கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Foundational Learning Study (2025-26) மாதிரி வினாத்தாட்கள் - இயக்குநரின் செயல்முறைகள்



FLS - Foundation Leaning Study - 3rd Standard Tamil and English Sample Questions


Foundational Learning Study (2025-26) Model Question Paper - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண்:2066/ எப் 1/2026, நாள்:10.02.2026


பொருள்:


தொடக்கக் கல்வி 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025-26) மாதிரி வினாத்தாட்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பாக.


பார்வை


சென்னை-06 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம் ந.க.எண் 2133192-ஜி3/2025 நாள் : 02.02.2026.


பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் 2026 பிப்ரவரி/ மார்ச் மாதத்தில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025-26) தொடர்பான தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளுக்கான NCERTயால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாட்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.


இம்மாதிரி வினாத்தாட்களை அனைத்துப் பள்ளிகளுக்கு அனுப்பிடவும் 3ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்கள் மூலம் வழங்கிடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்துப் பள்ளித் தலைமயாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இணைப்பு-


1. தமிழ் மாதிரி வினாத்தாள்


2. ஆங்கில மாதிரி வினாத்தாள்


3. உருது மாதிரி வினாத்தாள்



தொடக்கக் கல்வி இயக்குநருக்காக

10-02-26


பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

மின்னஞ்சல் மூலமாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

17-06-2026 TN SCERT Special TET 1 & TET 2 English SESSION 2 - Youtube Links

  Good afternoon, all. Kindly note today's session and its timings Click here for SPECIAL TET PAPER 1 ENGLISH SESSION 2 https://www.yout...