பிஎஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகள் போல் மாறும் - ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
EPF procedures will become like banking services - Union Minister Mansukh Mandaviya informed
வங்கியின் ATM-களில் இருந்து பி.எஃப் ஓய்வூதிய பணத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.O திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
EPFO என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு. இது ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தை நிர்வகிக்கும் இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
தொழிலாளர்களின் நிதி நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தை நிர்வகிப்பதே இதன் நோக்கம்.
பிஎஃப் பணத்தை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில், யு.பி.ஐ., மற்றும் ஏ.டி.எம்.கள் மூலம் பி.எப்., பணம் எடுக்கும் வசதி விரைவில் தொடங்குவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அடிக்கடி நிராகரிப்பு காரணமாக இ.பி.எப்., பணம் எடுப்பதில் ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள்.
எனவே, பணம் எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், செயல்முறையை விரைவுபடுத்தவும், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஜி-பே, போன்-பே மற்றும் பே.டி.எம்., போன்ற யு.பி.ஐ., தளங்களைப் பயன்படுத்தி இ.பி.எப்., உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை உடனடியாக எடுக்க இந்த திட்டம் அனுமதிக்கும். மேலும், மே அல்லது ஜூன் 2025க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தெலங்கானா மாநிலத்தில் EPFO அலுவலக வளாகத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், விரைவில் , EPFO 3.0 வரவுள்ளது என்றும் அதன்பின்பு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும் எனவும் தெரிவித்தார்.
இப்போதும் பி.எஃப் பணத்தை எடுக்க EPFO அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறிய அவர்,. EPFO 3.0 அப்டேட்டிற்கு பிறகு, எப்போது வேண்டுமானாலும் எந்த வங்கியின் ATM-களில் இருந்தும் பி.எஃப் ஓய்வூதிய பணத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.O திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.