கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கேள்வி குறியாகும் சமச்சீர் கல்வி நோக்கம் !

சமச்சீர் கல்வி திட்டத்தில் புத்தகங்கள் குறைக்கப்பட்டாலும் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத் திட்டத்தில் மறைமுகமாக 20 புத்தகங்கள் வரை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், புத்தக சுமையை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வியின் நோக்கம் கேள்வி குறியாகியுள்ளது.
மாணவர்களின் உடல் மற்றும் மன அழுத்தம் குறையவும், தேர்வு பயத்திலிருந்து விடுபடவும், அவர்கள் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்ந்து முழுமையான ஆளுமை வளர்ச்சி பெறவும் இத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் எடையில் புத்தக சுமை என்பது 10 முதல் 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, பள்ளி நாட்களை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை முதல் பருவமாகவும், செப்., முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவமாகவும், ஜனவரி முதல் மார்ச் வரை மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பருவத்துக்கு உரிய பாடப் புத்தகங்களை மாணவர் படித்தாலே போதும். ஒரு பருவத்துக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே புத்தகமாகவும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஒரு புத்தகமாகவும், மொத்தம் 2 புத்தகங்கள் என சுருக்கப்பட்டன.

அரசு பள்ளிகளில் இது நடை முறைப்படுத்தப்பட்டாலும் தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இம்முறை பெயரளவுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டு வருகிறது.

குறைத்தும் குறையாத சுமைகள்: மதுரையில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 4ம் வகுப்பில் முதல் பருவத்துக்கான புத்தகம் தவிர மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர் விபரம்:

இங்கிலீஸ் கிராமர் அன்ட் காம்போஷிசன், கர்சிவ் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஸ், டிக்ஸ்டினரி அன்ட் அட்லஸ், தி கோல், தமிழ் எழுத்து பற்றிய நூல், பைந்தமிழ் பயிற்சி நூல், ஃபன் மென்டல் மேத்தமெட்டிக்ஸ், அபாகஸ் டேபில் புக்ஸ், மேப் டிராயிங், டெல் மி மோர், சிக்ஷா சுரபி, இந்தி ரைட்டிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், டிராயிங் புக்ஸ், இதிகாசங்கள் என... 20 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒருசில தனியார் பள்ளிகளின் இந்த தன்னிச்சை முடிவால் "சுமைதாங்கி' மாணவர்கள் இந்தாண்டும் வழங்கம் போல் "புத்தக மூட்டைகளை' சுமக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர் செந்தூரன் கூறியதாவது:

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி என்ற நோக்கத்தில் தான் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில் கூடுதலாக கற்றுத்தருகிறேன் என்று பெற்றோர்களை ஏமாற்றும் விதமாக இதுபோன்ற ஏராளமான புத்தகங்கள் வாங்க சொல்கின்றனர். இது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும். சமச்சீர் கல்வி முறை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுகிறதா என்பது குறித்து ஓய்வு பெற்ற கல்வியாளர் குழு அமைத்து கண்காணிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...