கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Women working at L&T get one day of menstrual leave per month



L & T நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு


Women working at L&T get one day of menstrual leave per month


மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுமுறை அளிப்பதாக எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.


அண்மையில் உலகின் முன்னணி நாடாக நாம் வளர வேண்டுமெனில் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த விடுமுறையானது முதற்கட்டமாக இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான துறைகளில் இருக்கும் பெண்களுக்கு பொருந்தும் என்றும்,விரைவில் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊழியர்கள் வாரம் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய எல் அண்ட் டி நிறுவனர் சுப்ரமணியன் தற்போது பெண்களுக்கு தனது நிறுவனத்தில் சில சலுகைகளை வழங்கியுள்ளார்.


எல் அண்ட் டி நிறுவனரான எஸ்.என்.சுப்ரமணியன் சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் பேசியபோது, ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளில் இருந்து என்ன செய்யப்போகிறார்கள்? அவர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்யலாம் என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுப்ரமணியன் கார்ப்பரேட் முதலாளித்துவ மனநிலையில் பேசுவதாக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.


சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்றுவிட அதை பகிர்ந்து பலரும் ஞாயிற்றுக்கிழமையை வீண் செய்து விட்டீர்களே என கிண்டல் செய்து வந்தனர்.


இப்படி சர்ச்சையில் சிக்கிய எஸ்.என்.சுப்பிரமணியன் தற்போது தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பு எல் அண்ட் டியின் குறிப்பிட்ட சில பிரிவுகளில் பணி புரியும் பெண்களுக்கு மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், தனியார் நிறுவனங்களான ஸ்விகி, ஸொமேட்டோ போன்றவற்றிலும், கேரளா, பீகார் போன்ற மாநிலங்களிலும் ஏற்கனவே மாதவிடாய் கால சம்பளத்துடன் கூடிய விடுப்பு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS - March-2025 Bills submission- certain Instructions - communicated

மார்ச் 2025 மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பித்தல் தொடர்பாக சில அறிவுரைகள் IFHRMS - March-2025 Bills submission- certain Instructions - communica...