கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட நெட் தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 43,957 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜுன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வை, மொத்தம் 5,71,627 பேர் எழுதினர். அவர்களில் 43,957 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில், 3625 பேர், JRF(Junior research fellowship) எனப்படும் ஆராய்ச்சி உதவித்தொகை பெறும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
நெட் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்கள், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 65%
என்ற அளவிலும், OBC பிரிவு மாணவர்களுக்கு 60% என்ற அளவிலும், SC/ST மற்றும்
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 55% என்ற அளவிலும்
நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Answer keys மற்றும் கேள்வித் தாள்களை, தனது இணையதளத்தில், UGC,
பதிவேற்றியிருந்தது மற்றும் அதன்மூலம், தேர்வெழுதியவர்களின்
கருத்துக்களையும் கேட்டிருந்தது. தேர்வு முடிவுகளை இறுதி செய்யும் முன்பாக,
தேவையான சமயங்களில், Answer keys மறுஆய்வு செய்யப்பட்டு அப்டேட்
செய்யப்பட்டது.
கடந்த ஜுன் மாதம் முதற்கொண்டு, நெட் தேர்வானது, முழுவதும் Objective
type முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே
தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.