மார்ச் 30! யாருக்கான இறுதிக் கெடு? திமுகவிற்கா? ஜாக்டோ-ஜியோவிற்கா?
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
March 30! Whose deadline is it? DMK's? JACTO-GEO's?
*இந்த இறுதிக் கெடு JACTTO-GEOவிற்கும் சேர்த்துத்தான்*. மார்ச் 30க்குள் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கை எதையும் MKS நிறைவேற்ற 99.9% வாய்ப்பேயில்லை.
ஒருவேளை மார்ச் 30ல் JACTTO-GEO கூடினால். . . *JACTTO-GEOவில் உள்ள திமுக மோகத்தினரை அடக்கிவைத்துவிட்டு* அடுத்தகட்ட உண்மையான & தீவிரமான களப் போராட்டத்தை அறிவித்தால் மட்டுமே JACTTO-GEOவின் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் JACTTO-GEO பதாகையை மீண்டும் உணர்வோடே உயர்த்திப்பிடிக்க முன்வருவர்.
மேலும், மார்ச் 23ல் பெருமளவில் களத்திற்கு வருவார்களா என்பதும் ஐயத்திற்குரியதே! ஏனெனில், 6 ஆண்டுகளாக. . . அவ்வளவு ஏன் நேற்று முன்தினம் (13.03.25) இரவு வரை JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்களின் நம்பிக்கை நாடகங்களைப் பார்த்துப் பார்த்து JACTTO-GEO பதாகையின் மீதான நம்பிக்கையையே இழந்து வெறுத்துப் போயுள்ளனர் ஆசிரியர்களும் - அரசு ஊழியர்களும்.
'நாங்கள் நாடகமாடவில்லை; நம்ப வைக்கப்பட்டே நாங்களும் ஏமாற்றப்பட்டுள்ளோம்' என்று கூற JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருக்குக்கூட அடிப்படை உரிமை இல்லை என்பதே 100% உண்மை.
'அண்ணா தந்த INCENTIVEஐ தருவேன்' என்ற MKS, 2021ல் தனது முதல் பட்ஜெட் அறிப்பிலேயே தன் வாக்குறுதியைப் பொய்ப்பித்து INCENTIVEஐ பறித்தது தொடங்கி, 2025 வரை நம்பிக்கைக்குரிய ஒற்றை உரிமை மிட்பைக்கூட உறுதிப்படுத்திடாத MKSஐ மட்டுமே மீண்டும் மீண்டும் நம்புகிறோம். . . . நம்புகிறோம். . . . என்று கூறிக்கூறியே இன்று 2025ல் MKSன் இறுதி பட்ஜெட் வரை வலுவான எந்தவொரு போராட்டத்தையும் நடத்திடாதபடி JACTTO-GEO பதாகையின் தீரத்தைத் திட்டமிட்டே வீணடித்துவிட்டு இன்று நாங்களும் நம்பி ஏமாற்றப்பட்டோம் என்றால், அதை நம்ப உறுப்பினர்கள் எவரும் தயாராக இல்லை என்பதே கள உண்மை.
எனவே, தங்களால் இழக்க வைக்கப்பட்ட JACTTO-GEOவின் தீரத்தை அதன் அடிப்படை உறுப்பினர்களின் போராட்டக் குணத்தை மீட்பதன் வழியே நிலைநிறுத்த, முதற்கண் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மீதான நம்பகத்தன்மையை உறுப்பினர்கள் மத்தியில் மெய்ப்பித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆனால், இதையெல்லாம் அவர்கள் உணர்ந்துள்ளனரா? அல்லது தங்களைச் சுற்றி வைத்துக்கொண்டுள்ள சேவகர்களின் புகழ் மொழியை மட்டுமே கேட்டுச் செயல்படப்போகின்றனரா? என்பது தான் தெரியவில்லை.
மேலும் கள நிலவலரம் இவ்வளவு மோசமாக, ஒருவகையில் JACTTO-GEO உறுப்புச் சங்கங்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே முக்கிய காரணம் என்பதே கசப்பான உண்மை. 6 ஆண்டுகளாக நடக்கும் அனைத்தையும் நன்கு அறிந்திருந்தும் தாங்கள் சந்தா செலுத்தும் தங்களது சங்கத் தலைமைகளை உரிமை மீட்பிற்கு நேராக உந்தித் தள்ள முன்வராததோடே, மீறி உந்தித் தள்ள எவரும் முன் வந்தால் அவர்களை சங்க விரோதிகளாகக் கட்டமைக்கும் செயல்படாத் தலைமைகளின் அதிகார மொழிக்கு அடிமையாகி உந்தித் தள்ள முன்வருவோரைத் தூற்றி தங்களது நிலையை மேலும் மோசமாக்கிக் கொள்ளத் தங்களையுமறியாது - சிலர் நன்கு அறிந்தே தூபம் போட்டு வந்துள்ளனர்.
இப்போதாவது அடிப்படை உறுப்பினர்கள் தங்களது பலத்தையும், களத் தேவையையும் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லையே!
ஏனெனில் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில். . . .
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசியல் அனாதைகளே!
கொள்வாரும் இல்லை! கொடுப்பாரும் இல்லை!!
*JACTTO-GEO என்பது மதிப்பிழந்துவிட்ட பதாகையே! தீரமும் இல்லை! தீவிரமும் இல்லை!!*
*இந்நிலை மாறாது, நாம் தான் மாற்றியாக வேண்டும்.*