கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 04.12.2025

கிழமை:- வியாழக்கிழமை


 

திருக்குறள்:


பால்:- பொருட்பால்

இயல்:- குடியியல்

அதிகாரம்:- பண்புடைம



*குறள் 997:*


அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் 

மக்கட்பண் பில்லா தவர் 


*விளக்க உரை:*


மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.


*பழமொழி :*


where trust lives, fear fades. 


நம்பிக்கை இருக்கும் இடத்தில் பயம் மறையும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.


2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.


*பொன்மொழி :*


இறைவன் ஒருவனே. இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் .ஆனால் உங்கள் கடமையை செய்ய தவறாதீர்கள் - வள்ளலார்.


*பொது அறிவு :*


01.இந்தியாவிற்கு வணிகத்திற்காக வந்த முதல் ஐரோப்பியர்கள் யார்?



போர்த்துகீசியர்கள்-The Portuguese


02. இந்தியாவின் முதல் நினைவு தபால் தலையில் யாருடைய உருவப்படம் இடம்பெற்றிருந்தது?


மகாத்மா காந்தி- Mahatma Gandhi


*English words :*


clueless-no idea


aboriginal-native


*தமிழ் இலக்கணம்:*


 தமிழ் குறிப்பு 

சொல்லின் முதலிலும் கடையிலும் இறுதியிலும் வரும் சொற்களை நாம் அறிந்து கொண்டால் நாம் தமிழ் நன்கு பேசி எழுத முடியும் 

முதல் எழுத்துகள் 

1. உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் சொல்லின் முதலில் வரும். 

2. க, ச, ந, த, ப, ம ஆகிய வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் முதலில் வரும்

3. ஞ,ய,வ வரிசையில் சில உயிர் மெய் எழுத்துகள் மட்டுமே முதலில் வரும் 

4. ஞ வரிசையில் ஞா மட்டுமே முதல் எழுத்தாக வரும் 

5. ய வரிசையில் ய,யா,யு, யூ, யோ, யௌ மட்டுமே முதல் எழுத்தாக வரும் 

6. வ, வா, வி, வீ, வெ, வே, வை,  வௌ ஆகியவை மட்டுமே முதல் எழுத்தாக வரும்


*அறிவியல் களஞ்சியம் :*


 நெருப்பு எரியும் சமயம் உண்டாகும் அதிதவெப்பம் அதன்மேலிருக்கும் காற்றினையும் சூடாக்கும்.அப்படியாக சூடாக்கப்பட்ட காற்று வளிமண்டல,மற்றும் இயற்பியல் விதிகளின் படி மேலெழும்பும்


*டிசம்பர் 04*


*இந்திய கடற்படை தினம்*


1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது. 


*ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்*


இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவியேற்றார்.


*நீதிக்கதை*


 *முயற்சி வேண்டும்*



ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. 



கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான். 



கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.


*இன்றைய செய்திகள்*


04.12.2025


⭐புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை


⭐மழை- வெள்ளத்தால் பாதிப்பு: இலங்கைக்கு மருத்துவ குழுவை அனுப்பிய இந்தியா


⭐தமிழகத்தில் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிப்பு- மத்திய அரசு


⭐பெங்களூருவில் ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல். வெளிநாட்டினர் மூவர் கைது!


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.

பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.


*Today's Headlines*


⭐Increased water release from Puzhal Lake- Flood warning.


⭐Rain-Flood damage: India sends medical team to Sri Lanka.


⭐Up to 2500 people in Tamil Nadu are affected by cancer every year- Central Government.


⭐Drugs worth Rs. 28 crore seized in Bengaluru, Three foreigners arrested. 


 *SPORTS NEWS*


🏀Rohit continues to be at the top of the batting rankings. Indian bowler Kuldeep Yadav is in 6th position in the bowling rankings.



Comfort After Wash Fabric Conditioner, Refill pouch, super saver pack, 2 Litre 


https://amzn.to/3Mnw4yC




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IGNOU - B.Ed பட்டச் சான்றிதழ்-க்கு தனியாக மதிப்பீடு பெற தேவை இல்லை - மாவட்டக் கல்வி அலுவலர்

 புது டெல்லி இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு  தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை  என அனை...