கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு...



 கணினி உதவியாளர்களுக்கு சம்பளம் ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் 1843 பேருக்கு மாத ஊதியம் ரூ.16,000 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு செய்து ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் உத்தரவு...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கான சம்பளம், 16,000த்தில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில், மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மாநிலம் முழுதும் 1,843 கணினி உதவியாளர், மாதம் 16,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.


அவர்களின் சம்பளத்தை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, கணினி உதவியாளர்களுக்கு, நேற்றுமுன்தினம் முதல் மாத சம்பளம் 16,000 ரூபாயை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அனுமதி அளித்துள்ளது.


இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர்  வெளியிட்டுள்ளார்.


2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றியத் தொடக்க & நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்கள் வாரியாக வழங்கப்படவுள்ள கையடக்கக் கணினிகளின் (TAB) எண்ணிக்கை - மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாதுகாப்பாக பெற்று பராமரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றியத் தொடக்க &  நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்கள் வாரியாக வழங்கப்படவுள்ள  கையடக்கக் கணினிகளின் (TAB) எண்ணிக்கை - மாவட்டக் கல்வி அலுவலர்கள்  பாதுகாப்பாக பெற்று பராமரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது... 


District-wise number of Portable Computers (TAB) to be provided to teachers working in Government/ Municipal/ Panchayat Union Primary & Middle Schools during the academic year 2024-2025 - Secured acquisition and maintenance by District Education Officers - Proceedings of Director of Elementary Education depending on instructions...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம்: அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்...


 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க கல்வித் துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை  அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

 

2004-ம் ஆண்டு பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆய்வின்போது கணினி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவானது. இதையடுத்து பாடத்திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கணினி அறிவியலை ஒரு பாடமாக பயிற்றுவிக்கவும், இதர வகுப்புகளுக்கு பின்னர் விரிவுபடுத்தவும் திட்டமிட்டு அப்போது அரசாணை வெளியிடப்பட்டது.



இதற்கான பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டன. அதன்பின் பல்வேறு காரணங்களால் அவற்றை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. தமிழக பாடத்திட்டத்தில் தற்போது 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.


இதர வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் மூலம் கணினியின் அடிப்படை பயன்பாடுகள் குறித்து பயிற்றுவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு, அரசு உதவிப் பள்ளிகள் இவற்றை முறையாக பின்பற்ற முடிவதில்லை. இதனால் அடிப்படை கணினி அறிவுகூட இல்லாமல் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.


தற்போதைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிமனித வாழ்க்கையில் அத்தியாவசியமாகி விட்டது. மேலும், இணையதள முறைகேடு மற்றும் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அதுகுறித்த குறைந்தபட்ச விழிப்புணர்வு இருப்பது அவசியமாகும்.


இவற்றைக் கருத்தில் கொண்டு 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி அறிவியலை பாடமாக பயிற்றுவிக்க முடிவாகியுள்ளது. அதன்படி பாடத்திட்டம் தயாரிப்பு, பாடவேளைகள், தேர்வு நடைமுறை உள்ளிட்ட முன்தயாரிப்பு பணிகள், தேவையான கட்டமைப்பு வசதிகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இப்பாடத்துக்கு தேர்வு நடத்தப்பட்டாலும் அந்த மதிப்பெண் தேர்ச்சிக்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.


கணினி அறிவியல் பாடத்தைகற்றுத் தர கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு மறுத்து விட்டால் அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் பயிற்றுவிக்கப்படும். அதற்காக அவர்களுக்கு பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப் படும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த பரிசீலனை செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த முடியும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் - தலைமைச் செயலாளர் கடிதம்...

 தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி  அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்...

Chief Secretary Letter No. 29530/S1/2020-1, Dated: 03-12-2020...

>>> Click here to Download Tamilnadu Chief Secretary Letter No. 29530/S1/2020-1, Dated: 03-12-2020...

>>> நாளிதழ் செய்தி....


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...