உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் கூறிய இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற விசாரணையின் முடிவில் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் நீதிமன்ற அறையில் இரண்டு பேருடன் வந்தார். ஒரு ஆண் மற்றும் ஒரு வயதான பெண். இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் இவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தயவுசெய்து அவர்களை பாருங்கள், அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இறந்ததாக தெரியவில்லை. பாருங்கள் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆதார் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்கள் கூட உள்ளது. ஆனால் வரைவு பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று யாதவ் நீதிபதிகளிடம் கூறினார். இதையடுத்து தேர்தல் ஆணையம் கவனக்குறைவால் பிழை ஏற்பட்டிருக்கலாம். இதை வைத்து டிராமா செய்ய வேண்டாம் என்று வாதித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.