கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமெரிக்காவை ஆளப் போவது யார்? - கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி




நாளை வாக்குப்பதிவு நடைபெறும் அமெரிக்கத் தேர்தல் ஒரு பார்வை


அமெரிக்காவை ஆளப் போவது யார்? நாளை வாக்குப்பதிவு - கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி


*✍️ உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவை ஆளப் போவது யார் என்பதை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


🔘  வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதில், இந்திய வம்சாவளியும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.


🔘 அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார். குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது.


🔘 இதில், அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகியதால் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் பைடன் களத்தில் இருக்கும் வரை, டிரம்ப்பின் கை ஓங்கியிருந்த நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மாற்றப்பட்ட பிறகு நிலைமை மாறியது. டிரம்ப்புடனான நேரடி விவாதத்தில் கமலா ஹாரிசின் படபட பதில்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தன. இதனால் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றார்.


🔘 எனவே கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக காணப்படுகின்றன. அவர் வெல்லும் பட்சத்தில் பல்வேறு சாதனைகளையும் படைப்பார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் வெள்ளை மாளிகையில் நுழைவார். இதுவரை 2016ல் ஹிலாரி கிளிண்டன் மட்டுமே பெண் வேட்பாளராக தேர்தலை சந்தித்துள்ளார். அதிலும் அவர் டிரம்ப்பிடம் தோற்றார். இதனால் கமலா ஹாரிஸ் வெல்லும் நிலையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் திருப்பமாக பார்க்கப்படும்.


🔘 மேலும், அமெரிக்க அதிபராகும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையும் கமலா ஹாரிசுக்கு கிடைக்கும். அதே சமயம் டிரம்ப்பை பொறுத்த வரையில் தொழிலதிபர்களின் ஆதரவை பெற்றுள்ளார். குறிப்பாக, உலக நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க், டிரம்ப்புக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், ஆரம்பத்தில் கமலாவிடம் பின்தங்கிய டிரம்ப் பின்னர் கடும் போட்டியாளராக மாறியிருக்கிறார். எனவே டிரம்ப் வெல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், இம்முறை அதிபர் தேர்தல் முடிவு கணிக்க முடியாததாகவே உள்ளது.


🔘 கிட்டத்தட்ட 18.65 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 4.5 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி தங்கள் வாக்கை செலுத்தி விட்டனர். தபால் மூலமாகவும் வாக்குகளை செலுத்தலாம். முதியவர்கள், தேர்தல் நாளன்று பணி நிமித்தம் காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் உள்ளிட்டோர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி மூலம் 81 வயதான அதிபர் ஜோ பைடனும் ஏற்கனவே தனது வாக்கை செலுத்திவிட்டார்.


🔘இத்தகைய வசதி தந்தும், கடந்த 2020ல் தான் கடந்த 100 ஆண்டில் அதிகபட்சமாக 66.6 சதவீத வாக்குகள் பதிவானது. இம்முறை கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவுவதால் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்கும். அதைத் தொடர்ந்து, உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். நள்ளிரவில் அல்லது அடுத்த நாள் அதிகாலையில் அமெரிக்காவின் 47வது அதிபர் யார் என்பது தெரியவரும்.


*இந்தியர்கள் யாருக்கு ஆதரவு?


இந்திய வம்சாளியான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வேண்டுமென்பதில் பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் விருப்பம் கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. கடந்த முறை டிரம்ப்புக்கு வாக்களித்த பலரும் இம்முறை கமலாவுக்குதான் தங்களின் வாக்கு என கூறி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 52 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


🔘 ஏஏபிஐ எனும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 55 சதவீத இந்திய அமெரிக்கர்கள் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 26 சதவீதத்தினர் மட்டுமே டிரம்ப்பை ஆதரித்துள்ளனர். கார்னெகி எண்டோவ்மென்ட் எனும் மற்றொரு நிறுவனம் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், 61 சதவீத இந்தியர்கள் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், 32 சதவீத இந்தியர்கள் டிரம்ப்பை ஆதரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய பெண்களில் 67 சதவீதம் பேரின் ஓட்டு கமலாவுக்கு தான் என கூறி உள்ளனர்.


*1.4% கமலா முன்னிலை


கடந்த அக்டோபர் 30ம் தேதி நிலவரப்படி, அதிபர் தேர்தல் கணிப்பில், கமலா ஹாரிஸ் 1.4 சதவீத முன்னிலையில் உள்ளார். அவர் 48.1% மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். அதுவே டிரம்ப்புக்கு 46.7 சதவீத ஆதரவு உள்ளது. 5.2 சதவீத மக்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யவில்லை என புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. கணிப்புகளை பொறுத்த வரையில் கமலாவுக்கே வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.


* 7 போர்க்களங்கள்


பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. இதில் இழுபறி நிலவும் 7 மாகாணங்கள் போர்க்களங்களாக கருதப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை போர்க்கள மாகாணங்களாக உள்ளன.


🔘 அரிசோனாவில் 11, ஜார்ஜியாவில் 16, மிச்சிகனின் 15, நெவாடாவில் 6, வடகரோலினாவில் 16, பென்சில்வேனியாவில் 19, விஸ்கான்சினில் 10 பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கின்றன. இம்மாகாணங்களில் கமலா ஹாரிசும் டிரம்பும் கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரம் செய்துள்ளனர்.


*தேர்தல் எப்படி நடக்கும்?


மற்ற குடியரசு நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்க அதிபர் தேர்தல் வித்தியாசமான முறையில் நடக்கும். இங்கு அதிபரும், துணை அதிபரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. எலக்ட்ரால் காலேஜ் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள் (எலக்ட்ரால் காலேஜ்) இருக்கும்.


🔘 உதாரணமாக, கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்சாஸ் மாகாணத்திற்கு 40 வாக்குகளும் உண்டு. மொத்தமுள்ள 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்டன் டி.சி. யை சேர்த்து 538 பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கும். இதில் 270 பிரதிநிதிகள் வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராவார்.


🔘 வாக்காளர்கள் மாகாண அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து பிரதிநிதிகள் வாக்குகளும் வழங்கப்படும். இந்த தேர்தல் மூலமாக அதிபர் மட்டுமின்றி துணை அதிபர், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் அவையில் 34 எம்பிக்கள், பிரதிநிதிகள் அவையில் மொத்தமுள்ள 435 எம்பிக்கள், 13 மாகாண ஆளுநர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்படுவார்கள்.


*பல நாடுகளின் தலையீடு


அமெரிக்காவின் அதிபர் என்பவர் அமெரிக்க மக்களின் தலைவிதியை மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர். அடுத்த அதிபர் யார் என்பதை பொறுத்துதான், இஸ்ரேல்-காசா போர், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல், ஈரான் உரசல், சீனா, தைவான் விவகாரம் என பல்வேறு விஷயங்களின் தலையெழுத்து எழுதப்படும். டிரம்ப் அதிபராகும் பட்சத்தில் இஸ்ரேலின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். பாலஸ்தீனர்களின் எதிர்காலம் இருண்ட காலமாகி விடும்.


🔘 ஈரான், வடகொரியா விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடுகள் எடுக்கப்படும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்ரேல், ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளின் உளவுத்துறைகள் பல்வேறு ரகசிய வேலைகளை செய்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. மக்களின் மனதை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப உதவியுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மறைமுகமாக தலையிடக் கூடும் என அறியப்படுகிறது.


வித்தியாசமான அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை - தேர்தல் எப்படி நடக்கிறது?



 வித்தியாசமான அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை -  தேர்தல் எப்படி நடக்கிறது?


உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், இம்மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில், இதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அது என்ன என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.


அமெரிக்காவில் அதிபரும், துணை அதிபரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் “Electoral College” எனப்படும் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவின் மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கும். உதாரணமாக, கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்சாஸ் மாகாணத்திற்கு 40 வாக்குகளும் உண்டு. 50 மாகாணங்கள் மற்றும் தலைநகரப் பகுதியான வாஷிங்டன் டி.சி. யை சேர்த்தால், மொத்தம் 538 Electoral College வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராவார். வாக்காளர்கள் மாகாண அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல.


அதாவது, எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். உதாரணமாக, டெக்சாஸில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவருக்கு அம்மாகாணத்தின் 40 வாக்குகளும் வழங்கப்படும்.


அதனால்தான், கடந்த 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் டிரம்பை விட 30 லட்சம் வாக்குகளை கூடுதலாகப் பெற்ற போதிலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாகப் பெற்றதால் தோல்வியைத் தழுவினார்.


பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. எனவே, இழுபறி நிலவும் சில மாநிலங்களிலேயே கூடுதல் கவனம் உள்ளது. இந்த மாகாணங்கள் ‘swing states’ என அழைக்கப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.


இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை ‘swing states’-களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்திக் கமலா ஹாரிசும் டிரம்பும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.


எலக்டோரல் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களும் சமமாகப் பெற்றால் பிரதிநிதிகள் மற்றும் செனட் உறுப்பினர்களும் வாக்களித்து அதிபரைத் தேர்வு செய்வர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 1824-ஆம் ஆண்டு நான்கு அதிபர் வேட்பாளர்களான ஆண்ட்ரூ ஜாக்சன், ஜான் குயின்சி ஆடம்ஸ், ஹென்றி க்ளே மற்றும் வில்லியம் க்ராஃபோர்ட் ஆகியோர் சம வாக்குகளைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான் குயின்சி ஆடம்ஸ் அதிக ஆதரவு பெற்று அதிபரானார்.


Cyber Crime: 'போலியான சுப்ரீம் கோர்ட், நீதிபதி, போலீஸ்' - தொழிலதிபரை மிரட்டி 7 கோடி பணம் பறித்த கும்பல்

 


Cyber Crime: 'போலியான சுப்ரீம் கோர்ட், நீதிபதி, போலீஸ்' - தொழிலதிபரை மிரட்டி 7 கோடி பணம் பறித்த கும்பல்


ஆன்லைன் மோசடி கும்பல்கள் புதிய புதிய வழிகளில் பொதுமக்களிடம் தங்களது வேலையைக் காட்டி வருகின்றன. சமீபகாலமாகப் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களை யாரிடமும் பேசவிடாமல் தடுத்து, அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாகப் பிடுங்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.


இம்மோசடி கும்பலிடம் நன்றாகப் படித்தவர்கள் கூட ஏமாந்து விடுகின்றனர். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, போலீஸார் எனப் பயமுறுத்தி பணத்தைப் பறித்து விடுகின்றனர். டெல்லியைச் சேர்ந்த எஸ்.பி. ஓஸ்வால் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் வரதனுக்கு (82) நேற்று முன்தினம் ஒருவர் போன் செய்து பேசியிருக்கிறார். போனில் 9வது நம்பரை அழுத்தவில்லையெனில் உங்களது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என்று அந்த நபர் மிரட்டியிருக்கிறார். இதனால் வர்தன் தனது போனில் 9வது நம்பரை அழுத்தியிருக்கிறார்.


உடனே ஒருவர் வர்தனிடம், தான் மும்பை கொலாபாவில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் ஒரு போன் இணைப்பு பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு உங்களது பெயரில் கனரா வங்கியில் ஒரு கணக்கு இருப்பதாகவும், அதனை பணமோசடிக்குப் பயன்படுத்தி இருப்பதாகவும் போனில் பேசிய நபர் தெரிவித்திருக்கிறார். ஆனால் வர்தன் தனக்கு கனரா வங்கியில் எந்த கணக்கும் கிடையாது என்று மறுக்க, உடனே போனில் பேசிய நபர் உங்களது பெயரில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கானது ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய நிதிமோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.


தொழிலதிபர் தனக்கு கனரா வங்கியில் கணக்கு இல்லை என்றும், நரேஷ் கோயலை தெரியாது என்றும், தான் இதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்து இருப்பதால் அப்போது கொடுக்கப்பட்ட ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.


"வங்கிக் கணக்குத் திறக்க உங்களது ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளதால் உங்கள் மீது சந்தேகப்படுகிறோம். எனவே விசாரணை முடியும் வரை நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள். யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது. இது தேசியப் பாதுகாப்போடு தொடர்புடைய விவகாரம் என்பதால் இது குறித்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது" என்று பயமுறுத்தியிருக்கின்றனர்.



வரதன்



அதோடு யாரிடமாவது பேசினால் 3 முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் மிரட்டியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து, ராகுல் குப்தா என்பவர் வீடியோ காலில் வந்து, தான் தலைமை விசாரணை அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியிருக்கிறார். அத்தொழிலதிபரிடம் அவரது இளமைக் காலம், சொத்து போன்ற விபரங்களைக் கேட்டிருக்கிறார். உடனே தனது மேலாளரிடம் கேட்டால்தான் சொத்து மதிப்பு தெரியும் என்று தொழிலதிபர் தெரிவித்திருக்கிறார். விசாரணை அதிகாரிகள் அனைவரும் சிவில் டிரஸில் இருந்தனர். ஆனால் கழுத்தில் அடையாள அட்டைகளைத் தொங்க விட்டிருந்தனர். அதில் மும்பை காவல்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அடையாள அட்டைகள் இருந்தன. அவர்கள் நீதிமன்றம் அறை ஒன்றைக் காட்டியிருக்கின்றனர்.


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் போன்ற ஒருவரைக் காட்டி விசாரணை என்ற ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக இருந்தவர் தொழிலதிபருக்குக் கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறார். அதோடு 7 கோடியை உடனே செலுத்தும்படி கூறி கைது வாரண்ட் மற்றும் பணத்தைச் செலுத்துவதற்கான உத்தரவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருக்கிறார். அவர்கள் அனுப்பிய ஆவணங்களில் உச்ச நீதிமன்றம் முத்திரை இருந்திருக்கிறது. இதையடுத்து வர்தன் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.


அதன் பிறகுதான் இது மோசடி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே இது குறித்து தொழிலதிபர் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை, உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு ரூ.5.25 கோடியை முடக்கினர். இம்மோசடி தொடர்பாக செளதரி மற்றும் ஆனந்த் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமைச் சேர்ந்த ஆனந்த் குமார் தனது வங்கிக் கணக்கை மோசடி கும்பல் பயன்படுத்தக் கொடுத்துள்ளார். இம்மோசடியில் தொடர்புடைய எஞ்சியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


DEE ordered to ensure 100% correctness of number of students in attendance register & EMIS website

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு &  EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை உறுதி செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு 


Director of Elementary Education ordered to ensure 100% correctness of number of students uploaded in attendance register & EMIS website in Government and Government aided schools


தொடக்கக் கல்வி இயக்குநர் இணைய வழி கூட்டம் 30.10.2024  அன்று மாவட்ட கல்வி அலுவலர், BEO (Nodal), DC -1 ஆகியோருக்கு நடத்தப்பட்டது.


    1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் படி உள்ள மாணவர் எண்ணிக்கை &  EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை CRC அளவில் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார். 


     2. மேலும் மாணவர் எண்ணிக்கை வருகை பதிவேட்டிற்கும் & EMIS இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பின் உடனடியாக சரி செய்து கொடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.


      3. பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள Raise Request & Admission Approval - pending இருப்பின் ஆசிரியர் பயிற்றுநர்கள் DC மூலம் உடனடியாக சரி செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.


        4. மாணவர்கள் Long Absent எனில் வேறு பள்ளிகளில் சேர்ந்து இருப்பின் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மாணவனை Common Pool ற்கு அனுப்பிட வேண்டும்.


      மேற்கண்ட பணிகளை 04.11.2024 (திங்கள்) அன்று மாலைக்குள் முடித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை & EMIS இணைய தளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கையும் சரியாக உள்ளதை குறுவளமைய அளவில் முகாம் நடத்தி சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஆசிரியர் பயிற்றுநர்கள் மாணவர் வருகைப் பதிவேடு & பள்ளியின் EMIS இணைய தளத்தினை சரிபார்த்து 100% சரியாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக இப்பணி மேற்கொள்ளப்படுவதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வட்டார அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இருப்பதால் இப்பணியினை அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு நடத்திட வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவர் விவரம் 100% EMIS இணைய தளத்தில் சரியாக உள்ளது என சான்றிதழ் அளிக்க வேண்டும்.


முதன்மைக் கல்வி அலுவலர்

கரூர்.



>>> சரிபார்ப்பு படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Months for Pensioners to submit life certificate


ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டிய மாதங்கள்


Months for Pensioners to submit life certificate



 💢 அரசாணை எண்.165 / நிதி [ஓய்வூதியம்] துறை தேதி 31.05.2023.


✅ ஓய்வூதியர்கள்  

வாழ்நாள் சான்றிதழ் 

அளிக்க வேண்டிய மாதங்கள்.

[Grace Period மாதம் உட்பட]:


🌎 ஓய்வுபெற்ற மாதம்:


💢ஏப்ரல் எனில் ஏப்ரல் & மே.


💢மே எனில் மே & ஜூன்.


💢 ஜூன் எனில் ஜூன் & ஜூலை. 


💢ஜூலை எனில் ஜூலை & ஆகஸ்ட். 


💢 ஆகஸ்ட் எனில் ஆகஸ்ட் & செப்டம்பர்.  


💢 செப்டம்பர் எனில் செப்டம்பர் & அக்டோபர்.


💢அக்டோபர் எனில் அக்டோபர் & நவம்பர். 


💢 நவம்பர் எனில் நவம்பர் &  டிசம்பர்.


💢டிசம்பர் எனில் டிசம்பர் & ஜனவரி.


💢ஜனவரி எனில் ஜனவரி & பிப்ரவரி.


💢பிப்ரவரி எனில் பிப்ரவரி & மார்ச்.


💢மார்ச் எனில் மார்ச் & ஏப்ரல்.


🌷இதனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.


🌷பிற ஓய்வூதிய நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.


🌎குறிப்பு:

✅ஓய்வுபெற்ற மாதம் மற்றும் அதன் அடுத்த மாதம் [Grace Period] சேர்க்கப்பட்டுள்ளது.


✅அரசாணை பாரா 6 (ii)ன் படி 

ஓய்வூதியம் பெறுபவர் சேவை மற்றும் குடும்ப ஓய்வூதியம் [இரட்டை ஓய்வூதியம்] இரண்டையும் பெறும்போது, ​​மஸ்டரிங் மாதம், ஒவ்வொரு ஆண்டும் சேவை ஓய்வூதியதாரரின் ஓய்வு மாதமாக இருக்கும். 


💢இந்த கால அளவுக்குள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிடில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும்.



அரசாணை (நிலை) எண். 165, நாள்: 31-05-2023 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியர் நேர்காணல் ( மஸ்டரிங் ) செயல்முறையை எளிதாக்குதல் - தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் தொடங்கும் மாதத்தில் வருடாந்தச் சேகரிப்பு - ஆணைகள் - வெளியிடப்பட்டது 


G.O. Ms. No. 165 Dt: May 31, 2023  - PENSION/ FAMILY PENSION – Simplification of mustering process - Tamil Nadu State Government Pensioners - Annual Mustering of Pensioners/Family Pensioners during the month of their retirement/commencement – Orders - issued



>>> Click Here to Download G.O. Ms. No. 165, Datedt:  31-05-2023...


Local Holiday for Tiruvarur District on 13-11-2024 - District Collector


13-11-2024  அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்


Local Holiday for Tiruvarur District on 13-11-2024 - District Collector


முத்துப்பேட்டை கந்தூரி 13-11-2024  அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அந்த விடுமுறை ஈடு செய்திட 07-12-2024 வேலை நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Apply to add name in birth certificates of children - Tamil Nadu Govt

குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு


Apply to add name in birth certificates of children - Tamil Nadu Government 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...