கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்



தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் 


தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்


மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை 05.30 மணியளவில் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை (WHITE PAPER ON THE FISCAL MANAGEMENT OF TAMIL NADU) வெளியிட்டார்.


தமிழ்நாடு அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்வு.


மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 


இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது - அமைச்சர் மரிய வில்சன்.


தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 1,28,934 ரூபாயாக உள்ளது.


வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட கடும் உச்சம். முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கியுள்ளது. 


அரசு, வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்துகிறது. கனிம வளத்துறையில் நடந்த ஊழல், வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.


அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டின் GST குறைவாக உள்ளது.


ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை. 


மாநில GDPயில் மொத்த வருவாய் அளவு 10%ல் இருந்து 8.32% ஆக சரிவு.


உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான தொகையால் கூடுதல் செலவு - அமைச்சர் மரிய வில்சன்.


2021-26 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. 


இந்த ஐந்தாண்டு கால கடனானது, தமிழகம் சுதந்திரத்துக்கு பின் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட அதிகம்.


வட்டி, சம்பளம், ஓய்வூதியத்திற்காக மொத்த நிதியில் 64% செலவு. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி. 


மாநிலத்தின் திட்டங்களுக்கு 13% மட்டுமே செலவு செய்யப்படுகிறது.


மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன். போக்குவரத்து கழகத்திற்கு மொத்த இழப்பு ரூ.72,667 கோடி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...