கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EMIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

DEE ordered to ensure 100% correctness of number of students in attendance register & EMIS website

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு &  EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை உறுதி செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு 


Director of Elementary Education ordered to ensure 100% correctness of number of students uploaded in attendance register & EMIS website in Government and Government aided schools


தொடக்கக் கல்வி இயக்குநர் இணைய வழி கூட்டம் 30.10.2024  அன்று மாவட்ட கல்வி அலுவலர், BEO (Nodal), DC -1 ஆகியோருக்கு நடத்தப்பட்டது.


    1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் படி உள்ள மாணவர் எண்ணிக்கை &  EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை CRC அளவில் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார். 


     2. மேலும் மாணவர் எண்ணிக்கை வருகை பதிவேட்டிற்கும் & EMIS இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பின் உடனடியாக சரி செய்து கொடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.


      3. பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள Raise Request & Admission Approval - pending இருப்பின் ஆசிரியர் பயிற்றுநர்கள் DC மூலம் உடனடியாக சரி செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.


        4. மாணவர்கள் Long Absent எனில் வேறு பள்ளிகளில் சேர்ந்து இருப்பின் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மாணவனை Common Pool ற்கு அனுப்பிட வேண்டும்.


      மேற்கண்ட பணிகளை 04.11.2024 (திங்கள்) அன்று மாலைக்குள் முடித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை & EMIS இணைய தளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கையும் சரியாக உள்ளதை குறுவளமைய அளவில் முகாம் நடத்தி சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஆசிரியர் பயிற்றுநர்கள் மாணவர் வருகைப் பதிவேடு & பள்ளியின் EMIS இணைய தளத்தினை சரிபார்த்து 100% சரியாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக இப்பணி மேற்கொள்ளப்படுவதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வட்டார அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இருப்பதால் இப்பணியினை அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு நடத்திட வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவர் விவரம் 100% EMIS இணைய தளத்தில் சரியாக உள்ளது என சான்றிதழ் அளிக்க வேண்டும்.


முதன்மைக் கல்வி அலுவலர்

கரூர்.



>>> சரிபார்ப்பு படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions...

 

 EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை ) நேர்முக உதவியாளர் (இடைநிலை)  இணைய வழிக் கூட்டக குறிப்புகள் - JD(V) Instructions...


முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்ட குறிப்புகள் :


 முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களால் 23.08.2024 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பெற்றது . கூட்டத்தின் போது கீழ்க்காண் விவரங்கள் குறித்து ஆலோசணையும் , அறிவுரைகளும் இணை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது.


PA TO CEOs 23.08.24 MEETING MINUTES👇👇👇





EMIS தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது - பள்ளிக்கல்வி துறை உத்தரவு...

 

எமிஸ் EMIS தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது - பள்ளிக்கல்வி துறை உத்தரவு...


தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் நேர்முக உதவியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.அதன் விவரம் வருமாறு:



தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்விஅலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.


முக்கியமாக கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும்போதுகற்றல் - கற்பித்தல் பணிகளுக்குபெரும் இடையூறு ஏற்படுவதாகதெரியவருகிறது. எனவே, ஆசிரிய ரல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் பணிகளை பணியாளர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



அதேநேரம் இதுவரை 100 சதவீதம் முழுமையாக விவரங்கள் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் அரசு செயலரின் கூட்டத்துக்கு முழுமையான சரியான அறிக்கையினை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கியவுடன் எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது...



>>> EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions...


தமிழ்நாடு அரசுப் பள்ளி SMC குழுக்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்வு: எமிஸ் தளத்தில் பதிய உத்தரவு...

 

 


தமிழ்நாடு அரசுப் பள்ளி SMC குழுக்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்வு: EMIS தளத்தில் பதிய உத்தரவு...



💥சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு (எஸ்எம்சி) புதிதாக தேர்வான உறுப்பினர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



💥தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. 



💥இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


💥அதன்படி முதல்கட்டமாக 12,117 ஆரம்பப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்எம்சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக மீதமுள்ள 11,924 தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் நேற்று மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதற்காக பள்ளிகளுக்கு பெற்றோர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவற்றில் அதிக எண்ணிக்கையில் ஆதரவு பெற்ற பெற்றோர்கள் எஸ்எம்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.


💥இதேபோல், தலைவர், துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய 24 பேர் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக மீதமுள்ள அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஆகஸ்ட் 24, 31-ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.



💥இந்நிலையில், எஸ்எம்சி குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதார் எண் உட்பட விவரங்களை எமிஸ் தளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும். இது சார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டுமென சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.



மாணவர்களது வங்கிக் கணக்கு எண் விவரங்களை EMISல் பதிவு செய்யும் முறை - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், நாள்: 23-07-2024...

 

மாணவர்களது வங்கிக் கணக்கு எண் விவரங்களை EMISல் பதிவு செய்யும் முறை - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், நாள்: 23-07-2024...


Bank Account Details Updation in EMIS Website...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் கல்வியாண்டில் பயின்று தேர்ச்சி அடைந்த மாணவர்களை EMIS தளத்தில் மேல் வகுப்புக்கு அனுப்பும் பணியை 31.07.2024க்குள் முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

 

 2023-2024ஆம் கல்வியாண்டில் பயின்று தேர்ச்சி அடைந்த மாணவர்களை EMIS தளத்தில் மேல் வகுப்புக்கு அனுப்பும் பணியை 31.07.2024க்குள் முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள்: 16-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EMIS NEW UPDATE - BREAD WINNING -- விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்கள் - கல்வி உதவித்தொகை பெற EMIS வலைதளத்தில் விண்ணப்பித்தல்...



EMIS NEW UPDATE - BREAD WINNING -- விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்கள் - கல்வி உதவித்தொகை பெற EMIS வலைதளத்தில் விண்ணப்பித்தல்...


📝விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்


👉 இறப்பு சான்றிதழ்

👉வாரிசு சான்றிதழ்

👉Bonafide Certificate

👉Birth Certificate

👉FIR

👉Post Mortem Report

👉Student Aadhaar

👉Living parent Aadhaar

👉Student Ration Card

👉Income certificate

👉Bank pass book


இந்த Document/சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கவும்..


மிக முக்கிய குறிப்பு:


👉மாணவர்களின் பெற்றோர் 


1️⃣வாகன விபத்து

2️⃣தீ விபத்து

3️⃣கட்டிட விபத்து 


➡️போன்ற விபத்தில் இறப்பு / முழு ஊனம் அடைந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...


👉 விபத்து தொடர்பான FIR COPY & POST MORTEM REPORT அவசியம்...


⬅️வயது முதிர்வு

⬅️இயற்கை மரணம்

⬅️தற்கொலை


போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டிருந்தால் விண்ணப்பிக்க கூடாது...



முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் (All Districts) EMIS தளத்தில் வெளியீடு...


 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் (All the Districts) EMIS தளத்தில் வெளியீடு...


*How to find the vacancies?

EMIS Individual login 

➡️ Admin 

➡️ Preselect vacancy 

➡️ Counselling type 

➡️ PG Teacher (District - District) 

➡️ Panel 

➡️ General (Tamil & English) 

➡️ Submit 

➡️ We get all districts vacancies 

➡️ 🔎 Type District Name 

➡️ We get District wise vacancies.


பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பு விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவிடும் வழிமுறை...

 

பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பு விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவிடும் வழிமுறை...


How to update Internet (One Time Charges / Installation cost) in EMIS ?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நமது பள்ளிக்கு வழங்கப்பட்ட கையடக்க கணினி (TAB) விவரங்களை EMIS-ல் பதிவு செய்யும் முறை...

 

 


📱EMIS - TABLET TRACKING - ASSIGN TEACHER - UPLOAD TAB SERIAL NUMBER...


💫நமது பள்ளிக்கு வழங்கப்பட்ட கையடக்க கணினி (TAB) விவரங்களை EMIS-யில் பதிவு செய்தல்...


*➡️SCHOOL LOGIN


▪️Enter Received Count


கவனமாக பதிவு செய்யவும்.


ஒருமுறை பதிவு செய்தபின் மீண்டும் திருத்தம் செய்ய இயலாது...


▪️Assign Teacher


வழங்கப்பட்ட TAB-ஐ இ.நி.ஆ  Assign செய்தல்..


தவறாக Assign செய்தால் Edit & Delete செய்து கொள்ளலாம்...


➡️SGT INDIVIDUAL LOGIN


▪️த.ஆ Assign செய்த TAB   Serial Number-ரும் தங்களுக்கு வழங்கப்பட்ட TAB -யின் Serial number-ரும் சரியாக உள்ளதா? என சரிபார்த்து serial number-ருடன் Image Upload செய்ய வேண்டும்..


▪️தவறாக இருந்தால் பள்ளி த.ஆ யிடம் தகவல் தெரிவித்து மாற்றம் செய்து கொள்ளலாம்...


💥முக்கிய குறிப்பு:


📱Tablet Tracking options enable ஆகவில்லை எனில் logout செய்து மீண்டும் login செய்யவும்....


                   🙏நன்றி



>>> கையடக்க கணினி (Tablet) வழங்கப்படும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் - பள்ளி வாரியான பட்டியல் - All Districts...


EMIS வலைதளத்தில் ஆசிரியர்கள் பள்ளி / அலுவலக மாற்றம் கோரி விண்ணப்பிக்கும் முறை...

 

 

EMIS ஆப் மற்றும் இணையதளத்தில் புதிய பள்ளிக்கு மாற்றப்பட்ட ஆனால் பள்ளி மாற்றியமைக்கப்படாத ஆசிரியர்களுக்காக இந்த தொகுதி உள்ளது.


School / Office Change Request - Teachers (EMIS)

This Module is to enable teachers who got transferred But School Not Retagged to new school in EMIS App and Website.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EMIS வலைதளத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களை புதிதாக சேர்க்க தேவையான தகவல்கள்...

 


I Std EMIS Students Admission Details...

EMIS வலைதளத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களை புதிதாக சேர்க்க தேவையான தகவல்கள்...


Information required for new entry of 1st class students in EMIS website...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வகுப்பு மற்றும் பிரிவுகளை EMIS வலைத்தளத்தில் மாற்றம் செய்யும் வழிமுறை...


 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வகுப்பு மற்றும் பிரிவுகளை EMIS வலைத்தளத்தில் மாற்றம் செய்யும் வழிமுறை - Class Change Request...


Dear Team,

Class change option module has been released for Government , Government Aided and Private schools.

Please find the attached documents for the steps...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பெற்றோரின் அலைபேசி எண்ணை சரிபார்க்கும் பணியின் முக்கியத்துவம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தகவல்...


 பெற்றோரின் அலைபேசி எண்ணை சரிபார்க்கும் பணியின் முக்கியத்துவம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தகவல்...


Importance of Parent's Phone Number Verification - School Education Secretary's Voice Message...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு EMIS வலைத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறை...


தொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு EMIS வலைத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறை...


Department of Elementary Education - How to Apply for General Transfer Counseling of Teachers on EMIS Website...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



13-05-2024 முதல் விண்ணப்பிக்கலாம்...


 

பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்...

EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் / மாற்றுதல் - DEE செயல்முறைகள்...


 EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் / மாற்றுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009350/ ஜெ2/ 2024, நாள்: 09-05-2024...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009350/ ஜெ2/ 2024, நாள்: 09-05-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> EMIS வலைதளத்தில் மாணவர்களின் அலைபேசி எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?


EMIS வலைதளத்தில் மாணவர்களின் Mobile எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?

EMIS வலைதளத்தில் மாணவர்களின் அலைபேசி எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?



 How to Verify / Change Students Mobile Number in EMIS Website?




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிசார் கோரிக்கைகளை EMIS வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம்...


ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிசார் கோரிக்கைகளை கல்வி மேலாண்மை தகவல் முறைமை EMIS வாயிலாக விண்ணப்பிக்க EMIS இணையதளத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம்...



>>> பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்...


 EMIS Students TC &  Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்:


அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.


பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class TC-க்களை முதலில் Generate செய்யவும்


Terminal Classes

📌 *Primary school - 5 std

📌 *Middle Schools - 8 Std

📌 *High Schools - 10 std

📌 *Higher Secondary schools - 10 and 12 std


For Doubts in TC Generation, watch this video, Link 👇🏻 :

https://youtu.be/i72MtMVF0D8


Note: Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes (EMIS Mark Entry, Noon-meal, Uniform, Cycle Entry, Textbook, etc) பதிவுகளை உரிய TNSED Schools App / EMIS-இல் மேற்கொண்ட பின் மட்டும்தான் TC Generation & Promotion மேற்கொள்ளவும்.


📌 Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. (Students menu ➡️ Promotion) 


Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்


🔮குறிப்பு : 1


Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)


🔮 குறிப்பு : 2


Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( School ➡️ Class and Section).


🔮 குறிப்பு : 3


Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 


குறிப்பு : Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் "Student is Promoted to the Next class ?" என்ற களத்தில் Discontinued என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.


Promotion work


Point to be noted: 01


Reverse order ல் மட்டுமே promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


🔘 Primary School -  4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


🔘 Middle School -  7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


🔘 High School -  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std


🔘 Higher secondary School - 11 to 12 std,  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std


Note: Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.


Point to be noted : 02


🔘 UKG வேறு பள்ளியில் பயின்று promotion பணிக்கு முன் 1-ஆம் வகுப்பில் புதிதாக common pool - இருந்து Admit செய்த மாணவர்களின் பெயர் promotion திரையில் தோன்றுகிறது. 1-ஆம் வகுப்பில் இருந்து 2-ஆம் வகுப்பிற்கு promote செய்யும் போது அந்த மாணவர்களை தவறுதலாக promote செய்து விட கூடாது.


For promotion related doubts watch this video, Link 👇🏻:

https://youtu.be/T-aRJInO9jg


Steps to be Followed after Promotion Process


Promotion முடித்த பின் 


🔵 Step 1

School ➡️ Class and Section பகுதியில் தேவையற்ற  Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் Delete செய்ய வேண்டும்.


🔵 Step : 2

School ➡️ Class and Section பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group (Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


Note: EMIS Promotion has to be initiated only after the results are approved by the concerned Officials. Thank You.     


மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...

 


*💫EMIS-III TERM MARK ENTRY...


*📝மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...


*LOGIN : Class teacher individual ID & password


*🔖மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை...


*▪️1 முதல் 5 ஆம் வகுப்பு வரை


*மொத்த மதிப்பெண்-60*-க்கு பதிவு செய்யவும்.


*➡️அதற்குமேல் பதிவு செய்தாலும் பதிவு ஆகாது...*


*➡️6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 க்கு பதிவு செய்யவும்...*


*➡️தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு A (Absent) என பதிவு செய்யவும்...*


 *▪️SA -க்கு வரவில்லை என்பதால் FA மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டாம்..*


▪️A என பதிவு செய்தால் Remarks காலத்தில் Absent என வரும்..


▪️தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு FA மதிப்பெண்களை பதிவு செய்யும்போது ஒரு மாணவருக்கு FA மதிப்பெண் 30 என்றால் அந்த மதிப்பெண்களை பதிவு செய்தால் Remarks காலத்தில் Fail என வரும்..


எனவே FA மதிப்பெண் 40-க்கு 35 ஆக இருந்தாலும் SA-க்கு வரவில்லை எனில் A என பதிவு செய்யவும்...



>>> மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில் பதிவு செய்யும் முறை...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...