கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி



 குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற்றார்


Vice President Election: C.P.Radhakrishnan wins


துணை ஜனாதிபதி தேர்தல் 2025 இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் 452 வாக்குகள் பெற்று சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்ர். சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். இதன் மூலம்  சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.


ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர் 


நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டத்தொடர் நடக்கும்போதே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாகத் துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி தேர்தல் குழுவில் 781 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 239 பேர் ராஜ்யசபாவையும், 542 பேர் லோக்சபாவையும் சேர்ந்தவர்கள். இதில் 342 பாஜக உறுப்பினர்கள் உட்பட 425 எம்.பி.க்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணிக்கு 126 காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 324 உறுப்பினர்கள் உள்ளனர்.


டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 152 வாக்குகள் வித்தியாசத்தில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்ஷன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

இதன் மூலம்  இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராகிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு >>...