கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வங்கிப் பணி: டிசம்பரில் பொது நுழைவுத்தேர்வு

இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 20 பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பதவிக்கான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (IBPS) சார்பில் நடத்தப்படும் இந்த எழுத்துத் தேர்வுக்கு www.ibps.in எனும் இணையதளத்தின் மூலமாக, நவம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் ஆன்லைன் வழியாக நடத்தப்பட உள்ளது. எழுத்தர் அல்லது வங்கி பணிகளில் பணி புரிய விரும்புபவர்கள் இந்த தேர்வினை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும். தேர்வினைத் தொடர்ந்து பொது நேர்முகத் தேர்வு IBPS ஆல் நடத்தப்படும். எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதத்தினை டிசம்பர் 3ம் தேதி இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.ibps.in எனும் இணையதளத்தினை அணுகலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 - OoSC Survey - SPD Proceedings

  2025-2026ஆம் ஆண்டு - பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு OoSC Survey - இடைநிற்றல் (Dropouts) மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குற...