கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Policeman involved in chain snatching arrested

 


செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர் கைது


Policeman involved in chain snatching arrested


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராணி என்பவர் கூகையூர் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் வழக்கம்போல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் தோட்டப்பாடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றதாக கூறி அருகில் உள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


இதேபோல் கடலூர் மாவட்டம் கொரக்கவாடி கிராமத்தைச்சேர்ந்த தீபா தனியார் பள்ளியில் பெற்றோர் சந்திப்பு கூட்டத்திற்காக குரால் கூட்ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் தீபா அணிந்திருந்த 7பவுன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர், இதுகுறித்து, அருகில் உள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் தீபா புகார் அளித்து இருந்தார். இரு வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகத்தில் ஆயுதப்படையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் விஜயன் என்பவர்தான் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவந்தது, இதனையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் விஜயனை கைது செய்து கீழ்குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்ற சம்பவம் காவல்துறையினர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் வேலியே பயிரை மேய்வது போன்று பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய காவலரே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு பெண்களின் செயின்களை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பு...