திருவண்ணாமலை ஏரியில் மூழ்கி 4 மாணவிகள் உட்பட 5 போ் உயிரிழப்பு.
திருவண்ணாமலை பெரும்பாக்கம் அருகே சமுத்திரம் ஏரியில் மூழ்கி அரசு பெண்கள் மையத்தை சேர்ந்த 4 சிறுமிகள் மற்றும் விடுதி பாதுகாவலர் உயிரிழப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் அருகே உள்ள சமுத்திரம் ஏரியில், தீபாவளி விடுமுறை நாளான நேற்று (நவம்பர் 9, 2026) குளிக்கச் சென்ற 4 மாணவிகள் மற்றும் பெண் பாதுகாவலர் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் விவரம்:
• மாணவிகள்: விஜயலட்சுமி, அல்லி, பூமிகா மற்றும் வள்ளியம்மாள்
• பாதுகாவலர்: தேன்மொழி (விடுதி பெண் பணியாளர்)
சம்பவம் பற்றிய முக்கிய விவரங்கள்:
• இடம்: திருவண்ணாமலை மாவட்டம், பெரும்பாக்கம் சாலையில் உள்ள ஆணைப்பிறந்தான் கிராமத்தில் உள்ள சமுத்திரம் ஏரி.
• காரணம்: தீபாவளி விடுமுறையையொட்டி, அரசு பெண்கள் பாதுகாப்பு விடுதியில் தங்கிப் படித்த மாணவிகள் 4 பேரும், பாதுகாவலர் தேன்மொழியுடன் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
• அப்போது எதிர்பாராதவிதமாக மாணவிகள் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற பாதுகாவலர் தேன்மொழியும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
• தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 5 பேரின் உடல்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
• மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முழுமையான தகவல்கள்
திருவண்ணாமலை அருகே உள்ள அரசு உதவி பெறும் பெண் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்துவந்த 4 மாணவிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பெண் செவிலியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள ஆணாய்பிறந்தான் கிராமத்தில் அரசு உதவிபெறும் டெர்டெஸ்ஹோம்ஸ் என்ற பெயரில் பெண் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் மிகவும் வறுமையில் உள்ளவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
காப்பகத்தில் தங்கியிருந்த மாணவிகளில் சிலர் தீபாவளி விடுமுறைக்காக வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை மீண்டும் காப்பகத்துக்கு வந்தனர்.
பகல் 12 மணி அளவில் காப்பகத்தில் பணிபுரிந்து வந்த கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குளம் கிராமத்தை சேர்ந்த செவிலியர் தேன்மொழி (24) மற்றும் மற்றொரு பெண் ஊழியர் ஆகியோர் உதவியுடன் 11 மாணவிகள் காப்பகத்துக்கு பின்புறம் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள சமுத்திரம் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஏரிக்கு சென்றதும், முதலில் செவிலியர் தேன்மொழி உதவியுடன் 5 மாணவிகள் ஏரியில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது, ஏரியில் சிறிது தூரம் சென்ற போது ஏரியில் ஆழம் இருப்பதை அறி யாமல் பள்ளத்தில் மூழ்கிய ஒரு மாணவியை மீட்க முயன்றபோது ஒருவர் பின் ஒருவராக சென்று 5 பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக்கண்டு சக மாணிகள் மற்றும் ஊழியர் கத்தி கூச்சலிட்டதையடுத்து, காப்பகத்தின் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் உடனடியாக ஏரிப்பகுதிக்கு சென்று ஏரியில் மூழ்கிய தேன்மொழி மற்றும் மாணவிகளான கீழ்பென்னாத்தூர் அடுத்த நெடுங்காம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வள்ளி (16), புதுப்பாளையம் அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி (16), பூமிகா (13), அல்லி (14) ஆகிய 5 பேரையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட அனைவரையும் உடனடியாக மேற்கு காவல் நிலைய போலீஸார் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 5 பேரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் மற்றும் வருவாய் துறையினர், சமுத்திரம் ஏரிப்பகுதியை பார்வையிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், காப்பக ஊழியர் களிடமும் சம்பவம் குறித்து கேட் டறிந்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். காப்பகத்தில் தங்கியிருந்த மாணவிகள் உட்பட 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருவண்ணா மலை மாநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.