கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி - உள்நுழைதலும் பயிற்சியை முடித்தலும் சார்ந்த குறிப்புகள்
Learner Management System (LMS) - E-training - Tips for logging in and completing training
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி
உள்நுழைதலும் பயிற்சியை முடித்தலும் சார்ந்த குறிப்புகள்
1. LMS தளத்தினுள் நுழைதல்
❖ LMS தளத்தினுள் நுழைய https://lms.tnsed.com/login/ என்னும் இணைப்பைப் பயன்படுத்துக.
❖ உங்களுடைய EMIS பயனர் அடையாள எண்ணையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி உள்நுழைக.
2. பயிற்சியின் கட்டமைப்பு
❖ பயிற்சியானது, ஏழு கட்டகங்களைக் கொண்டது.
❖ ஒவ்வொரு கட்டகத்திலும் முன்-திறனறி மதிப்பீடு, பயிற்சிக்கான பாடப்பொருள், பின்-திறனறி மதிப்பீடு ஆகியவை உள்ளன.
❖ ஏழு கட்டகங்களின் இறுதியிலும் இடம்பெற்றுள்ள பின்னூட்டத்திற்கான வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும்.
3. கட்டகத்தின் படிநிலை வளர்ச்சி
❖ பயிற்சியின் ஒவ்வொரு பகுதியும் அதற்கு முந்தைய பகுதியை நிறைவு செய்த பின்னரே, தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் கட்டகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. கட்டகத்தை நிறைவுசெய்வதற்கான அளவுகோல்கள்
❖ கட்டகங்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பகுதிகள், வினாடிவினாக்கள், பின்னூட்டப் படிவங்கள் ஆகியவற்றை முழுமையாக முடித்தபின்னரே பயிற்சியை நிறைவு செய்ததாகக் கருதப்படும்.
5. சான்றிதழ்
❖ பயிற்சியை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலஅளவையும் கணக்கில்கொண்டு, பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் உருவாகும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.