CPS ஒழிப்பு இயக்கம் - 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
CPS Abolition Movement - 72 hour hunger strike
CPS ஒழிப்பு இயக்கம் - 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
CPS Abolition Movement - 72 hour hunger strike
80CCD (1B) ல் CPS தொகையை கழித்தவர்களுக்கு கூடுதல் வருமான வரி
கடந்த பிப்ரவரி 2025-ல் 80CCD 1B -ல் ரூ 50000 (CPS தொகையை) கழித்தவர்கள் தற்போது வருமான வரி தாக்கல் செய்யும் போது ரூ 50000 க்கான வரியும் சேர்த்து Income Tax செலுத்த வேண்டியுள்ளது. 80CCD 1B என்பது NPS -ல் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். CPS உள்ளவர்களுக்கு பொருந்தாது எனக் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் CPS உள்ள ஆசிரியர்கள் Old Regime -,ல் 80CCD 1B-ல் ரூ 50000 கழித்து காட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் CPS பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம், நாள் : 08-04-2025
Re-appointment Pay Fixation to CPS Scheme Teachers
Teachers retiring under the Contributory Pension Scheme - Fixation of pay for the period of reappointment - Clarification - Letter from the Joint Director, Treasury and Accounts Department, Date: 08-04-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்கக் கோரிய வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவு
Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order
* தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரி கொடுக்கப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்குவது பற்றி மூன்று வாரங்களுக்குள் அரசு கூடுதல் வழக்கறிஞர் எதிர்வாத உரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதியரசர் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
ஓய்வூதியம் / பங்களிப்பு ஓய்வூதியம் / பணிக்கொடை / தொகுத்துப் பெறும் ஓய்வூதியக் கருத்துருக்களை உரிய காலத்தில் தயார் செய்து அனுப்புதல் / E-SR பதிவேற்றம் / புதுப்பித்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள் : 12-03-2025
Proceedings Letter from the Director of School Education to all District Chief Education Officers regarding timely preparation and submission of Pension / Contributory Pension / Gratuity / Commutation Pension Proposals / E-SR Upload / Update, Dated: 12-03-2025 & GPF / CPS / DCRG Pending as on 12-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
CPS missing credit - online portalல் பதிவேற்றம் செய்ய கருவூல அலுவலர் குறிப்பாணை
Treasury Officer's Memorandum to upload CPS missing credit in online portal
CPS missing credit - online portalல் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது - கருவூலம் மற்றும் கணக்குத் துறை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்
Demand White Paper on Fulfilled Election Promises - CPS Abolish Movement Urges
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்
A white report is needed on how many of the promises made to teachers & government employees have been fulfilled - CPS Abolition Movement Urges
திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.
2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.
வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் தொடர் போராட்டம் அறிவிப்பு
CPS Abolition Movement Announces Continued Protest Demanding Implementation of Old Pension Scheme
தமிழக அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.
2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.
வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசுக்கு எதிர்வாத உரை அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் - ஒப்பீடு
Unified Pension Scheme, New Pension Scheme and Old Pension Scheme - Comparison
Comparison of UPS , NPS & OPS
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கில் மூன்று வாரங்களில் தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
High Court Madurai Branch orders Tamil Nadu government to file reply within three weeks in case of gratuity claim by employee who completes service in Contributory Pension Scheme
தஞ்சாவூர் மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ராஜா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற எனக்கு ஈட்டிய விடுப்பு, சிபிஎஸ் வைப்பு நிதி தொகை மட்டுமே ஓய்வின் போது வழங்கினர். எனது பணி காலத்திற்கான பணிக்கொடை வழங்கவில்லை. அதனால் தமிழ்நாடு அரசு நிதித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர்களிடம் பணிக்கொடை கோரி விண்ணப்பம் செய்தும் பதில் ஏதும் இல்லாததால், பணிக்கொடை வழங்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரசின் பதில் அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் வழங்க நீதியரசர் திரு. பட்டு தேவானந்த் அவர்கள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 271, நாள் : 04-02-2025
A committee consisting of officials to make recommendations to the government regarding the appropriate pension scheme - Tamil Nadu Government Press Release No: 271, Dated: 04-02-2025
மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது
DIPR-P.R No.-271- TN Govt Press Release - Pension Scheme, Date - 04.02.2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழக அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.
ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்ட 3 போ் கொண்ட குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளா்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளா்களுக்கு தொடா்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
மாநில அரசுப் பணியாளா்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்த தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனிடையே மத்திய அரசுப் பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
குழு அமைப்பு: இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதிநிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையை அரசுக்கு அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் முன்னாள் இயக்குநா் கே.ஆா்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலா் (பட்ஜெட்) பிரத்திக் தாயள் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu
UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளத்தில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களது அறிவிப்பு - பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - Tamil Nadu Teachers Federation insists
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றிய அரசை சார்ந்து தெரிவிக்கப்பட்டதா அல்லது சுயமாக முடிவெடுக்கப்பட்டதா? - தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம்
Were the DMK's election promises, including the cancellation of the Contributory Pension Scheme and the reinstatement of the Old Pension Scheme, dependent on the Union Government or a self-decision? - Tamil Nadu Revenue Officials' Association letter to Hon'ble Chief Minister
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்னும் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு, ஆசிரியர் அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தி கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது தேர்தல் காலப் பரப்புரை வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திடல் வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
The announcement by the Hon'ble Tamil Nadu Finance Minister that steps will be taken to implement the new Unified Pension Scheme (UPS) has created a tense atmosphere among the among the Teachers & Government Employees - Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin should implement the old pension scheme as per his election campaign promise - Tamil Nadu Elementary School Teachers Mandram insists
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
(மாநில அமைப்பு)
பதிவெண்:17/74
அரசு அங்கீகாரம் எண்:991/89
--------------------------------------------
தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத்திட்டம் 01.04.2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்திடல் வேண்டும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது!
----------------------------------------------
தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) தமிழ்நாட்டுக்கு உகந்தவாறு விரைந்து தொடங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் சட்டமன்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து சட்டமன்றத்தில் 11.01.2025 அன்று தெரிவித்து உள்ளார்கள்.
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (ups) மத்திய அரசு நடப்பு 2025ஆம் ஆண்டில் அமல்படுத்துவதற்கு அறிவிப்பு செய்து உள்ளது என்றும்மத்திய அரசின் இத்தகு ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் மத்திய அரசின் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது என்றும்
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள், மற்றும் விதிமுறைகள் வெளியானதும் தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்றும் மேலும்,
தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தமிழ்நாட்டுக்கு உகந்தவாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இத்திட்டம் சார்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இசைவுக்கு முன்வைக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் மேற்கண்டவாறான அறிவிப்புகள் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி தந்து உள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டத்தினை - பெருங்கவலையை ஏற்படுத்தி கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
ஒன்றிய அரசு அறிவித்து உள்ள புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்திற்கு (UPS) இந்திய நாடு முழுதும் கடுமையான எதிர்ப்புகள் -ஆட்சேபனைகள் பெருமளவில் எழுந்துள்ளது.
இத்திட்டம் தேவையற்றது;
பயனற்றது என்றும் வரையறுக்கப்பட்ட பயன்தரும் பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் (OPS) தான் நாடு முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளும்-
போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் l, இந்தியாக் கூட்டணியில் இணைந்துள்ள பல்வேறுக்கட்சிகள் ஒன்றிய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து எதிர்வினைகள் ஆற்றிவரும் நிலையில்
மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின்
அறிவிப்புகள் பெருத்த விவாதத்தையும் - விமர்சனத்தையும் ஆசிரியர் -அரசு ஊழியர்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் மீது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கொண்டு இருக்கும் அசைக்க முடியாத பெருத்த நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தும் உள்ளது.
ஆசிரியர்-அரசு ஊழியர்களை தன்னெழுச்சியாக போராடும் சூழ்நிலைக்கும் தள்ளி விட்டும் உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, கடந்த சட்டமன்றத் தேர்தல் காலப் பரப்புரை வாக்குறுதியின் படி மற்றும் தேர்தல் அறிக்கையின் உறுதிமொழியின் படி தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 01.04.2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்து அமல்படுத்திடல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களின் பாதுகாவலர் தலைவர் கலைஞர் அவர்களின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிடமாடல் அரசு என்பதை மெய்ப்பித்திடல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடல் வேண்டும் என்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவண்...
பெ.இரா.இரவி
மாநிலத்தலைவர்
முனைவர்-மன்றம்
நா.சண்முகநாதன்
பொதுச்செயலாளர்
முருகசெல்வராசன்
மாநிலப்பொருளாளர்
புதுக்கோட்டை
12.01.2025
ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஏமாற்று வித்தை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கண்டனம்
Tamilnadu government's announcement regarding pension scheme is a scam - Tamil Nadu Primary School Teachers' Federation General Body Condemns
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அறிவுத்திருப்பது ஒரு ஏமாற்று வித்தை என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (12.01.2025) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூத்திட்டத்தைச் செயல்படுத்திட ஏதுவாக ஓய்வூதியம் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டவுடன் புதிதாகக் குழு அமைக்கப்படும் என்றும், அந்தக்குழுவின் அறிக்கையைப் பெற்று ஓய்வூதியத்திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்திருப்பது மிகப்பெரிய ஏமாற்று வித்தையாகும். தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்போது "ஒன்றிய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தைப் பின்பற்றி அது தொடர்பாக குழு அமைத்து அதன் அறிக்கையைப் பெற்று தக்கதொரு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்" என்று கூறுவது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் ஏமாற்றும் செயலாகும்.
எனவே, இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று தேர்தல் வாக்குறுதியில் எழுத்து மூலமாகத் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாக பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப் பதிவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்கிட வேண்டும். ஆசிரியர் தகுதிதேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து தொடக்கக் கல்வித்துறையில் பதவி உயர்வுகள் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் நலன் கருதி மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் காலமுறை ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைக் தடைகளை உடனடியாக நீக்கி ஆணைகள் வெளியிடப்பட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதலின் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22.02.2025 அன்று STFI சார்பில் சென்னையில் நடைபெறும் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்திலும், 07.03.2025ல் டிட்டோஜாக் சார்பில் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்வதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டமே (OPS) சிறந்தது - தேர்தல் கால வாக்குறுதியினை சொன்னபடி நிறைவேற்ற வேண்டும் - தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
Old Pension Scheme (OPS) is better - Election period promises should be fulfilled - Tamilaga Aasiriyar Koottani insists
*AIFETO... 12.01.2025..*
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்- 36/2001.*
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை (UPS) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்..*
*மத்திய அரசு அறிவித்த போதே இரண்டு பக்க அறிக்கையினை முழு விளக்கத்துடன் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தோம்.*
*இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.*
*நமது கொள்கையே!..*
*CPS ம் வேண்டாம்!...*
*UPS ம் வேண்டாம்!..*
*தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி..*
*OPS தான் வேண்டும்!.*
*என்பதை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் AIFETO அகில இந்திய அமைப்பின் சார்பிலும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.*
*நிதி அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது போல ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை பற்றி மத்திய அரசே தெளிவான விளக்கம் இன்னமும் தரவில்லை.*
*25 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவருக்கு 50% பென்ஷன் தருவார்கள். மத்திய அரசு 18% சதவீதம் பங்களிப்பு தருகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்து போய்விட்டால் அந்த குடும்பத்திற்கு அந்த தொகை கிடைக்குமா?. என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.*
*அதனால் ஒரு ரூபாய் கூட பங்களிப்பு செலுத்தாமல் நடைமுறையில் இருந்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டமே சிறந்ததாகும்.*
*தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.*
*இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் 6 1/4 லட்சம் பேர் சிபிஎஸ் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த UPS திட்டம் சிறப்பான திட்டம் போல சிலருக்கு தெரியலாம்.*
*பழைய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பெற்று வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று கூட எண்ணலாம்.*
*ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) விட பழைய ஓய்வூதிய திட்டமே (OPS) சிறந்ததாகும்*
*தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக அழைத்துப் பேசியபோது... சிரித்துக் கொண்டே... எனது பெயருக்கு முன்பு உள்ள "கருணை " என்னிடம் நிறைய இருக்கிறது. பின்பு உள்ள "நிதி" தான் என்னிடம் இல்லை, என்று கூறினார். அப்படி கூறினாலும் அவருடைய ஆட்சி காலத்தில் தான்... மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கியதுடன்.. நான்கு ஊதிய குழுக்களையும் அமைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை அமல்படுத்தினார்.. என்பதை நெஞ்சிருக்கும் வரை மறக்கத்தான் முடியுமா?..*
*தேசியக் கல்விக் கொள்கையினை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்!... அதேபோல் மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும் (UPS) எதிர்க்கிறோம்!..*
*தேர்தல் கால வாக்குறுதியினை சொன்னபடி நிறைவேற்ற வேண்டும்!.. நிறைவேற்ற வேண்டும்!.. என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com*
*அ. எழிலரசன்*
*மாநிலத் தலைவர்**
*அ.வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்*
*ஆ.இராஜசேகர் மாநிலப் பொருளாளர்.*
*கு.ரமாராணி, மாநில மகளிர் அணி செயலாளர்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
Tamil Nadu Chief Minister must fulfill his election promise - Tamil Nadu Elementary School Teachers Federation insists
✍️✍️✍️✍️✍️✍️✍️
*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்*
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் *வாக்குறுதி எண் 309* இல் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
மத்திய அரசின் ஒப்புதல் வழிகாட்டுதல் நிதி சார்ந்த எந்த நிபந்தனையும் இந்த வாக்குறுதியில் இல்லை.
*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே!* ஒப்புக்கொண்டது போல் இந்த வாக்குறுதியை நம்பி பல லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திமுகவுக்கு வாக்களித்திருந்தனர்.
தமிழ்நாடு அரசு அளித்த *வாக்குறுதியை 99% நிறைவேற்றி* விட்டதாக முதலமைச்சர் அவர்கள் செல்லும் இடமெல்லாம் உரையாற்றி வருகிறார்.
வாக்குறுதி *எண் 309ஐ நிறைவேற்றாத போதிலும்* தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் முதல்வர் கொண்டு வந்து விடுவார் என பெருத்த நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் நேற்று சட்டசபையில் *நிதியமைச்சர் அவர்களின்* உரையைக் கேட்ட பிறகு *மிகப்பெரிய அதிர்ச்சிக்கு* உள்ளாகியுள்ளனர்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமோ பங்களிப்பு ஓய்வூதிய திட்டமோ ஆசிரியர்களின் அரசு ஊழியர்களின் கோரிக்கை கிடையாது. *இரண்டுமே ஏமாற்றுத் திட்டங்கள்* என்பது தெளிவாக பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே சரியான தீர்வாக அமையும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டியது குறித்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு மட்டுமே.
மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக கூறுவது காலம் கடத்துவதற்கும், தட்டிக் கழிப்பதற்குமான உத்திகள் என்பதை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் உணர்வார்கள். முடியாது என்பதை நேரடியாக கூறாமல் வேறு வார்த்தைகளில் *மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்* கூறியிருக்கிறார்கள்.
10 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாக்குகளை பெற்று அமைந்த அரசு என்று முதல்வர் அவர்களே கூறியிருக்கிறார்கள். எனவே வள்ளுவர் வாக்கின்படி செயல்படுவதாக கூறும் அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை ஏமாற்ற நினைக்காமல் துரோகம் செய்யாமல் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது
இவண்.
*சு.குணசேகரன்*
*பொதுச் செயலாளர்*
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
தற்காலிக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு செலுத்திய நிதியை வட்டியுடன் 4 வாரத்தில் வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு...
Madurai Branch of Madras High Court Order to disburse contribution paid by Government in Contributory Pension Scheme of Temporary Employees with interest within 4 weeks...
தற்காலிக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு வழங்கிய நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் செட்டிபட்டியைச் சேர்ந்த பாபுஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கால்நடைத் துறையில் 2012-ல் தற்காலிகப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். 2004-ம் ஆண்டு அரசாணையின்படி புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனக்கும் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கு எண் வழங்கப்பட்டது. மாதந்தோறும் எனது சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்புத் தொகை செலுத்திய விவரம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. எனவே, தற்காலிக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய தொகையை திரும்பப் பெறுமாறு 2021-ம் ஆண்டில் நிதித் துறை சிறப்புச் செயலர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து, எங்கள் கணக்கில் நாங்கள் செலுத்திய தொகையையும், அரசு செலுத்திய பங்களிப்புத் தொகையையும் உரிய வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கை தொடர்பாக பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார்.
அரசுத் தரப்பில், "தற்காலிக ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். மனுதாரர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டனர். இதை அறிந்தவுடன், தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மனுதாரர்கள் கணக்கில் அரசு செலுத்திய தொகையை கோர உரிமை கிடையாது" என்றனர்.
பின்னர் நீதிபதி, "மனுதாரர்கள் கணக்கில் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக செலுத்திய தொகையை அரசு திரும்பப் பெறுவது என்பதை ஏற்க முடியாது. மனுதாரர்கள் பங்களிப்பு ஓய்வூதியத்தை உரிமையாக கோர முடியாது. ஆனால், அரசு அதிகாரிகளின் திடீர் நடவடிக்கை, மனுதாரர்களை ஏமாற்றம் அடையச் செய்யும். இது தொடர்பான நிதித் துறை சிறப்புச்செயலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர்கள் செலுத்திய தொகை, அரசின் பங்களிப்புத் தொகையை, உரிய வட்டியுடன் அவர்களுக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெ...