCE Press Release


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் திருச்செந்தூரில் நிர்வகிக்கப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு 29-10-2024 முதல் தொடக்கம்...



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு 29-10-2024 முதல் தொடக்கம் - அறைகள் வாடகை குறித்த தகவல்கள் - இந்து சமய அறநிலையத் துறை - செய்தி வெளியீடு...



Booking for the hostel rooms for devotees built by Arulmiku Subramania Swamy temple in Tiruchendur will start from 29-10-2024 - Details of Room Rent - TNHRCE Press Release...



>>> இந்து சமய அறநிலையத் துறை - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி



விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி


சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை.


 - உடனடியாக அமலுக்கு வருவதாக BCAS அறிவிப்பு!


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானத்தில் சிறப்பு சலுகை அறிவித்ததுடன், அவை உடனடியாக அமலுக்கு வருவதாக சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


இன்னும் சில தினங்களில் கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில், சபரிமலைக்கு விமானத்தில் பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக தற்போது புதிய நடைமுறையை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


 குறிப்பாக, தேங்காய் சரக்கு பட்டியலில் இடம் பெறும் என்பதால் அதனை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.


ஆனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்லும் போது அதில் தேங்காய் இருக்கும் என்பதால் விமானத்தில் எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி எடுத்து செல்ல அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், தற்போது முதல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Thiruchendur Murugan Temple - Opening of Yatri Niwas - Room Booking Procedure...



 திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு - அறைகளை முன்பதிவு செய்யும் முறை...


Thiruchendur Murugan Temple Opening of Devotees Hostel - Room Booking Procedure...


திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு.. ரூம்களை எப்படி புக்கிங் செய்வது ?


புதிய பக்தர்கள் தங்கும் விடுதி வசதிகள்:


இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில்


• குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bedrooms),


• 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks),


• ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages),


• சமையல் அறையுடன் கூடிய உணவகம்,


• ஓட்டுநர்கள் ஓய்வு அறை,


• வாகனங்கள் நிறுத்துமிடம்,


• மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.



*கட்டணம் எவ்வளவு தெரியுமா.?*


திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன் கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது.


2 பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய  டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவர் 100 முதல் 150 ரூபாய் கட்டணத்தில் தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


முன்பதிவு செய்வது எப்படி.?


திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்க விரும்பும் நபர்கள் நேரடியாக கோவில் தங்குமிட வசதி அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது வெளியூர் பக்தர்கள்  https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற திருச்செந்தூர் கோயிலின்  அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


ஆனால் கோயில் தங்கும் விடுதி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செயவதற்கான வசதிகள் இணைக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.



மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

 மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...



புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம்...



>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா - அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பேட்டி...

 


அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா - அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பேட்டி...


"முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். 


முதற்கட்ட பயணம் வரும் ஜனவரி 28ஆம் தேதி துவங்குகிறது'' என அமைச்சர் சேகர்பாபு நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட துறை நிலை ஓய்வூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.


 இப்புதிய திட்டத்தின் மூலம் 2,646 துறை நிலையிலான ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.


 இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில், அறுபடை திருத்தலங்களுக்கு பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இலவச சுற்றுலா:


பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:


ஆட்சி அமைந்து இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 304 நிகழ்ச்சி நடந்து உள்ளது.


 முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். 


முதற்கட்ட பயணம் வரும் ஜனவரி 28ஆம் தேதி துவங்குகிறது.


இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர்கள்.


ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.


60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


 ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 200 பேர் கட்டணம் இல்லாமல் முழுமையாக 50 லட்சம் ரூபாய் செலவில் அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.


இவ்வாறு அவர் கூறினார்.


ஆறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு (A special compilation of the benefits of worshiping Arupadai Murugan)...



 அறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு...


1. திருப்பரங்குன்றம் :


இங்கு முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.


2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்):


இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.


3. திரு ஆவினன்குடி (பழனி):


இங்கு ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனி ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.


4. சுவாமிமலை (திருஏரகம்):


இங்கு தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.


5. திருத்தணிகை (குன்று தோராடல்):


இங்கு குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.


6. பழமுதிர்ச்சோலை :


இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு...


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...



சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...


 சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு....


கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்...


 காடாம்புழா  பகவதி கோயில்

 காலை : 5am ➖ 11am

 மாலை : 3:30Pm ➖ 7pm


 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்

 காலை : 3 மணி ➖ 1 மணி

 மாலை 3 மணி ➖ இரவு 9 மணி


 திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்


 காலை : 4.30AM ➖ 12pm

 மாலை : 4.30Pm ➖ 8:30pm


 கொடுங்களூர் பகவதி கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை : 4.30Pm ➖ 8pm


 சோட்டானிக்கரை பகவதி கோயில்

 காலை : 3:30AM ➖ 12pm

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி


 கீழ்க்காவு குருதி

 இரவு: 8.30 மணி


 வைக்கம் மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி


 கட்டுருத்தி மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி


 மல்லியூர் கணபதிகோயில்

 காலை : 4.30AM ➖ 12:30pm

 மாலை : 4.30Pm ➖ 8pm


 ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி


 கிடங்கூர் சுப்ரமணியகோயில்

 காலை : 5AM ➖ 11:30am

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி


 கடப்பட்டூர் மகாதேவகோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி


 எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி


 நிலக்கல் மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி


 பம்பா கணபதிகோயில்

 காலை : 3 மணி ➖ 1 மணி

 மாலை 4 மணி ➖ 11 மணி


 சபரிமலை சன்னிதானம்

 நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am

 ஹரிவராசனம் : இரவு 10.50


 நிலக்கல்🔁 பம்பை🔁 நிலக்கல் KSRTC கட்டணம்

 சாதாரண பேருந்து  ரூ40

 ஏசி பேருந்து  ரூ90

 பேட்டரி பேருந்து  ரூ100


 வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை  ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.


ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..  


 பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து தூய்மையை காக்கவும்


 மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..


 உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்ககப்படும்


 எல்லாக் கோயில்களிலும் பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயிலுக்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதான மண்டபம் உள்ளது.


சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில் (sivapuranam lyrics tamil)...

  சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil


 

சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில் (sivapuranam lyrics tamil)...


தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் என்னும் தேன்….


திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்


திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)


வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி  (15)


ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,

எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)


வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)


மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)



விலங்கு மனத்தால், விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)


தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரானே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)


பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)



மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)


திருச்சிற்றம்பலம்!!!


தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!


 ஓம் நமசிவாய… சிவாய நமஹ… திருச்சிற்றம்பலம்…


சிவபெருமான் காயத்ரி மந்திரம் 1


ஓம் தத்புருஷாய வித்மஹே 

மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்...


சிவபெருமான் காயத்ரி மந்திரம் 2

ஓம் த்ரயம்பகாய வித்மஹே 

ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்



>>>கார்த்திகை தீபம் ஏற்றும் முறையும் பலனும்!

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
தீப லட்சுமி துதி
1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே
ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலைஇருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.
2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே
எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே... எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.
3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). அவர் வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.
4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:
நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும்.
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
 அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
திருவிளக்கு பூஜை விதிமுறை
* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
விளக்கு பூஜை மாத பலன்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.
சித்திரை - தானிய வளம்.
வைகாசி - செல்வச்செழிப்பு.
ஆனி - திருமண பாக்கியம்.
ஆடி - ஆயுள்பலம்.
ஆவணி - கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி - கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி - நோய் நீங்குதல்
கார்த்திகை - புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி - ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை - எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி - துன்பம் நீங்குதல்.
பங்குனி - ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.
எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
பொட்டு வைக்கும் முறை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
எந்த திசை என்ன பலன்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
இவர்களுக்குரிய எண்ணெய்
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்.

>>>இன்று கார்த்திகைதீபம்...

விளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமே "பெரிய கார்த்திகை' எனப் போற்றப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய சிவன், தனிப்பெருங்கருணையோடு நமக்கு அருள் புரியும் நாள் திருக்கார்த்திகை.
இறைவனுக்கு நைவேத்யம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. கார்த்திகைக்குரிய பிரசாதமாக கார்த்திகைப் பொரியை இறைவனுக்கு படைப்பது மரபு. வெல்லம் சேர்த்த பொரி உருண்டையோடு, அப்பம், பாயாசம், பிடிகொழுக்கட்டை ஆகியவையும் நைவேத்யத்தில் இடம்பெறும். திருக்கார்த்திகை நாளில் பிரதான திருவிளக்கோடு இருபுறமும் துணை விளக்குகளை அவசியம் ஏற்றவேண்டும். வீட்டு வாசலிலும், வீட்டுக்குள்ளும் முக்கிய இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும். அப்போது, கைக்குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சாம்பிராணி, பத்தி போன்ற தூபதீபங்களை முதலில் விநாயகருக்கும், பின் திருவிளக்கு ஜோதிக்கும் காட்டி, பின் மற்ற தெய்வப்படங்களுக்கு காட்ட வேண்டும். இன்று மாலை வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன், விளக்கிற்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும். விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்துக் கொள்ள வேண்டும். இதனால், வீட்டில் செல்வம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன. கார்த்திகை காலம் மட்டுமின்றி, விளக்கேற்றுவது எப்போதுமே நன்மை தரும். தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். குறிப்பாக சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் உகந்தவை. கல்வியில் உயர்வு, திருமணத்தடை நீங்க இந்த வேளையில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தரே பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, ஞானசம்பந்தர், அவள் மீண்டும் உயிர் பெறுவதற்காகப் பதிகம் பாடினார். அதில்,"விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்' என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.இன்று நம் வீடுகளில் ஏற்றும் கார்த்திகை தீபம், இனி நடக்கப் போகும் நாட்களில் எல்லாம் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கட்டும்.

>>>பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

விநாயகர் இவ்வளவு தகவல்களா
* "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார்.
* மூவரும் தேவரும் போற்றும் தனிப்பெருந்தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர் போக்கும் கடவுள். அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியும் கருணைக்கடல். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.
* விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.
* விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
* விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார்.
* விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.
* கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
* விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. அருகம்புல் இட்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் காய்ச்சல் தீரும். யோகிகள் யோகப்பயிற்சியில் விளையும் சூடு தணிய அருகுக்கஷாயம் அருந்துவார்கள். இதற்கு "மூதண்டக் கஷாயம்' என்று பெயர்.
* விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார்.
* விநாயகரின் சக்தியாகிய வல்லபை மாரீச முனிவரது புதல்வி.

தோப்புக்கரணம் பிறந்த கதை:
ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.

விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

ஐந்து சுவாமி பூஜை:
பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

எங்கும் இவரது அருளாட்சி:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், ""பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,'' என்று இவரிடம் போய் நிற்பார்கள். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லுகின்ற வழியெல்லாம் நமக்குத் துணையாக இருப்பவரும் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப் பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சிதான் நடக்கிறது.

இழந்த பொருளை தரும் விநாயகர்:
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...