கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Magizh Mutram - User Manual for House System


மகிழ் முற்றம் - பயனர் கையேடு


Magizh Mutram - User Manual for House System


User Manual for House System



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



💐💐💐💐💐

மகிழ் முற்றம்

பள்ளி உறுதிமொழி


நாங்கள், மாணவத் தலைவர்களாக, மாணவர் குழு அமைப்பின் (House System) மதிப்புகளை உணர்ந்து செயல்படுவோம்.


கற்றலிலும், வாழ்க்கைத் திறன்களிலும் சிறந்து விளங்குவோம். எங்கள் சக மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் திகழ்வோம்.


ஒற்றுமையுடன் செயல்பட்டு, எங்கள் பள்ளியின் பெருமையை காப்போம் என உறுதியேற்கிறோம்...👍👍👍🙏.


மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் சார்ந்து பள்ளிகளில் மகிழ் முற்றம் STUDENTS  HOUSE SYSTEM  என்ற பெயரில் ஐந்து குழுக்கள்*

🔴🟡🟢🔵⚪ *அமைத்தல்-எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்-நாளை நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் மற்றும் காலை வணக்கக் கூட்டத்தில் மாணவத் தலைவர்கள் HOUSE CAPTAIN மற்றும் குழுவின் பொறுப்பு ஆசிரியர்களை HOUSE HEAD TEACHER குழுவின் கொடியுடன் அறிமுகம் செய்து புகைப்படம் எடுத்து EMIS ல் பதிவேற்றம் செய்தல்*


🔴🟡🟢🔵⚪

 *அனைத்து அரசு/அரசு நிதி உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்/வட்டாரக் கல்வி அலுவலர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:*

*

🔴🟡🟢🔵⚪

ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கும் மற்றும் அம் மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும் கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்பு காரணமாக அமைகின்றது என்பதை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆளுமை திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந க எண்: 32841/எம்1/இ1/2024 நாள்: 01.102024 நாளிட்ட செயல்முறைகளின் படியும், அதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் மதிப்புமிகு இணை இயக்குனர் (என் எஸ் எஸ்) காணொலி கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்ட அறிவுரைகள் அடிப்படையிலும் அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் *மாணவர் குழுக்கள் மகிழ் முற்றம்* என்ற பெயரில்

 *பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்படுவார்கள்* . 


🔴🟡🟢🔵⚪

மாணவர்கள் குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை மற்றும் வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவைகளை வளர்த்தெடுப்பதுதான் மாணவர் குழு அமைப்பின் முதன்மை நோக்கமாகும்.


 🔴🟡🟢🔵⚪விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பால் சமூக உணர்வை ஊக்குவிப்பதற்கும் குழு பணியை வளர்ப்பதற்கும் பல்வேறு கல்வி மற்றும் கல்விச்சாரா செயல்பாடுகள் மூலம் மாணவர் தலைமைப் பண்பை ஊக்குவிப்பதற்கும், தலைமைத்துவம் பங்கேற்பு மற்றும் ஆரோக்கியமான போட்டிகளில் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை திறன் மேம்பட மாதிரி சட்டமன்ற மற்றும் மாதிரி  பாராளுமன்றம் நடத்தப்படுதல் போன்றவை இக்குழுவில் மூலமாக செயல்படுத்த ஏதுவாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 *அமைக்கப்பட வேண்டிய மாணவர் குழுக்கள் பெயர் விவரம் மற்றும் குழுக்களின் நிறங்கள்* 

🔴🟡🟢🔵⚪

அதாவது நிலங்களின் அடிப்படையில்


1)குறிஞ்சி-🟥சிவப்பு நிறம் 

2)முல்லை-🟧மஞ்சள் நிறம் 

3)மருதம்-   🟩பச்சை நிறம் 

4)நெய்தல்-🟦நீலம் நிறம் 

5)பாலை-    ⬜வெள்ளை நிறம்

ஆகிய ஐந்து குழுக்கள் பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும். 


🔴🟡🟢🔵⚪இக்குழு அமைப்பில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இடம் பெறுவர். ஒவ்வொரு வகுப்பிலும் பயிலும் மாணவர்கள் இவ்வைந்து குழுக்களிலும் இடம்பெறும் வகையில் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கான குழுவானது எமிஸ் இணையதளத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படும்.


 அவ்வாறு ஒவ்வொரு மாணவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குழுவின் தகவல் பள்ளியளவில் எமிஸ் தளத்தில் பார்வை யிடலாம். குழுவிற்கான HOUSE BOTICE BOARD தகவல் பலகையிலும் இடம் பெற வைக்க வேண்டும்.


🔷🔷மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குழுவில் இரண்டு ஆண்டுகள் இருப்பார்கள். 



🔴🟡🟢🔵⚪ பள்ளியின் தலைமையாசிரியர்  மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பினை திட்டமிட்டு வழிநடத்துதல் வேண்டும் 



🔴🟡🟢🔵⚪ பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர்c HOUSE SYSTEM INCHARGE TEACHER மகிழ் முற்றம் என்ற மாணவர் குழுக்களின் அமைப்பிற்கான பொறுப்பாசிரியராக நியமிக்கப்படுதல் வேண்டும்


🔴🟡🟢🔵⚪மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் குலுக்கல் முறையில் ஐந்து ஆசிரியர்கள் ஐந்து குழுக்களுக்கு பொறுப்பாசிரியர்களாக நியமித்தல் வேண்டும். 


🟣 ஒவ்வொரு பள்ளியிலும் அப்பள்ளியின் உயர் வகுப்பில் பயிலும் மாணவர்களும் ஒவ்வொரு மாணவர் குழுவிற்கும் இரண்டு தலைவர்கள் நியமிக்கப்படுதல் வேண்டும். 


🟣 இருபாலர் பள்ளிகளில் ஒவ்வொரு குழுவிற்கும் குலுக்கல் முறையில் ஒரு குழுவிற்கு ஒரு மாணவர் குழு தலைவரையும் ஒரு மாணவி குழு தலைவரையும் தேர்ந்தெடுத்தல் வேண்டும். 


🙋‍♂️ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் முறையே மாணவர்கள் மற்றும் மாணவிகளையே  குழுவின் தலைவர்களாக நியமிக்கலாம்.


🟣ஒவ்வொரு குழுவிற்கான மாணவர் தலைவர்கள் மற்றும் வகுப்பு தலைவர்கள் HOUSE CLASS LEADER குழுவிற்க்கான பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கான பதவி ஏற்பு விழாவானது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினமான நவம்பர் 14ஆம் தேதி அன்றோ அல்லது ஏதேனும் ஒரு நாளில் காலை வணக்க கூட்டத்தில்  18ஆம் தேதிக்கு முன்பே  பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்து 🟣அந்நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் ஐந்து நிமிடத்திற்கு தொகுக்கப்பட்ட காணொளியின் யூ ஆர் எல் லிங்க் URL Linkயினை 19 11 2024க்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும்.


🟥மகிழ் முற்றம் என்ற மாணவர் குழு அமைப்பு பள்ளியளவில் நடைமுறைப்படுத்துவதன் அடையாளமாக ஒவ்வொரு குழுவினை குறிக்கும் வண்ணத்தில் ஆன கொடி பள்ளி HOUSE FLAG அளவில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். 


🟧பள்ளி அளவில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை எமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்வதன் அடிப்படையில் புள்ளிகள் அதிகமாக எடுக்கும் குழு ஒவ்வொரு மாத இறுதியிலும் வெற்றி குழுவாக அறிவிக்கப்பட்டு அக்குழுவிற்கான வண்ணக் கொடி HOUSE FLAG பள்ளியில் அனைவரின் பார்வைக்கு எதிர்வரும் மாதம் முழுவதுமாக காட்சிப்படுத்துதல் வேண்டும். 


🟩மாணவர் குழு தகவல் பலகை அனைவரின் பார்வையில்படும் வண்ணம் பொருத்தப்பட வேண்டும். 


🟦ஒவ்வொரு வகுப்பறையிலும் அந்த வகுப்பிற்கான மாணவர் குழுக்கள் பெற்ற புள்ளிகளை கரும்பலகையிலோ அல்லது ஒரு சார்ட்டில் காட்சிப்படுத்துதல் வேண்டும். 


⚪உதாரணமாக: ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் மற்றும் குழுவின் பொறுப்பாசிரியர் சேர்ந்து தீர்மானிக்கும் செயல்பாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படலாம். எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்படாத தரவுகளான நேரம் தவறாமை, காலை வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றல், வீட்டு பாடம் முடித்தல், தன் சுத்தம் போன்ற செயல்பாடுகளுக்கும் அந்தந்த பள்ளியின் விருப்பத்தின் பேரில் செயல்பாடுகளுக்கான புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் பள்ளிக்கான மாணவர் குழு தகவல் பலகையிலும் கூடுதலாக இடம்பெற செய்யலாம். 


🔴🟡🟢🔵⚪மகிழ் முற்றம் குழு எவ்வாறு பள்ளியில் அமைக்கப்பட்டு செயல்படுத்துதல் வேண்டும் என்பதற்கான மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனரின் விரிவான செயல்முறையும் மேலும் அவ்வாறு அமைக்கப்படும் குழுக்கள் விவரங்களை எவ்வாறு எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது என்பதற்கான வழிமுறைகளும் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. 


🔴🟡🟢🔵⚪எனவே அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்க்காண் அறிவுரைகளைப் பின்பற்றி பள்ளிகளில் மகிழ்முற்றம் என்ற பெயரில் குழுக்களை அமைத்து அதன் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமாய் தெரிவிக்கப்படுகிறது. 


🔴🟡🟢🔵⚪

அவ்வாறு பள்ளிகளுக்கான குழுக்கள் மற்றும் வகுப்பறைக்கான குழுக்கள் குழுவின் பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோர் பதவி ஏற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பிங் 19-11-2024 க்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமாயும் தெரிவிக்கப்படுகிறது..........👍👍👍

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...