நவீன உத்திகளை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் மாநில வள மையம் (State Resource Centre) திறப்பு - அமைச்சர் அவர்களின் பதிவு
நவீன உத்திகளை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் நம்முடைய @tnschoolsedu சார்பில் சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாநில வள மையம் (State Resource Centre) உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இன்று திறந்து வைத்தோம்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள மொழிகள் ஆய்வகம், கணிதம் - அறிவியல் - சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான அரங்குகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அறை, கணக்கீட்டு சார் சிந்தனையை செழுமைப்படுத்தும் அரங்கு, "கற்க கசடற" என்ற அரங்கு உள்ளிட்டவற்றை பார்வையிட்டோம்.
>>> Great Republic Day Sale 2026 Offer...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.