குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு
Apply to add name in birth certificates of children - Tamil Nadu Government
குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு
Apply to add name in birth certificates of children - Tamil Nadu Government
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டுமா?
-அரிய வாய்ப்பு!
பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநா் உரிமம் பெற, கடவுச்சீட்டு மற்றும் விசா உரிமம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது.
பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூா்வ சான்றிதழாகும். குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும்.
அவ்வாறு பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயா் பதிவு செய்யாதவா்கள், தங்கள் பெயரை பிறப்புச் சான்றிதழில் 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்கள் பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை உறுதி செய்து, விடுபட்டிருந்தால் மாணவர்கள் வாயிலாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து தேவையான ஆவணங்களை கொண்டு பெயர் சேர்க்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 21 நாள்களுக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்யலாம்.
12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரை 15 வருடங்களுக்குள் உரிய காலதாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்வதற்கு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற 31-12-2024 வரை கால அவகாசம் - மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் கடிதம்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய தவறியவர்கள் கவனத்திற்கு...
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு - பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவிப்பு (Extension of time till 31.12.2024 for registration of child's name in birth certificate - Notification of Registrar of Births and Deaths)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பிறப்பு சான்றிதழ்
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற, பிறப்பு- இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழ் ஆகும்.
பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு- இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம்.
கால அவகாசம் நீட்டிப்பு
12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி, குழந்தையின் பெயரை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, 1.1.2000 -க்கு முன்பு பதிவு செய்த பிறப்புகளுக்கும், 1.1.2000 -க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட தாலுகா, பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம். இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு, இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.
அக்டோபர் 1 முதல், பிறப்புச் சான்றிதழ் பல்வேறு நோக்கங்களுக்காக ஒரே செல்லுபடியாகும் ஆவணமாகச் செயல்படும் (From October 1, birth certificate to serve as single valid document for variety of purposes)...
புதிய விதி அமல்: இனி பிறப்புச் சான்றிதழ் ரொம்ப முக்கியம்...
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் 31-12-2024 வரை நீட்டிப்பு (For registration of child's name in birth certificate - Deadline extended till 31-12-2024)...
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு (2020 டிச. 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பிறப்புப் பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்து இலவசப் பிறப்புச் சான்றிதழ் பெற, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.
பிறப்புச் சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியைச் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்விதக் கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை, பதினைந்து வருடங்களுக்குள் உரிய கால தாமதக் கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம்.
திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி,
* 1.1.2000-க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டது.
* மேற்கண்ட கால அளவு முடிந்த பின்னும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசு ஆணை பிறப்பித்தது.
அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 31.12.2019 உடன் முடிந்த நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.
பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைந்திட,
* 1.1.2000-க்கு முன் பெயரின்றி பிறப்புப் பதிவு செய்யப்பட்ட பிறப்புகள்
* வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிந்த அனைத்துப் பிறப்புப் பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம்.
இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற்றிடுவீர்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
>>> பள்ளிகளில் இனி பெயருடன் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி...
பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை வழங்கினால் மட்டும் பள்ளிகளில் சேர்க்கை வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தையின் பெயரை, பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து, 12 மாதம் வரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். கடந்த, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் அனைத்திற்கும், 2024ஆம் ஆண்டு வரை, பெயருடன் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தவறும்பட்சத்தில் காலதாமத கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை, பெற்றோர் அல்லது காப்பாளரிடம் ஏற்படுத்துவது அவசியம். மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு. செய்தி வெளியீடு எண்: 944, நாள்: 10-12-2020...
>>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...