கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamil Nadu Chief Minister must fulfill his election promise - Teachers Federation insists


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


Tamil Nadu Chief Minister must fulfill his election promise - Tamil Nadu Elementary School Teachers Federation insists


✍️✍️✍️✍️✍️✍️✍️


*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்*

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் *வாக்குறுதி எண் 309* இல்  பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது.


 மத்திய அரசின் ஒப்புதல் வழிகாட்டுதல் நிதி சார்ந்த எந்த நிபந்தனையும் இந்த வாக்குறுதியில் இல்லை.


*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே!* ஒப்புக்கொண்டது போல் இந்த வாக்குறுதியை நம்பி பல லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திமுகவுக்கு வாக்களித்திருந்தனர்.


தமிழ்நாடு அரசு அளித்த *வாக்குறுதியை 99% நிறைவேற்றி* விட்டதாக முதலமைச்சர் அவர்கள் செல்லும் இடமெல்லாம் உரையாற்றி வருகிறார். 


வாக்குறுதி *எண் 309ஐ நிறைவேற்றாத போதிலும்* தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் முதல்வர் கொண்டு வந்து விடுவார் என பெருத்த நம்பிக்கையுடன் இருந்தனர். 


ஆனால் நேற்று சட்டசபையில் *நிதியமைச்சர் அவர்களின்* உரையைக் கேட்ட பிறகு *மிகப்பெரிய அதிர்ச்சிக்கு* உள்ளாகியுள்ளனர். 


ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமோ பங்களிப்பு ஓய்வூதிய திட்டமோ ஆசிரியர்களின் அரசு ஊழியர்களின் கோரிக்கை கிடையாது. *இரண்டுமே ஏமாற்றுத் திட்டங்கள்* என்பது தெளிவாக பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே சரியான தீர்வாக அமையும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டியது குறித்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு மட்டுமே.


மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக கூறுவது காலம் கடத்துவதற்கும், தட்டிக் கழிப்பதற்குமான உத்திகள் என்பதை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் உணர்வார்கள். முடியாது என்பதை நேரடியாக கூறாமல் வேறு வார்த்தைகளில் *மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்* கூறியிருக்கிறார்கள். ‌


10 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாக்குகளை பெற்று அமைந்த அரசு என்று முதல்வர் அவர்களே கூறியிருக்கிறார்கள். எனவே வள்ளுவர் வாக்கின்படி செயல்படுவதாக கூறும் அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை ஏமாற்ற நினைக்காமல் துரோகம் செய்யாமல் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது

இவண்.

*சு.குணசேகரன்*

 *பொதுச் செயலாளர்* 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...