தொடக்கப்பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் ஆன்லைன் வழியாக பயிற்சி - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.
ந.க. எண். 011556/எப் 1/2026, நாள் : 19.06.2026.
பொருள்
தொடக்க கல்வி - RIESI, Bangalore 10-day Online English Language Enrichment Programme இரண்டாவது மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சி தொடக்கப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் அளிக்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல்-சார்பாக.
பார்வை
Regional Institute of English, South India, Letter No. RIE/A3/ELEP/10-Day/online/KT-KI-TN/2026-2027, Dated 15.06.2026.
பார்வையில் காணும் கடிதததின் படி, The Regional Institute of English, South India (RIESI), Bangalore மூலமாக ஆசிரியர்களுக்கு 10-day Online English Language Enrichment Programme இரண்டாம் தொகுதி பயிற்சியானது 06.07.2026 முதல் 17.07.2026 வரை மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியானது 20.07.2026 முதல் 31.07.2026 வரை வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1230 மணி வரை இணையவழியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற தொடக்க/நடுநிலைப் பள்ளி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) ஆங்கில பாட ஆசிரியர்களுள், இரண்டாம் தொகுதி பயிற்சியில் (06.07.2026 முதல் 17.07.2026 வரை) கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியில் (20.07.2026 முதல் 31.07.2026 வரை) கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் என மாவட்டத்திற்கு இரண்டு ஆசிரியர்களை, RIESI, Bangalore லிருந்து பெற்றப்பட்ட கடிதத்தில் (இணைக்கப்பட்டுள்ளது) தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றி, தேர்ந்தெடுத்து இத்துடன்
இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கையொப்பமிட்டு Scan செய்து 23,06,2026-க்குள் deef2sec@gmailcom என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு.
1. பார்வையில் காணும் கடித நகல்.
2. படிவம்.
தொடக்கக் கல்வி இயக்குநருக்காக
பெறுநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)
மின்னஞ்சல் மூலமாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.