யான் அறக்கட்டளையின் சர்வதேச திருக்குறள் பேச்சுப் போட்டி: ரூபாய் 3 லட்சம் வரை பரிசு
யான் அறக்கட்டளை, சர்வதேச திருக்குறள் பேச்சுப் போட்டியை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குறளின் குரல்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஆன்லைன் பேச்சுப் போட்டி, திருக்குறளின் உலகளாவிய மதிப்புகளை பரப்பும் நோக்கில், 10 முதல் 60 வயது வரையிலான பங்கேற்பாளர்களை அழைக்கிறது. வெற்றியாளர்களுக்கு மொத்தம் 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.
போட்டி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
இளையோர் பிரிவு (வயது 10–13): முதல் பரிசு ரூ.25,000; இரண்டாம் பரிசு ரூ.10,000; மூன்றாம் பரிசு ரூ.5,000.
மூத்தோர் பிரிவு (வயது 14–18): முதல் பரிசு ரூ.50,000; இரண்டாம் பரிசு ரூ.25,000; மூன்றாம் பரிசு ரூ.10,000.
பொது பிரிவு (வயது 19–60): முதல் பரிசு ரூ.1,00,000; இரண்டாம் பரிசு ரூ.50,000; மூன்றாம் பரிசு ரூ.25,000.
பங்கேற்க விரும்புவோர், யான் தமிழ் யூடியூப் சேனலில் இடம்பெற்ற எந்த ஒரு திருக்குறளையும் தேர்ந்தெடுத்து, அதைப் பற்றி குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை பேச வேண்டும். வீடியோக்கள் மொபைலில் கிடைமட்டமாக ( horizontal) பதிவு செய்யப்பட வேண்டும், வீடியோ எந்தவித எடிட்டிங்கும் இல்லாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31-க்குள், யான் அறக்கட்டளை பக்கத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ அல்லது Yaan.live இணையதளம் வழியாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வை யான் இன்ஃப்ரா, யான் தமிழ் யூடியூப் சேனல், புதுக்கோட்டை சுதர்சன் கல்வி குழுமம் மற்றும் திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.