தமிழகத்தில், பிற்படுத்தப்பட்ட கல்லூரி, பள்ளி, பாலிடெக்னிக் மாணவ,
மாணவியருக்கு, 6.16 கோடி ரூபாயில், 28 விடுதிகள் கட்டவும், 103
விடுதிகளில், சூரிய சக்தி மின் அமைப்பு அமைக்கவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு : மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களில், எட்டு கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் விடுதிகள், என 16 விடுதிகள், 3.57 கோடி ரூபாயில் கட்டப்படும். இந்த விடுதிகளில், காப்பாளர், சமையலர் என, 64 பணியிடங்கள் மற்றும், 16 காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
திருச்சியில் நாவலூர் குட்டப்பட்டு, தேனியில் போடி நாயக்கனூர், காஞ்சிபுரத்தில் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில், பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதிகள் உருவாகும்.ஐந்து மாவட்டங்களில், பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர் விடுதிகள், தூத்துக்குடி பெரியசாமி புரத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவியர் விடுதியும் கட்டப்படுகிறது. மேலும், சிறுபான்மையினர் கல்லூரி மாணவியருக்காக, 12 விடுதிகள் அமைக்கப்படும். இவ்விடுதிகளில் பணியாற்ற, காப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்கள், காவலர் பணியிடங்கள் என, 48 பணியிடங்கள் உருவாக்கவும், 12 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்விடுதிகளில் மின் சிக்கனத்திற்காக, சூரிய சக்தி உபகரணங்கள் அமைக்க, விடுதிக்கு, 2.25 லட்சம் ரூபாய் வீதம், 103 விடுதிகளுக்கு, 2.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.