கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்:கரும்பலகை, சாக்பீஸ் முறைக்கு "குட்பை'

 
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்'(ஏ.ஐ.எப்) எனும் அமைப்பின் நிதியுதவியுடன், "டிஜிட்டல் ஈக்குவலைசர்' எனும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகளை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி., வசதியுள்ள இந்த வகுப்பறைகளில் "டெல்' மற்றும் ஏ.ஐ.எப். அமைப்பின் சார்பில் 25 கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், டிஜிட்டல் பிளாக்போர்டு, இன்டெர்நெட் இணைப்பு, புரொஜக்டர் உள்ளிட்ட வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறியதாவது: வருங்காலங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட நவீன உலகில், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து வெளியேறும் மாணவர்களும் நிலைத்து நிற்க, அவர்களுக்கும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப அறிவு முக்கியம். ஆறாம் வகுப்பு முதலே கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாடங்களை கற்பிப்பதுதான் ஸ்மார்ட் கிளாஸ் எனும் "கம்ப்யூட்டர் கிளப்' துவங்குவதன் நோக்கம். கிளப்பில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் அதிவேக இன்டர்நெட் இணைப்பு வசதியுடன்,"ஒயர்ப்ரீ' முறையில் ஆசிரியரின் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் தனது பாடத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒரு மணி நேரத்தை கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்க வேண்டும். பாடத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட "டிவிடி', ஏற்கனவே கம்ப்யூட்டர்களில் "லோடு' செய்யப்பட்டிருக்கும். பாடங்களை ஆசிரியர்கள் "தொடுதிரை டிஜிட்டல் ஒயிட் போர்டின்' உதவியுடன் விளக்குவர். அதே பாடங்கள் மாணவர்களின் கம்ப்யூட்டர்களிலும் இடம் பிடித்திருக்கும். மாணவர்களின் கம்ப்யூட்டர்கள், ஆசிரியர் வசமுள்ள கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்டர்நெட் இணைப்பை மாணவர்களால் தவறாக பயன்படுத்த முடியாது. இன்டெர்நெட் இணைப்பு உள்ளதால், பாடம் தொடர்பான தகவல்கள் மற்றும் படங்களை உடனுக்குடன் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். இதே வசதியுள்ள பிற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன், "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் பாடம் தொடர்பாக கலந்துரையாடலாம். வண்ணப் படங்கள் சகிதம் "விஷூவல்' ஆக பாடங்களை படிக்க முடிவதால், பாடத்தின் மையக்கருத்து எளிதில் மறக்காது.ஆசிரியர்களுக்கு 56 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கென ஒவ்வொரு கிளப்புக்கும் தனி ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவர். "சாக் அண்டு டாக்' எனும் பழைய கற்பித்தல் முறைக்கும், மனப்பாட கல்வி முறைக்கும் இனி "குட்பை' சொல்லி விடலாம். இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள பள்ளிகளிலும் துவங்கப்படும். 2014 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதன் பின் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Monthly Club Activities for the Year 2025-2026

2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாத வாரியான மன்றச் செயல்பாடுகள் - மகிழ் முற்றம் -  Magizh Mutram - Monthly Club Activities for the Academic Y...