கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூன் மாதம் முதல் அறிமுகம் - யுபிஐ, ஏடிஎம் மூலம் பிஎப் பணம் எடுக்கலாம் - ஒரே நேரத்தில் ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதி



ஜூன் மாதம் முதல் அறிமுகம் - யுபிஐ, ஏடிஎம் மூலம் பிஎப் பணம் எடுக்கலாம் - ஒரே நேரத்தில் ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதி


UPI - EPFO - ATM - PF


ஜூன் மாதம் முதல் யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பிஎப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் நலனுக்காக இபிஎப்ஓ 3.0 என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த வரைவு கொள்கை வரும் ஜூன் மாதம் அமலுக்கு வருகிறது. தற்போது பிஎப் பணத்தை எடுக்கும் நடைமுறை மிகவும் கடினமாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்துள்ளதால், வங்கிகளை போன்று ஏடிஎம் மையங்களில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


மேலும் யுபிஐ மூலமும் பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் ஒரே நேரத்தில் ரூ.1லட்சம் வரை பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும். இந்த பணப்பரிமாற்றங்களுக்கு தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கைத் தேர்வுசெய்யவும் முடியும்.தற்போது வீடுகட்ட, கல்வி மற்றும் திருமணம், உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களை தெரிவித்து மட்டுமே பிஎப் பணத்தை எடுக்க முடியும். இனி வரும் காலங்களில் காரணங்கள் தெரிவிப்பது எளிதாக்கப்படும். இந்த தகவலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ இந்த ஆண்டு மே அல்லது ஜூன் இறுதிக்குள் பிஎப் உறுப்பினர்கள் விரைவில் யுபிஐ மற்றும் எடிஎம் மூலம் பணத்தை எடுக்க முடியும்’ என்று தெரிவித்தார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு -  அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette  போளூர், செ...