கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
LMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

LMS - Inclusive Education Training - M1 to M7 - Baseline & Endline Assessment - Quiz Questions & Answers



கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி - Learning Management System


LMS - உள்ளடங்கிய கல்விப் பயிற்சி - கட்டகம் 1 முதல் கட்டகம் 7 வரை - முன் திறனறி & பின் திறனறி மதிப்பீடு - வினாடி வினா கேள்விகள் & உத்தேச பதில்கள்


 LMS - Inclusive Education Training - M1 to M7 - Baseline & Endline Assessment - Quiz Questions & Tentative Answers 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Timeline Fixing for LMS Online Training for Teachers Teaching Classes 1-12 - Proceedings of SCERT Joint Director

 


1-12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் LMS இணைய வழி பயிற்சியை மேற்கொள்ள காலக்கெடு நிர்ணயம் - SCERT இணை இயக்குநரின் செயல்முறைகள்


Timeline Fixing for LMS Online Training for Teachers Teaching Classes 1-12 - Proceedings of SCERT Joint Director


 LMS இணைய வழி பயிற்சியை 1-12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் 10-01-2025க்குள் முடிக்க அறிவுறுத்தல் - SCERT (JD)


Baseline & Endline Assessment - 10.01.2025க்குள் மேற்கொள்ள SCERT இணை இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இணை இயக்குநரின்‌ (பயிற்சி) செயல்முறைகள்‌, சென்னை-06.

நக.எண்‌:1068093 / எஃப்‌-4/ 2024, நாள்‌. 16-12-2024.


பொருள்‌: மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ உள்ளடக்கிய கல்வி பயிற்சியினை 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment மூலமாக மதிப்பீடு செய்து அதனை LMS தளம்‌ வாயிலாக பதிவேற்றம்‌ மேற்கொண்டும்‌ இணையவழியில்‌ பயிற்சியானது மாவட்டங்களில்‌ 14.12.2024 முதல்‌ காணொலி மூலம்‌ வழங்குதல்‌ - பயிற்சி முடிவுற்ற பின்னர்‌ முன்னேற்ற அறிக்கை விவரம்‌ தெரிவிக்க கோருதல்‌ - தொடர்பாக.

பார்வை : 1 தமிழ்நாடு மாநிலத்திட்ட இயக்குநர்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ கடித ந.க.எண்‌.170/ ஆ3/ 1E/ ஒபக/ 2024, நாள்‌: 03:12.2024.

2. இந்நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.1068093/எஃப்‌-4/2024 நாள்‌.05:12.2024.

பார்வையில்‌ காணும்‌ வழிகாட்டுதல்‌ மற்றும்‌ நெறிமுறைகளின்படி, 2024 - 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின்‌ மூலம்‌ முறையான கல்வியை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ கட்டகம்‌ உருவாக்கப்பட்டும்‌, அதனை மதிப்பீடு செய்தும்‌ (Assessment) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள்‌. அறிந்திடும்‌ வகையில்‌ LMS தளத்தின்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ மேற்கொள்ளப்பட்டு, இணைய வழி வாயிலாக EMIS தளத்தின்‌ வழியே 14.12.2024 முதல்‌ அனைத்து மாவட்டங்களில்‌ ஆசிரியர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ காணொலி மூலம்‌ இ- பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேற்படி இக்காணொலிப்பயிற்சியினை ஆசிரியர்கள்‌ 10.01.2025-க்குள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, மாநிலம்‌ முழுவதும்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை கையாளும்‌ அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு LMS வழியாக பயிற்சி அளிக்கப்படும்‌ நிலையில்‌, இப்பயிற்சியினை உரிய காலத்தில்‌ மேற்கொள்ள அறிவுறுத்திடுமாறும்‌, இப்பயிற்சி முடிவுற்ற பின்னர்‌ முன்னேற்ற அறிக்கை விவரத்தினை இந்நிறுவன tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


இணை இயக்குநர் (பயிற்சி)


பெறுநர்‌

1 அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ 

2. முதல்வர்கள்‌, அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌,


EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி

EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி


EMIS இணையதளத்தில்  Individual ID & Password பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே LMS இணையதளத்திற்கு செல்வதற்கு Option கொடுக்கப்பட்டுள்ளது


1 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சிக்கு முதலில் emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் EMIS INDIVIDUAL ID & PASSWORD பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே Go To LMS இணையதளத்திற்கு செல்வதற்கு OPTION கொடுக்கப்பட்டுள்ளது.



 

👇👇👇


https://youtu.be/bi6L4EGViuo?si=GB3IQEmXxVoPehsC



How to take CwSN Training Course in LMS through EMIS Website 


EMIS இணையதளம் மூலம் LMS இல் CwSN பயிற்சியை மேற்கொள்ளும் முறை





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



☘️  IE BASELINE ASSESSMENT - 2024-25 ☘️

******************************

🟣 நாள் : 14.12.24 முதல் ஆரம்பம்  IE Baseline assessment .


🔅 இணையவழி பயிற்சி - 1 முதல்12 ம் வகுப்பு வரை  கையாளும் ஆசிரியர்கள்.


🔅இணையவழி பயிற்சியில் இணைய வேண்டிய இணைப்பு

https://lms.tnsed.com/login/


🔅மேற்கண்ட இணைப்பில் ஆசிரியர்கள் தங்களுடைய EMIS ID மற்றும் password பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்


🔅பயிற்சி ஏழு கட்டகங்களைக்கொண்டது.


🔅 *ஒவ்வொரு கட்டகத்திலும் முன் திறனறி மதிப்பீடு,பாடப்பொருள்,பின் திறனறி மதிப்பீடு இறுதியில் பின்னூட்ட வினாக்கள் இடம் பெறும்.


🔅கட்டகங்களில் இடம்பெற்றுள்ள வினாடி வினாக்கள்,பின்னூட்ட படிவங்கள் பூர்த்தி செய்த பின்னரே பயிற்சி நிறைவு செய்த்தாகக் கருதப்படும்


🔅பயிற்சியை நிறைவு செய்ய எடுத்து கொண்ட கால அளவை கணக்கில் கொண்டு சான்றிதழ் உருவாகும்.அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Learner Management System (LMS) - E-learning - Tips for logging in and completing training



கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி - உள்நுழைதலும் பயிற்சியை முடித்தலும் சார்ந்த குறிப்புகள்


Learner Management System (LMS) - E-training - Tips for logging in and completing training



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி

உள்நுழைதலும் பயிற்சியை முடித்தலும் சார்ந்த குறிப்புகள்


1. LMS தளத்தினுள் நுழைதல் 

LMS தளத்தினுள் நுழைய https://lms.tnsed.com/login/ என்னும் இணைப்பைப் பயன்படுத்துக.

உங்களுடைய EMIS பயனர் அடையாள எண்ணையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி உள்நுழைக. 


2. பயிற்சியின் கட்டமைப்பு

பயிற்சியானது, ஏழு கட்டகங்களைக் கொண்டது. 

ஒவ்வொரு கட்டகத்திலும் முன்-திறனறி மதிப்பீடு, பயிற்சிக்கான பாடப்பொருள், பின்-திறனறி மதிப்பீடு ஆகியவை உள்ளன. 

ஏழு கட்டகங்களின் இறுதியிலும் இடம்பெற்றுள்ள பின்னூட்டத்திற்கான வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். 


3. கட்டகத்தின் படிநிலை வளர்ச்சி

பயிற்சியின் ஒவ்வொரு பகுதியும் அதற்கு முந்தைய பகுதியை நிறைவு செய்த பின்னரே, தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் கட்டகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


4. கட்டகத்தை நிறைவுசெய்வதற்கான அளவுகோல்கள்

கட்டகங்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பகுதிகள், வினாடிவினாக்கள், பின்னூட்டப் படிவங்கள் ஆகியவற்றை முழுமையாக முடித்தபின்னரே பயிற்சியை நிறைவு செய்ததாகக் கருதப்படும்.


5. சான்றிதழ்

பயிற்சியை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலஅளவையும் கணக்கில்கொண்டு, பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் உருவாகும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


14.12.2024 முதல் lms.tnsed தளத்தில் பயிற்சியினை ஆசிரியர்கள் எவ்வாறு பெறுவது? வழிமுறைகள் வெளியீடு



 14.12.2024 முதல் lms.tnsed தளத்தில் பயிற்சியினை ஆசிரியர்கள் எவ்வாறு பெறுவது? வழிமுறைகள் வெளியீடு


LMS - Login Instructions in Tamil


How teachers can get training on lms.tnsed site from 14.12.2024? Instructions Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


How to take CwSN Training Course in LMS through EMIS Website

 


1 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சிக்கு முதலில் emis.tnschools.gov.in என்ற தளத்திற்கு சென்று அதிலிருந்தே lms தளத்திற்கு செல்ல வசதி option கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கவும்..


🔰 உள்ளடக்கிய கல்வி இணைய வழிப்பயிற்சி கட்டகங்கள் இணைக்கப்பட்டுவிட்டன


🪷 1 முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி சார்ந்த இணைய வழிப்பயிற்சியை Login செய்து மேற்கொள்ளும் வழிமுறை


அனைத்து கட்டகங்களையும் நிறைவு செய்த பின் பயிற்சி சார்ந்த சான்றிதழ் Download செய்து கொள்ளலாம்

 

👇👇👇


https://youtu.be/bi6L4EGViuo?si=GB3IQEmXxVoPehsC



How to take CwSN Training Course in LMS through EMIS Website 


EMIS இணையதளம் மூலம் LMS இல் CwSN பயிற்சியை மேற்கொள்ளும் முறை





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kasima, who won the title of world champion in the carrom tournament, received a prize of ₹1 crore

கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ₹1 கோடி பரிசு அறிவித்தது தமிழக அரசு. Kasima, who won the title of world champion in...