கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியருக்கு பிடியாணை : நீதிமன்றம் உத்தரவு



 கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிய ஆசிரியருக்கு பிடியாணை : நீதிமன்றம் உத்தரவு 


ஓரு வங்கியில் கடன் பெற்று சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி கடனை திருப்பிச் செலுத்தாத ஆசிரியரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து அரக்கோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரக்கோணம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன். இவர் தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் அரக்கோணம் ஸ்டேட் வங்கி பிரதானகிளையில் கடன் பெற்று இருந்தாராம். இதற்காக இவரது சம்பள கணக்கு இதே வங்கியில் இருந்ததாம். ஆனால் வங்கிக்கடனை பெற்று மூன்றாவது மாதத்தில் வங்கி நிர்வாகத்துக்கு தெரிவிக்காமல் தனது சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி விட்டாராம். இதை தொடர்ந்து பல மாதங்களாக கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருந்தாராம்.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் அரக்கோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ஆஜராக பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில் ஆசிரியர் குணசேகரன் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அரக்கோணம் நீதித்துறை நடுவர் ராம்குமார், ஆசிரியர் குணசேகரன் மீது பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-09-2025

      பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-09-2025 : School Morning Prayer Activities  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்