கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம் (Vande Mataram)’ கட்டாயம்



அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்


தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மற்றும் பள்ளிகளிலும், தேசிய கீதமான *‘ஜன கண மன’* க்கு முன்பாக இசைக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. 


பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பத்ம விருது விழாக்கள் உள்ளிட்ட குடிமக்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாக இடம்பெறும். 


சினிமா அரங்குகள் உள்ளிட்ட பொது அரங்குகளிலும் 'வந்தே மாதரம்' இசைக்கப்படலாம்; ஆனால் அங்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும், 1937ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நான்கு சரணங்களும் உட்பட, பாடலின் மொத்த ஆறு சரணங்களும் இனிமேல் இசைக்கப்பட வேண்டும்.


தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், பாடலை அவமதிப்போருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMISல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற இயக்குநர் உத்தரவு

EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...