கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Schools open today after Pongal festival holiday - 12 days of continuous working day possible

 

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு - 12 நாட்கள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு


Schools open today after Pongal festival holiday - 12 days of continuous operation possible


ஆறு நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து இன்று (20-01-2025) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து, 12 நாட்கள் செயல்பட உள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 10ஆம் தேதி முதல்  நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கமும் துவங்கியது. 11 மற்றும், 12ம் தேதி பள்ளிகள் விடுமுறையாக இருந்த போதும், 13ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் செயல்பட்டன.


இந்நிலையில், 14ஆம் தேதி முதல், 19ஆம் தேதி வரை ஆறு நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது.


விடுமுறை முடிந்து இன்று (20ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. கடந்த, 17 ஆம் தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்ததால், இதற்கு மாற்றாக வரும், 25ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 26ஆம் தேதி குடியரசு தினம்.


பெரும்பாலான பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இதனால், 20ஆம் தேதி முதல், வரும் 31ஆம் தேதி வரை தொடர்ந்து, 12 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் பள்ளிகள் செயல்பட உள்ளன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Govt ITI நேரடி சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு

  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Govt ITI) நேரடி சேர்க்கைக்கான தேதி 30.09.2025 வரை  நீட்டிப்பு - பயிற்சிக் கட்டணமின்றி, மாதம் ₹750 உதவித்த...